Home
How to

IRCTC பாஸ்வேர்ட் மறந்து போச்சா? உடனே இதை பண்ணிடுங்க.. அப்புறம் சிக்கல்தான்.. ஆன்லைனில் ரீசெட் செய்வது எப்படி?

ஐஆர்சிடிசி (IRCTC) தளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்ய முயற்சிக்கும்போது, சில நேரங்களில் பாஸ்வேர்ட்டை (Password) மறந்துபோனால், உங்களால் புக்கிங் செய்ய முடியாமல் போகலாம். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்டப்பட்ட உங்களது பயணம் தடைபடவும் வாய்ப்புள்ளது. ஆகவே, ஐஆர்சிடிசி பாஸ்வேர்ட்டை நீங்கள் மறந்தாலும், அதை ரிகவர் செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதை முழுக்க முழு ஆன்லைனில் செய்ய கொள்ள முடியும்.

என்னதான் சொகுசு பேருந்து, டிஸ்கவுண்ட் விமான பயணம் என்று இருந்தாலும் மக்களோடு மக்களாக ரயிலில் பயணம் செய்வது பலருக்கு பிடித்தமானதாக இருக்கும். அதே நேரத்தில் பயண செலவும் ரயிலில் செல்லும்போது மிகவும் கம்மியாக இருக்கும். இதனாலேயே கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

IRCTC பாஸ்வேர்ட் மறந்து போச்சா? உடனே இதை பண்ணிடுங்க! அப்புறம் சிக்கல்!

ஆனால், முன்புபோல ரயில் நிலையத்துக்கு சென்று டிக்கெட் வாங்கும் பழக்கமும் இப்போது பெரிதாக இல்லை. ஆன்லைனில் வீட்டில் இருந்து புக்கிங் செய்யும் வழக்கத்துக்கு வந்துவிட்டோம். இதனால், குறிப்பிட்ட தேதியில் எந்த ரயில் இருக்கிறது? அதில் எந்த பெட்டில் டிக்கெட் மிஞ்சம் இருக்கிறது? என்பதை ஆன்லைனில் பார்த்தே புக்கிங் செய்ய முடிகிறது.

இதற்கு ஏற்ப தொழில்நுட்ப சிக்கல்களும் இருக்கின்றன. அதாவது, ரயில் டிக்கெட் புக்கிங் என்றாலே பலரும் பயன்படுத்துவது ஐஆர்சிடிசி வெப்சைட் (IRCTC Website) அல்லது ஐஆர்சிடிசி ஆப் (IRCTC App) ஆக மட்டுமே இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் டிக்கெட் வேண்டும் என்று அவசரத்தில் புக்கிங் செய்யும்போது, பாஸ்வேர்ட் மறந்துபோனால், புக்கிங் செய்ய முடியாது.

இதனால், குறிப்பிட்ட தேதிக்கான உங்களது பயணமும் சிக்கலில் முடியலாம். ஆகவே, ஆன்லைன் மூலம் மறந்துபோன உங்களது ஐஆர்சிடிசி பாஸ்வேர்ட்டை எப்படி ரீசெட் செய்வது என்பதை இப்போது ஸ்டெப் பை ஸ்டெப்பாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு முதலில் ஐஆர்சிடிசி வெப்சைட்டுக்கு சென்று கொள்ளுங்கள். எந்த பிரவுசர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஐஆர்சிடிசி பாஸ்வேர்ட் ரீசெட் அல்லது ரிகவரி:
ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான (www.irctc.co.in) செல்லுங்கள். வெப்சைட்டின் வலது பக்கத்துக்கு மேலே லாகின் (Login) டேப் தோன்றும். அது ப்ளூ கலரில் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, பயனர் பெயர் (User Name) மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.

அந்த டேப்களுக்கு கீழே அக்கவுண்ட் விவரங்களை மறந்துவிட்டீர்களா (Forgot Account Details) என்னும் டேப் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது ஐஆர்சிடிசி பயனர் பெயர் (IRCTC Username) அல்லது உங்களது பதிவு செய்யப்பட்ட ஈமெயில் ஐடி (Registered Email ID) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அதில் டைப் செய்து கொள்ளுங்கள்.

இதையடுத்து அதற்கு கீழே இருக்கும் பாக்ஸில் கேப்ட்ச்சா (Captcha) கொடுக்க வேண்டும். இந்த கேப்ட்ச்சா அந்த பாக்ஸின் கீழே ப்ளூ கலரில் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும். அதை அப்படியே அதில் டைப் செய்யுங்கள். இந்த 2 விவரங்களையும் கொடுத்துவிட்டது, அடுத்து (Next) டேப்-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இப்போது, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடிக்கு ஓடிபி (OTP) அனுப்பி வைக்கப்படும். இதை கொடுத்துவிட்டால், உங்களுக்கு புதிய பாஸ்வேர்ட் (New Password) மாற்றும் பக்கம் தோன்றும். இதில் 2 முறை பாஸ்வேர்ட்டை கொடுக்கும்படி இருக்கும். அதோடு கேப்ச்சா இருக்கும். அதையும் கொடுத்துவிடுங்கள்.

இப்போது, அப்டேட் பாஸ்வேர்ட் டேப்-ஐ கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான் உங்களது பாஸ்வேர்ட் புதிதாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த பாஸ்வேர்ட்டை நினைவில் வைத்து கொள்ளுங்கள் அல்லது பத்திரமாக எங்காவது எழுதி வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால், மீண்டும் மாற்றும்படி வரும். ஆன்லைனில் இதை சில நிமிடங்களில் செய்து முடிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
IRCTC Password Recovery Online What to Do When You Forget Your Password
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X