5 வழிமுறைகளில் இன்டர்நெட் வேகத்தை 30% வரை அதிகரிக்க எளிமையான தந்திரம்!

ஓப்பன் டிஎன்எஸ் மற்றும் கூகுள் டிஎன்எஸ் மூலம் என இரண்டு வழிமுறைகளில் இதை நிகழ்த்தலாம்.

|

உங்களின் மிக வேகமாக உலாவலுக்கும் மற்றும் பதிவிறக்கத்திற்கும் உதவும் இரண்டு வகையாக டின்என்எஸ் ஹேக் முறைகளை இங்கு வழங்கவுள்ளோம். பின்வரும் எளிமையான வழிமுறைகள் உங்கள் இணைய வேகத்தை 20 முதல் 30% அதிகரிக்க அனுமதிக்கின்றன, உடன் இது முற்றிலும் வேலை செய்யும் ஒரு முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் இயல்புநிலை டிஎன்எஸ் (DNS)-ஐ Gகூகுள் டிஎன்எஸ்-க்கு மாற்றியமைப்பதன் மூலம் நீங்கள் ஒரு தொழில்நுட்ப ஆர்வலராக இல்லாவிட்டாலும், உங்களுக்கான இணைய வேக மாற்றத்தை எளிதாக்கும் வண்ணம் படி படிப்படியாக இங்கு தொகுக்கப்பட்டுள்ள வழிகாட்டி உங்களுக்கு நிச்சயம் உதவும்.

டிஎன்எஸ் (DNS) என்றால் என்ன.?

டிஎன்எஸ் (DNS) என்றால் என்ன.?

டொமைன் பெயர் சேவையகம் அதாவது டொமைன் நேம் சர்வீஸ் என்று அர்த்தப்படும். இந்த ப்ரோட்டோகால் ஆனது ஐபி விலாசத்தை டொமைன் முகவரியாக மாற்றியமைக்கும் மற்றும் அதற்கு நேர்மாறாகவும் மாற்றும். ஒரு நெறிமுறையாகும்.

ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு முறையும்

உங்களுக்குப் பிடித்த தளத்தின் பெயருக்கு பதிலாக அதன் ஒவ்வொரு சரியான இலக்கங்களையும் நினைவில் வைத்துக்கொண்டதாக நினைத்துக்கொள்ளுங்களேன். அப்படியாக இந்த டிஎன்எஸ் ஆனது இலக்கங்களை மனித ரீதியாக வாசிக்கக்கூடிய அகரவரிசை மொழிகளாக மொழிபெயர்க்கிறது. ஒவ்வொரு முறையும் "யூட்யூப்" நீங்கள் என்று யூஆர்எல் முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்யும் போது பின்தளத்தில், அந்த குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் இணைக்ப்படும் நோக்கத்தில் யூட்யூப்-க்கான பொருத்தமான ஐபி முகவரியை டிஎன்எஸ் பெறுகிறது.

மாற்று டிஎன்எஸ் சேவைகள்

மாற்று டிஎன்எஸ் சேவைகள்

சில நேரங்களில் உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் வேலையை உங்களின் இணைய சேவை வழங்குநர் (ISP) மட்டுமே முழுமையாக கவனிப்பது இல்லை. இந்த இடத்தில உங்களின் டிஎன்எஸ் சேவையானது மாற்றப்பட வேண்டும் என்று அர்த்தம்.

விளக்கப்படங்களுடனான வழிமுறை

விளக்கப்படங்களுடனான வழிமுறை

அப்படியாக, உங்கள் ஐஎஸ்பி மூலம் உங்கள் இயல்புநிலை டிஎன்எஸ்-ஐ மாற்றியமைப்பது எப்படி என்பதை பற்றிய எளிமையான விளக்கப்படங்களுடனான வழிமுறைகளை தான் இங்கு தொகுத்துள்ளோம். இது நிச்சயமாக உங்களின் இணையத்தின் வேகத்தை மேம்படுத்துவதற்கு உதவும்.

ஓப்பன் டிஎன்எஸ்

ஓப்பன் டிஎன்எஸ்

வாடிக்கையாளர்கள் (லேப்டாப் / கம்ப்யூட்டர் பயனர்கள்) தங்கள் இலவச டிஎன்எஸ் சேவையுடன் மகிழ்ச்சியாக இல்லாத பட்சத்தில் இலவச டிஎன்எஸ் சேவைகள் கிடைக்கும். அப்படியான மிகவும் பிரபலமான மாற்று இலவச டிஎன்எஸ் சேவைகளில் - ஓப்பன் டிஎன்எஸ் (OpenDNS) ஒன்றாகும். இந்த இலவச ஓப்பன் டிஎன்எஸ்-ஐ என்கேஜ் செய்ய கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

வழிமுறை #01

வழிமுறை #01

கண்ட்ரோல் பேனல் > நெட்வொர்க் அண்ட் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் என்பதுள் நுழையவும்

வழிமுறை #02

வழிமுறை #02

இப்போது "சேன்ஜ் அடாப்டர் செட்டிங்ஸ்" என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

