Just In
- 21 min ago
நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!
- 56 min ago
இதே வேலையா போச்சு: ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய Airtel.! கடுப்பில் பயனர்கள்!
- 1 hr ago
டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!
- 2 hrs ago
56 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
Don't Miss
- News
அதெப்படி ஒரு டாக்குமெண்ட்ரியால் நாட்டின் இறையாண்மை பாதிக்கும்? ஏகே அந்தோணி மகனுக்கு சசி தரூர் கேள்வி
- Finance
கடன் நெருக்கடி, உணவு பற்றாக்குறை, மின்சார தடை.. பாகிஸ்தானை வாட்டி வதைக்கும் பிரச்சனைகள்..!
- Sports
கொஞ்சமாச்சும் மனசாட்சியுடன் நடந்துக்குங்க.. 3 ஆண்டுகள்னு எப்படி போடலாம்.. ஸ்டார் மீது ரோகித் தாக்கு
- Lifestyle
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- Movies
ராஷ்மிகா மந்தனா, ராதிகா உடன் வாரிசு சக்சஸ் பார்ட்டி.. வெறித்தனம் காட்டும் தளபதி 67 லுக்கில் விஜய்!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!
5ஜி சேவைக்கான காத்திருப்பு முடிந்தது. இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய முதல் டெலிகாம் நிறுவனம் என்கிற பெருமையை பார்தி ஏர்டெல் பெற்றுள்ளது.
இந்நிறுவனம் 8 நகரங்களில் தனது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது; வரும் மாதங்களில் இது பல நகரங்களுக்கும் நீடிக்கப்பட உள்ளது.

சைலன்ட் ஆக காத்திருக்கும்.. முகேஷ் அம்பானி!
மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது வருகிற தீபாவளி பண்டிகை காலத்தின் போது அதன் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
மற்றொரு இந்திய டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியா, அதன் 5ஜி அறிமுகம் குறித்து எந்த காலக்கெடுவையும் வழங்கவில்லை; ஆனால் 5ஜி அறிமுகத்திற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறது!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க..?
டெலிகாம் நிறுவனங்களின் 5ஜி அறிமுகங்கள் ஒருபக்கம் இருக்க, மறுகையில், முன்னெப்போதும் இல்லாத அளவில், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!
ஒருவேளை நீங்களொரு 4ஜி மொபைல் யூசர் என்றால், அதாவது நீங்கள் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அல்லது திட்டத்தில் இருந்தால்.. ஒரு 5ஜி போனை வாங்கும் போது.. நீங்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கியமான விடயங்கள் இதோ!

01. 5G சிப்செட் இருந்தால் மட்டுமே போதாது!
நீங்கள் வாங்கும் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சிப்செட் இருந்தால் மட்டுமே, அது "முழுமையான" 5ஜி போன் ஆகிவிடும் என்று அர்த்தம் அல்ல.
அந்த சிப் மற்றும் போன் ஆனது mmWave மற்றும் sub-6GHz ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறதா என்பதை நீங்கள் சரி பார்க்க வேண்டும்.
ஏனென்றால்.. mmWave 5G பேண்ட்ஸ் ஆனது சிறந்த 5G வேகத்தை வழங்கக்கூடியவை. sub-6GHz பேண்ட்ஸ் ஆனது 4G-ஐ விட சிறந்த வேகத்தை வழங்குகின்றன; மேலும் இது கவரேஜ் தொடர்பான விஷயங்களிலும் திறமையாக செயல்படும்.

02. பேண்ட்களின் எண்ணிக்கையும் முக்கியம்!
நீங்கள் வாங்கும் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனில் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் - 5ஜி பேண்ட்களுடன் தொடர்புடையது.
உங்களை அதிகம் குழப்பாமல், எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 11 5ஜி பேண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பேண்ட்களை ஆதரிக்கும் ஒரு மாடலை வாங்கவும்.

