தொலைந்துபோன எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்ட்டை பிளாக் செய்வது எப்படி.?
உங்களின் எடிஎம் கார்ட் தொலைந்துவிட்டதென்று உங்களுக்குத் தெரிய வந்ததுமே, நீங்கள் உங்கள் வங்கியிடம் அதை அறிவிக்க வேண்டும்.
ஒருவேளை உங்களின் ஏடிஎம் கார்ட் தொலைந்து விட்டால் அல்லது திருடப்பட்டு விட்டால் முடிந்த அளவு மிக விரைவில் அதை பிளாக் செய்வது நல்லது. பெரும்பாலான வங்கிகள் இந்த நோக்கத்திற்காக கட்டணமில்லாத வாடிக்கையாளர் சேவை தொலைபேசி எண்ணைக் கொண்டுள்ளன.
உங்களின் எடிஎம் கார்ட் தொலைந்துவிட்டதென்று உங்களுக்குத் தெரிய வந்ததுமே, நீங்கள் உங்கள் வங்கியிடம் அதை அறிவிக்க வேண்டும். அதற்கு முன்பு தொலைந்த ஏடிஎம் கார்டை நீங்கள் பிளாக் செய்ய விரும்பினால் பின்வரும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றவும்.

வழிமுறை #01
உங்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் www.onlinesbi.com என்ற வலைத்தளத்திற்குள் நுழையவும்.

வழிமுறை #02
இ-சர்வீஸ் என்ற டேப்பின் கீழ் ஏடிஎம் கார்ட் சர்வீஸ் >பிளாக் ஏடிஎம் கார்டு என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #03
உங்களின் எந்த டெபிட் கார்ட் வழியான ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய வேண்டுமோ அந்த அக்கவுண்ட்டை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #04
இப்போது அனைத்து ஆக்டிவ் மற்றும் பிளாக் செய்யப்பட்ட அட்டைகள் காட்டப்படும். உங்களுக்கு அட்டை(களின்) முதல் 4 மற்றும் கடைசி 4 இலக்கங்கள் காட்சிப்படும்.

வழிமுறை #05
இப்போது பிளாக் செய்யவிரும்பும் கார்டைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் 'சப்மிட்' என்பதைக் கிளிக் செய்யவும். விவரங்களைச் சரிபார்த்தப்பின் உறுதிப்படுத்தவும்.

வழிமுறை #06
நீங்கள் விரும்பும் அங்கீகரிப்பதற்கான முறைமையைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது, எஸ்எம்எஸ் ஒடிபி அல்லது சுயவிவரம் கடவுச்சொல் (ப்ரொபைல் பாஸ்வேர்ட்) - ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #07
அடுத்த திரையில், முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒடிபி கடவுச்சொல் / சுயவிவரம் கடவுச்சொல்லை உள்ளிட்டு, "கன்பிர்ம்" என்பதைக் கிளிக் செய்யவும்.

வழிமுறை #08
இறுதியாக, உங்கள் ஏடிஎம் கார்ட் வெற்றிகரமாக பிளாக் செய்யப்பட்டதிற்கான தகவல் ஒரு டிக்கெட் எண் உடன் காண்பிக்கப்படும். எதிர்கால சான்றாதாரதிற்காக அந்த டிக்கெட் எண்ணை பதிவு செய்து வைத்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications