Home
How to

மினிமம் பேலன்ஸ்.. Google Pay, PhonePe, Paytm பேமெண்ட்.. கிரெடிட் கார்ட் வழியாக UPI பரிவர்த்தனை.. இதை பண்ணுங்க!

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) பரிவர்த்தனைகளை செய்யும் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களும் மினிமம் பேலன்ஸ் போகுதே என்று கவலைப்பட வேண்டாம். கிரெடிட் கார்டு இருந்தால் போதும், அதை வைத்து யுபிஐ பேமெண்ட்களை செய்து கொள்ளலாம். இதை எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பேங்க் கஸ்டமர்கள் மினிமம் பேலன்ஸ் போகும் வரையில் பரிவர்த்தனைகள் செய்வது வழக்கமாக மாறிவிட்டது. இதனால், அதற்கான பெனால்டியை செலுத்த வேண்டி இருக்கிறது. இதுபோக கிரெடிட் கார்டு பில்களும் இருக்கிறது. ஆனால், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் கிரெடிட் கார்டை சேர்ந்துவிட்டால், ஒரே பில்லாக வந்துவிடும்.

மினிமம் பேலன்ஸ்.. Google Pay, PhonePe, Paytm பேமெண்ட்.. இத செய்ங்க!

யுபிஐ ஆப்களின் கிரெடிட் கார்டை இணைப்பது எப்படி?

கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் போன்ற யுபிஐ ஆப்களில் கிரெடிட் கார்டுகளை இணைக்க முடியும். இந்த ஆப்கள் ஒரே மாதிரியான செயல்முறைகளையே கொடுக்கின்றன. ஆகவே, வழக்கம்போல செட்டிங்ஸ் செல்ல வேண்டும். பிறகு கார்டுகளுக்கு (Cards) செல்ல வேண்டும். பிறகு கிரெடிட் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும்.

இதில் கிரெடிட் கார்டு நம்பர் (Credit Card Number), சிவிவி (CVV) நம்பர் மற்றும் காலாவதி தேதி மற்றும் வருடம் (Expiry Date) உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இதை கொடுத்துவிட்டால் போதும், வெரிபிகேஷன் இருக்கும். அதாவது, ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு வெரிபிகேஷன் செய்யப்படும். இதை செய்தால் முடிந்துவிட்டது, யுபிஐ பேமெண்ட்களை செய்து கொள்ளலாம்.

கூகுள் பே ஆப்பில் கார்டை இணைப்பது எப்படி?

1. கூகுள் பே ஆப்பில் கிரெடிட் கார்டை எப்படி இணைப்பது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதே போலத்தான் மற்ற யுபிஐ ஆப்களிலும் செயல்முறை இருக்கும். முதலில் கூகுள் பே ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். ஹோம் பேஜ்ஜில் டேப் & பே (Tap & Pay) விருப்பம் இருக்கும். இந்த விருப்பம் வழியாக கிரெடிட் கார்டை ஆட் செய்யலாம்.

2. இதற்கு என்எப்சி (NFC) சப்போர்ட் கிடைக்கும். அதாவது, கிரெடிட் கார்டை வைத்து டேப் & பே செய்வதை போல, இதிலும் செய்து கொள்ளலாம். இந்த டேப் & பே விருப்பத்தை கிளிக் செய்த பிறகு கீழே கார்டு (Card) விருப்பம் தோன்றும். இதை கிளிக் செய்தால், மேலே சொன்னதை போல கிரெடிட் கார்டு நம்பர், சிவிவி மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங்கள் கேட்கப்படும்.

3. இந்த விவரங்களை கொடுத்துவிட்டு, ஓடிபி வெரிபிகேஷனை செய்து முடியுங்கள். அவ்வளவுதான். கிரெடிட் கார்டு வழியாக யுபிஐ பேமெண்ட்களை செய்து கொள்ளலாம். உங்களது பேங்க் அக்கவுண்ட்டுடன் யுபிஐ ஐடி இணைக்கப்பட்டதை போல, இதில் கிரெடிட் கார்டுடன் யுபிஐ ஐடி இணைக்கப்பட்டுவிடும். பேங்க் பேலன்ஸ் இல்லாத நேரத்தில் இதில் பேமெண்ட் செய்யலாம்.

4. இதில் விசா கார்டு, மாஸ்டர் கார்டு மற்றும் ரூபே கார்டு ஆகியவற்றை இணைக்க முடியும். அதேபோல கிரெட் கார்டுகள் வழியாக செய்யப்படும் ஒட்டுமொத்த பேமெண்ட்களையும் இதிலும் செய்து கொள்ளலாம். ஆன்லைன் பேமெண்ட்கள், டேப் & பே பேமெண்ட்கள் உள்ளிட்டவைக்கும் இந்த பொருந்தும். கூகுள் பே போலவே பேடிஎம், போன்பேவிலும் இதே செயல்முறை இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Insufficient Bank Balance Google Pay PhonePe Paytm Users Make Payment From Credit Card How to Pay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X