03. லேட்டஸ்ட் 5G போன்களை வாங்கலாமா.. சற்றே பழைய மாடல்களை வாங்கலாமா?
புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் போது நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு "தந்திரம்" என்னவென்றால், சற்றே பழைய 5ஜி ஸ்மார்ட்போன்களை விட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பதே ஆகும்.
ஏனென்றால் - செயல்திறன், 5ஜி வேகம் மற்றும் கவரேஜில் நல்ல முன்னேற்றங்களை காணலாம். பழைய 5ஜி போன்கள் கவர்ச்சிகரமான விலையின் கீழ் உங்களை வாங்கத் தூண்டலாம், ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளவும், அவைகள் "வரையறுக்கப்பட்ட" 5ஜி சேவையை வழங்கலாம்.

04. 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் - மிகவும் முக்கியம்; ஏனென்றால்?
இண்டர்நெட் ஸ்பீட் என்று வரும்போது 5ஜி மிகப்பெரிய முன்னேற்றத்தை வழங்கும். அதே சமயம், அதிக மின் நுகர்வுக்கு வழிவகுக்கும் சில வன்பொருள் ஆதரவும் அதற்கு தேவை!
எனவே, எப்போதும் பெரிய அளவிலான பேட்டரி திறனை வழங்கும் 5ஜி போனை வாங்கவும்.

பெரிய பேட்டரி என்றால்.. எவ்வளவு பெரியது?
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், 6.5 இன்ச் அல்லது அதை விட பெரிய டிஸ்பிளே கொண்ட போனை வாங்கினால் - அதில் 5000எம்ஏஎச் பேட்டரி கட்டாயமாக இருக்க வேண்டும்.
ஒருவேளை சற்றே சிறிய டிஸ்பிளே இருந்தால், 4500mAh அல்லது அதை விட சற்றே பெரிய பேட்டரி போதுமானதாக இருக்கும்.
ஆனால் ஐபோன்களில்.. இந்த கதை முற்றிலும் மாறுபடும். ஐபோன் 13 சீரிஸ் அல்லது ஐபோன் 14 சீரிஸ் போன்ற புதிய மாடல்கள் சிறந்த பேட்டரி செயல்திறனை கொண்டுள்ளன, மேலும் பழைய மாடல்களுடன் ஒப்பிடும்போது நல்ல பேட்டரி ;லைஃப்பையும் வழங்குகின்றன.

05. பட்ஜெட் விலை 5ஜி போன்களை நம்பி வாங்கலாமா?
5ஜிக்கான ஆதரவு - விலையுயர்ந்த அல்லது பிளாக்ஷிப் மாடல்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்போது ரூ.15,000 - ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் பல சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
பட்ஜெட் விலையில் ஒரு 5ஜி போன் என்று வரும் போது அதன் டிஸ்ப்ளே, ரெசல்யூஷன், கேமரா சென்சார்கள் போன்றவைகளில் சில சமரசங்கள் இருக்கலாம். அதற்காக அது மோசமான 5ஜி மாடலாக மாறிவிடாது.

06. அடிக்கடி அப்டேட்களை வழங்கும் போன்களை தேர்வு செய்யவும்!
ஏனென்றால்.. 5ஜி தொழில்நுட்பம் மிகவும் புதியது. அதில் எப்போது வேண்டுமானாலும் மேம்பாடுகளை பெறலாம்.
எனவே, வழக்கமான மற்றும் சரியான நேரத்தில் சாஃப்ட்வேர் அப்டேட்களை வழங்கும் மொபைல் பிராண்டை தேர்வு செய்வது மிகவும் நல்லது!

07. 5ஜி ஆதரவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டாம்!
நீங்கள் வாங்குவது பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்றால் பரவாயில்லை; ஆனால் ரூ.20,000 க்கு மேலான விலை நிர்ணயம் கொண்ட 5ஜி போனை வாங்கும் போது, அதில் 5ஜி சப்போர்ட் இருக்கிறதா என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வது தவறு.
டிஸ்பிளே, கேமரா, டிசைன் போன்ற மற்ற சில பொதுவான விஷயங்கள் மீதும் கவனம் செலுத்தவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470