இங்க அடிச்சா மஸ்க்கிற்கு வலிக்கும்! இதை செய்தால் உங்க பிரச்சனைக்கு தீர்வு உறுதி.! முடிவு உங்க கையில்..

|

Twitter நிறுவனத்தை பெருந்தொகைக்கு வாங்கிய எலான் மஸ்க்கின் நடவடிக்கை ஒவ்வொன்றும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இருக்கிறது. ட்விட்டர் சிஇஓ உட்பட பலரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். சரி, அவரது நிறுவனம் அதில் மாற்றம் செய்து வருகிறார் என்று நினைத்தால் அதோடு நிற்கவில்லை. ட்விட்டர் பயனர்கள் மீதும் மஸ்க் இன் நடவடிக்கை பாய்கிறது.

கட்டணம் அறிவித்த எலான் மஸ்க்

கட்டணம் அறிவித்த எலான் மஸ்க்

ட்விட்டரில் ப்ளூ டிக் சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு பயனர்களும் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என மஸ்க் அறிவித்திருக்கிறார். அதாவது இந்திய மதிப்புப்படி மாதம் சுமார் ரூ.660 செலுத்த வேண்டும். தொடர்ந்து பல நடவடிக்கைகளை மஸ்க் எடுத்து வருகிறார். மஸ்க் இந்த நடவடிக்கை உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது.

தீர்வு என்ன?

தீர்வு என்ன?

ஒருவரிடம் பிரச்சனை ஏற்பட்டால் சரி மறப்போம் மன்னிப்போம் என்று அவரதுடன் ஒத்திசைந்து வாழ வேண்டும் அல்லது அவரிடம் இருந்து முற்றிலும் ஒதுங்கி வாழ வேண்டும். இதே தீர்வை தான் நாம் இங்கும் செயல்படுத்தப் போகிறோம்.

மாற்றத்தை நோக்கி செல்வது நல்லது

மாற்றத்தை நோக்கி செல்வது நல்லது

எத்தனையோ சமூகவலைதளங்கள் இந்த காலக்கட்டத்தில் வளர்ந்து இருக்கிறது பல தளங்கள் வளர்ந்துக் கொண்டும் இருக்கிறது. எனவே இப்போதே மாற்று தளத்தை நோக்கி செல்வது நல்லது.

சிறுதுளி பெரு வெள்ளம்

சிறுதுளி பெரு வெள்ளம்

சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல் தனிப்பட்ட நபரின் விருப்பம் என பலரும் ட்விட்டரில் இருந்து வெளியேறும்பட்சத்தில் இதுகுறித்த தகவல் செய்தியாக மாறும். உலகத்தின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் பிஸ்னஸை வளர்ப்பது ஒவ்வொரு தொழிலதிபரின் கனவாகும் என்பதை கவனத்திக் கொள்ள வேண்டும்.

முற்றிலும் வெளியேறுவது எப்படி?

முற்றிலும் வெளியேறுவது எப்படி?

ட்விட்டரில் இருந்து வெளியேற திட்டமிட்டால் உங்கள் கணக்கை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்?

Twitter கணக்கை நீக்குவதற்கு முறையான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். ட்விட்டரில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டு ஸ்டெப்கள் இருக்கிறது. முதலில் ட்விட்டர் கணக்கை செயலிழக்கச் செய்ய வேண்டும் பின் ட்விட்டரில் இருந்து முறையாக வெளியேற வேண்டும். ட்விட்டரில் உங்கள் கணக்கை செயலிழக்கச் செய்தால் தற்காலிகமாக உங்கள் கணக்கு செயலிழக்கப்படும், பின் 30 நாட்களுக்குப் பிறகு இயங்குதளத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்படும்.

டெலிட் செய்வதற்கான வழிமுறைகள்

டெலிட் செய்வதற்கான வழிமுறைகள்

உங்கள் ட்விட் கணக்கில் லாக் இன் செய்து உள்ளே நுழையவும். அதில் காட்டப்படும் மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்து செட்டிங்கிற்குள் செல்லவும்.

Settings and privacy என்ற விருப்பத்தை கிளிக் செய்துக் கொள்ளவும்.

உங்கள் கணக்குப் பிரிவில் காட்டப்படும் Deactivate your account என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

30 நாட்கள் காலக்கெடு

இந்த விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம், முழு செயலிழக்கச் செயல்முறையும் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதாவது 30 நாட்கள் தற்காலிகமாக உங்கள் கணக்கு செயலிழக்கப்படும் என்பது உங்களுக்கு காட்டப்படும்.

உங்கள் விருப்பம்? உங்கள் முடிவு?

உங்கள் விருப்பம்? உங்கள் முடிவு?

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் 30 நாட்கள் விருப்பத்துடன் 12 மாதங்களுக்கான விருப்பமும் உங்களுக்கு காட்டப்படும். இதை தேர்ந்தெடுப்பது உங்களது விருப்பம். மஸ்க் நடவடிக்கையால் நீங்கள் ட்விட்டரில் இருந்து வெளியேற திட்டமிட்டாலோ அல்லது இத்தனை பேர் வெளியேறத் தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கத் திட்டமிட்டாலோ 30 நாட்கள் விருப்பத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.

தற்போது சிவப்பு நிறத்தில் கீழே இருக்கும் செயலிழக்க விருப்பத்தை கிளிக் செய்யவும். இது உங்கள் கணக்கை முற்றிலும் செயலிழக்கச் செய்யும்.

Best Mobiles in India

English summary
If You are Not Satisfy in Elon Musk Action Here the Solution: How to delete your Twitter account?: Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X