Just In
- 3 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 4 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 4 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 5 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- News
கார்ப்பரேட் நலனுக்காக மட்டுமே தயாரித்த பட்ஜெட்.. மக்களுக்கான திட்டம் இல்லை.. சிபிஐஎம் குற்றச்சாட்டு!
- Movies
கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது... பிக் பாஸ் அசீமை நேரடியாக அட்டாக் செய்த மகேஸ்வரி
- Sports
54 பந்துகளில் சுப்மன் கில் சதம்.. நியூசி. பந்துவீச்சை சிதறடித்த இந்தியா.. இமாலய இலக்கு நிர்ணயம்
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!
நம்மில் பலரும் இன்னும் குழந்தை தான். நமக்கு எப்போது பசிக்கும் என்று நமக்கே தெரியாது; அந்த நேரத்தில், எப்படியாவது கொஞ்சம் சாப்பிட்டு விட மாட்டோமா? என்று ஏங்குவோம்.
குறிப்பாக IRCTC ரயில் பயணத்தின் போது.. எவ்வளவுநொறுக்கு தீனிகளை தின்றாலும் கூட பசி அடங்கவே அடங்காது!

அடுத்த முறை இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது?
IRCTC வழங்கும் உணவு விநியோகச் சேவையான Zoop-ஐ பயன்படுத்தி உங்கள் பசியை ஆற்றிக்கொள்ளுங்கள்!
Jio Haptik Technologies உடன் இணைந்து வாட்ஸ்அப் வழியாக அணுக கிடைக்கும் இந்த "ரயில்வழி பயண ஆன்லைன் உணவு விநியோக சேவை" ஆனது ஸ்விக்கி, ஜோமோட்டோ போன்ற ஆப்களை போலவே தான் - மிகவும் எளிமையாக வேலை செய்யும்; அதுவும் பிரத்யேக ஆப் எதுவும் இல்லாமல்!

WhatsApp இருந்தால் மட்டும் போதும்!
அட ஆமாங்க! +91 7042062070 என்கிற மொபைல் நம்பரை பயன்படுத்தி, வாட்ஸ்அப் வழியாக நீங்கள் Zoop-ஐ அணுகலாம்; விருப்பமான உணவை ஆர்டர் செய்யலாம்; அடுத்த ரயில் நிலையத்தில் அதை வாங்கி பசியாற சாப்பிடலாம்!
மேற்குறிப்பிட்ட நம்பர், Zoop நிறுவனத்தின் வாட்ஸ்அப் சாட்பாட் இயங்குதளம் ஆகும். இதன் கீழ் நெட்வொர்க் கனெக்ஷன் தொடர்பான சிக்கல்கள் இருக்காது மற்றும் ரயிலில் பயணிக்கும் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதும் உறுதி செய்யப்படும்!

சரி வாருங்கள் Zoop மூலம், WhatsApp வழியாக Food Order செய்வது எப்படி என்று பார்க்கலாம்?
1. முதலில் (+91) 7042062070 என்கிற மொபைல் நம்பரை உங்கள் போனில் Save செய்யவும் (ஒருவேளை நீங்கள் இந்த எண்ணை 'சேமிக்க' விரும்பவில்லை என்றால், https://wa.me/917042062070 என்கிற இணைப்பின் வழியாகவும் உணவை ஆர்டர் செய்யலாம்).
2. மேலே குறிப்பிட்டுள்ள மொபைல் நம்பரை 'சேவ்' செய்த பிறகு, அந்த நம்பருக்கு WhatsApp வழியாக "Hi" என்று ஒரு டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பவும்.
3. இப்போது உங்களுக்கு View Options என்கிற விருப்பத்துடன் கூடிய ஒரு ஆட்டோமேடட் டெக்ஸ்ட் (Automated text) மெசேஜ், ரிப்ளையாக கிடைக்கும். அதில் உள்ள வியூ ஆப்ஷன்ஸ் என்பதை கிளிக் செய்யவும்!

பிஎன்ஆர் நம்பர் இருக்கிறதா?
4. இப்போது கீழ்தோன்றும் மெனுவிலிருந்து Order food (ஆர்டர் ஃபுட்) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5 .இப்போது மீண்டும் ஒரு ஆட்டோமேடட் டெக்ஸ்ட் ரிப்ளை கிடைக்கும். அது உங்களிடம் PNR நம்பர் இருக்கிறதா? என்று கேட்கும்; உடன் ஆம் என்னிடம் நம்பர் இருக்கிறது, Search by train மற்றும் Search by station என்கிற விருப்பங்களையும் வழங்கும். அதில் Yes, I have my PNR number என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
6. பிறகு உங்களின் 10 இலக்க PNR எண்ணை உள்ளிடவும். நீங்கள் அளிக்கும் PNR நம்பர் மிக மிக முக்கியம். ஏனெனில் அதைக்கொண்டு தன குறிப்பிட்ட ரயிலில், துல்லியமாக எந்த இருக்கையில் அல்லது எந்த பெர்த்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது கண்டுபிடிக்கப்படும்.

ரயில் நிலையத்தை தேர்வு செய்யவும்!
7. இப்போது நீங்கள் கொடுத்த விவரங்களை சரிபார்க்கவும்.
8. பின்னர் வரவிருக்கும் எந்த ரயில் நிலையத்தில் உங்கள் ஆர்டரை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று தேர்வு செய்யவும்.
9. இப்போது எந்த உணவகத்தில் ஆர்டர் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்.

கேஷ்-ஆ? ஆன்லைன்-ஆ?
10. பிறகு அனுக கிடைக்கும் மெனுவிலிருந்து நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் உணவை தேர்ந்தெடுத்து, அதை உங்கள் Cart-இல் சேர்க்கவும்.
11. கேஷ் ஆக கொடுக்க போகிறீர்களா? அல்லது ஆன்லைன் பேமண்ட்-ஆ? என்பதை தேர்ந்தெடுக்கவும்.
12. நீங்கள் கேஷ்-ஐ தேர்வுசெய்தால், கூடுதலாக சில விவரங்கள் சரிபார்க்கப்படும். ஒருவேளை நீங்கள் ஆன்லைன் வழியிலான கட்டண முறையைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய பல்வேறு பேமண்ட் விருப்பங்கள் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

அவ்ளோதான்!
13. இப்போது உங்கள் ஆர்டர் உறுதி செய்யப்படும். உடன் ஆர்டர் நம்பர், உணவகத்தின் பெயர், டெலிவரி செய்யப்பட உள்ள இரயில் நிலையத்தின் பெயர், தேதி, நேரம் போன்ற அனைத்து விவரங்களுமே உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்;
அவ்வளவு தான்.. சாப்பிட தயாராக இருங்க!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470