தற்போது நீங்கள் இணைக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை கிளிக்செய்து பின் அந்த நெட்வொர்க்கின் ப்ராபர்டீஸ் தனை கிளிக் செய்யவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

இப்போது உங்கள் திரையின் இடது பக்கத்தில் சூஸ் > இன்டர்நெட் ப்ரோட்டோகால் வெர்ஷன் 4 (டிசிபி / ஐபிவி4) [Choose > Internet Protocol Version 4 (TCP/IPv4)] தேர்வு செய்யவும் மற்றும் ப்ராபர்டீஸ் சென்று சூஸ் > யூஸ் பாலோயிங் டிஎன்எஸ் சர்வீஸ் அட்ரெஸ்ஸஸ் [Properties > Use Following DNS Server Addresses] என்பதை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை குறிப்பிட்ட டாப்களில் டைப் செய்யவும்.

*Preferred DNS server: 208.67.222.222
*Alternate DNS server: 208.67.220.220

வழிமுறை #05

வழிமுறை #05

இப்போது ஓகே கிளிக் செய்யவும், இப்போது நீங்கள் ஐபிவி4-ஐ கட்டமைத்து விட்டீர்கள். தொடர்ந்து கான்பிகர் > இன்டர்நெட் ப்ரோட்டோகால் வெர்ஷன் 6 [configure > Internet Protocol Version 6 (TCP/IPv6)] சென்று கீழே அளிக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான டாப்பில் பூர்த்தி செய்யவும்.

*Preferred DNS server: 2620:0:ccc::2
*Alternate DNS server: 2620:0:ccd::2

வேகமாக இருக்கும்

வேகமாக இருக்கும்

ஒருமுறை புதிய டிஎன்எஸ் சர்வீஸ் ஐபி முகவரிகளை கட்டமைத்ததும் உங்கள் செட்டிங்க்ஸை சேவ் செய்து கொள்ளவும். இப்போது நீங்கள் இயல்புநிலை டிஎன்எஸ் சேவையை விட வேகமாக இருக்கும் டிஎன்எஸ் சேவையகங்களைப் பயன்படுத்துகிறீர்கள். அவ்வளவு தான், உங்கள் இணைய வேகம் இலவசமாக அதிக வேகத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

சரி இப்போது விண்டோஸ் கம்ப்யூட்டரில் கூகுள் டிஎன்எஸ்-ஐ எப்படி கைமுறையாக அமைப்பது.?

சரி இப்போது விண்டோஸ் கம்ப்யூட்டரில் கூகுள் டிஎன்எஸ்-ஐ எப்படி கைமுறையாக அமைப்பது.?

இலவசமான ஓப்பன் டிஎன்எஸ்-க்கு பதிலாக, நீங்கள் கூகுள் டிஎன்எஸ்-ஐ ஒரு மாற்றாகப் பயன்படுத்தவும் செய்யலாம். இது மிகவும் எளிமையானது மற்றும் மேலே உள்ளதைப் போலவே சேவையகங்களுக்கான முகவரி மட்டுமே இதில் வேறுபட்டிருக்கும். இருப்பினும், உங்களுக்காக படிப்படியாக வழிமுறைகளை தொகுத்துள்ளோம்.

வழிமுறை #01

வழிமுறை #01

கண்ட்ரோல் பேனல் > நெட்வொர்க் அண்ட் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் என்பதுள் நுழையவும்

வழிமுறை #02

வழிமுறை #02

இப்போது "சேன்ஜ் அடாப்டர் செட்டிங்ஸ்" என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

தற்போது நீங்கள் இணைக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை கிளிக்செய்து பின் அந்த நெட்வொர்க்கின் ப்ராபர்டீஸ் தனை கிளிக் செய்யவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

இப்போது உங்கள் திரையின் இடது பக்கத்தில் சூஸ் > இன்டர்நெட் ப்ரோட்டோகால் வெர்ஷன் 4 (டிசிபி / ஐபிவி4) [Choose > Internet Protocol Version 4 (TCP/IPv4)] தேர்வு செய்யவும் மற்றும் ப்ராபர்டீஸ் சென்று சூஸ் > யூஸ் பாலோயிங் டிஎன்எஸ் சர்வீஸ் அட்ரெஸ்ஸஸ் [Properties > Use Following DNS Server Addresses] என்பதை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை குறிப்பிட்ட டாப்களில் டைப் செய்யவும்.

*Preferred DNS server: 8.8.8.8

வழிமுறை #05

வழிமுறை #05

இப்போது ஓகே கிளிக் செய்து பின்னர் உங்கள் நெட்வொர்க்கை ரீஸ்டார்ட் செய்யவும். அவ்வளவுதான் இப்போது உங்கள் டிஎன்எஸ் சேவையகம் வேகமான உலாவல் மற்றும் பதிவிறகங்களை வழங்கும். மகிழுங்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Increase Your Internet Speed By 30% With This DNS Hack. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X