நமக்கு ஏற்றப்படி கம்ப்யூட்டர் கீபோர்ட் அமைப்பை மாற்றியமைப்பது எப்படி?

|

ஏற்கனவே ஒழுங்குப்படுத்தப்பட்ட கீ முறையின் மூலம் கீபோர்ட் செயல்படுவது வழக்கம். ஆனால் அந்த கீபோர்டின் கீ-க்களின் அமைப்பை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் என்று எப்போதாவது நினைத்தது உண்டா? ஆம் என்றால், உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் இந்தக் கட்டுரையை தொடர்ந்து படிக்கவும். ஏனெனில் அந்த அம்சத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அளிக்கிறது.

நமக்கு ஏற்றப்படி கம்ப்யூட்டர் கீபோர்ட் அமைப்பை மாற்றியமைப்பது எப்படி?

நாம் ஒவ்வொருவரும் பலதரப்பட்ட பாணிகளில் பணியாற்றுகிறோம். அதற்கு ஏற்ப நமது தேவைகளை முன்னிறுத்தி, பலதரப்பட்ட குறுக்குவழிகள் மற்றும் வேறுபட்ட கமெண்டுகளை அளிக்கும் வகையில் கீ-க்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. கீபோர்ட் சென்டர் மூலம் கீ-க்களை மறுசீரமைக்க முடியும். அதே நேரத்தில், மாற்றம் செய்வதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த கீ-க்களைப் பொறுத்து, நாம் கீழே அளித்துள்ள வழிகள் அமையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு கீ-யை மறுசீரமைப்பது எப்படி?

ஒரு கீ-யை மறுசீரமைப்பது என்பது பெரிய மலையை நகர்த்துவது போன்ற கஷ்டமான பணி அல்ல. கீழே அளிக்கப்பட்டுள்ள எளிய படிகளின் மூலம் எந்தொரு விண்டோஸ் பதிப்பில் உள்ள கீ-க்களையும் நீங்கள் மறுசீரமைக்க முடியும். ஆனால் இந்தப் பணியை நீங்கள் துவங்கும் முன், "மைக்ரோசாஃப்ட் மவுஸ் மற்றும் கீபோர்ட் சென்டர்" என்பதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மைக்ரோசாஃப்ட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இருந்து இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த அதிகாரப்பூர்வமான இணைய பக்கத்தில் "மைக்ரோசாஃப்ட் மவுஸ் மற்றும் கீபோர்ட் சென்டர்" இல் பதிவிறக்கத்திற்கான இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதை பதிவிறக்கம் செய்த பிறகு, உங்கள் கம்ப்யூட்டரில் அது நிறுவப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்கவும். இல்லாவிட்டால், அதை நிறுவுவதற்கு, தேடல் பாரில் "மைக்ரோசாஃப்ட் மவுஸ் மற்றும் கீபோர்ட் சென்டர்" என்று தட்டச்சு செய்யவும். ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால், தேடல் பாரில் அதற்கான அப்ளிகேஷனைத் திறப்பதற்குரிய குறுக்குவழியை காண முடியும். அந்த அப்ளிகேஷனைத் திறப்பதற்கு, அந்த குறுக்குவழியின் மீது கிளிக் செய்யவும்.

படி 1: நீங்கள் கட்டமைப்பை மாற்றியமைக்க விரும்பும் கீபோர்ட்டை இணைத்து, "மைக்ரோசாஃப்ட் மவுஸ் மற்றும் கீபோர்ட் சென்டரை" துவக்கவும்.

படி 2: உங்கள் திரையில் கீ-க்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியல் காட்டப்படும். இதில் நீங்கள் மறுசீரமைக்க விரும்பும் கீ-யை தேர்ந்தெடுக்கவும்.

படி 3: இப்போது கீ-க்களின் ஒரு கமெண்ட் பட்டியலைக் காணலாம். அதில் நீங்கள் விரும்பும் கமெண்ட்டை தேர்ந்தெடுக்கவும்.

அவ்வளவு தான்! உங்கள் கீபோர்ட்டின் கீ-க்களை வெறும் மூன்றே எளிய படிகளில் வெற்றிகரமாக மறுசீரமைக்கப்பட்டது.

இது தவிர, கன்ரோல் பேனலில் உள்ள "அணுகலுக்கு எளிது" அமைப்புகளின் மூலம் உங்கள் கீபோர்ட்டை விரும்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும். இதற்கு "கீபோர்ட்டை பயன்படுத்த எளிதாக்கு" என்பதில் உள்ள "ஃபில்டர் கீஸ்" என்பதை ஆன் செய்ய வேண்டும். அதன்பிறகு "செட்அப் ஃபில்டர் கீஸ்" என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் விருப்பம் போல கீபோர்ட் அமைப்புகளை மாற்றியமைத்து கொள்ள முடியும். இதன்மூலம் உங்கள் விருப்பம் போல கீபோர்ட்டை வெற்றிகரமாக மறுசீரமைத்து கொள்வது எப்படி என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஹானர் 7சி.!5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஹானர் 7சி.!

Best Mobiles in India

English summary
By default, the keyboard functions on the pre-assigned key. Have you ever felt the need of customizing the keyboard's key? If yes, then you should go ahead to do that because Microsoft offers that option to you. All you need to do first is that you need to download the Microsoft Mouse and Keyboard Centre.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X