பஸ்ஸ விடுங்க மக்களே ரயில் கனெக்ட் ஆப் இருக்கு பக்காவா ஊருக்கு டிக்கெட் செய்து போகலாம்.!

முதல் முறை இந்த செயலியைப் பயன்படுத்தும் போது பின் நம்பர் கொடுத்து உபயோகப்படுத்த வேண்டும்.

By Prakash
|

தற்சமயம் பேருந்து கட்டணம் உயர்வைத் தொடர்ந்து ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு முன்கூட்டியே தெரிவிக்காமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனை தொடர்ந்து கட்டண உயர்வை கண்டித்து பொது மக்களும், மாணவர்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றர்.

ரயில் கனெக்ட் ஆப் இருக்கு பக்காவா ஊருக்கு டிக்கெட் செய்து போகலாம்.!

இப்போது ரயில் கனெக்ட் செயலி மூலம் மிக எளிமையாக டிக்கெட் புக் செய்ய முடியும் இந்த செயலியில் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த செயலியை மிக எளிமையாக ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஐஆர்சிடிசி என டைப் செய்ய வேண்டும், அதன்பின்பு புதிய ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் எனும் செயலியை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அதன்பின்பு நீங்கள் தேர்வுசெய்த ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

நீங்கள் இன்ஸ்டால் செய்த ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் செயலியில் மூன்று விருப்பங்கள் இருக்கும், அவற்றில் ரயில் டிக்கெட், மீல்ஸ் புக்கிங், ஏர் டிக்கெட் போன்றவிருப்பத்தில் நீங்கள் ரயில் டிக்கெட் எனும் வருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அடுத்து நீங்கள் ஐஆர்சிடிசி-ல் பதிவு செய்த ஐடி மற்றும் கடவுசொல்லை இந்த செயலியில் பதிவிட வேண்டும். இல்லையென்றால் இந்த செயலி மூலம் மிக எளிமையாக ஐஆர்சிடிசி-கணக்கை உருவாக்க முடியும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

முதல் முறை இந்த செயலியைப் பயன்படுத்தும் போது பின் நம்பர் கொடுத்து உபயோகப்படுத்த வேண்டும், பின்வரும் காலங்களில் இந்த பின் நம்பர் வைத்தே மிக எளிமையாக பயன்படுத்த முடியும், ஐடி மற்றும் கடவுசொல் போன்றவை தேவையில்லை.

வழிமுறை-6:

வழிமுறை-6:

அதன்பின்பு இந்த செயலியில் பயனர்களுக்கு தேவையான ரயில் விருப்பம், தேதி, நேரம், பயனர்களின் பெயர், மொபைல் எண் மற்றும் முழுத் தகவல்கள் போன்றவற்றை கொடுத்து ரயில் டிக்கெட் புக் செய்ய முடியும்.

 வழிமுறை-7:

வழிமுறை-7:

இந்த செயலியில் தட்கல் டிக்கெட் மிக எளிமையாக புக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
IRCTC Rail connect partner for ticket bookings ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X