ஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.!

இந்தச் செயலியின் மூலம் பயனாளர்கள், சார்ட்கட்களை உருவாக்க முடியும். அவற்றோடு குரல் வழியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பக் கட்டளைகளையும் உருவாக்கலாம்.

|

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான செயலிகள் மற்றும் மென்பொருள் டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2018) புதிய சார்ட்கட் பயன்பாட்டுச் செயலி (Shortcuts app) அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒர் ஆட்டோமேசன் அப்ளிகேசன். இதனைப் பயன்படுத்தி வழக்கமான பயன்பாட்டுக்கான விரைவுச் செயல்பாட்டு வழிமுறைகைளை ஐ போன் இயங்கு தளங்களைக் கொண்ட (iOS) கருவிகளில் உருவாக்க முடியும். இதனைச் செயற்கை அறிவுநுட்பத்துடன் (AI) இயங்கும் மெய்நிகர் உதவியாளரான Siri-யோடு இணைத்துப் பயன்படுத்தலாம். அல்லது ஆப்பிள் போன் வழியாகவும் பயன்படுத்தலாம். தற்போதைய Workflow அப்ளிகேசனுடைய மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் சார்ட்கட் பயன்பாட்டுச் செயலி (Shortcuts app) ஆகும்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.!

இந்தச் செயலியின் மூலம் பயனாளர்கள், சார்ட்கட்களை உருவாக்க முடியும். அவற்றோடு குரல் வழியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பக் கட்டளைகளையும் உருவாக்கலாம். ஆப்பிள் போனுக்குரிய செயலிகளுக்கு மட்டும் அல்லாமல், பிற செயலிகளுக்கும் இதன் வழியாக சார்ட்கட்களை உருவாக்க முடியும்.


சார்ட்கட் செயலியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கீழ்க் கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.

தேவையானவை :

• ஐ போன் அல்லது 12 பீட்டா இயங்குதளம் வழியாகச் செயல்படக் கூடிய ஐ பேட்

• இணையத் தொடா்பு


Siri செயலிக்கான சுருக்க வழியமைப்புகளை (Shortcut) உருவாக்கும் முறை :

1. Workflow செயலிக்குள் நுழையவும். பிறகு, “create new Workflow” பகுதிக்குச் செல்லவும்.

2. புதியதாக உருவாக்கப்பட்ட “Actions workflow” –வை கொண்டுவர “Actions option” பகுதி மீது தேய்க்கவும்.

3. செய்யப்பட்ட மாற்றங்களை உறுதிப்படுத்த “Done” பகுதி மீது தட்டவும்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.!

Siri Shortcuts-க்காக கட்டளைகளை உருவாக்க பின்வருவனவற்றைச் செய்யவும்.


1. செட்டிங்ஸ் பகுதிக்குள் நுழைந்து Siri & Search option பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

2. “Recommended list” பகுதியில் அல்லது “More Shortcuts > Workflow” பகுதியில் புதியதாக உருவாக்கப்பட்ட Workflow –வைக் காணலாம்.


3. இப்பகுதியில் தனிப்பட்ட கட்டளைகள் அல்லது வாக்கியத் தொடர்களைப் பதிவு செய்யவும்.

4. பதிவு செய்யப்பட் கட்டளைகளைச் செயலுக்குக் கொண்டு வருவதற்கு'Hey Siri' என்று அழைத்துப் பிறகு கட்டளைகளைக் கூறவேண்டும்.


சுருக்க வழியமைப்புகளை (Shortcuts) Siri செயலியுடன் இணைக்கச் செய்ய வேண்டியவை :

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.!

உங்கள் வீடு அல்லது ஏதேனும் பகுதிக்கு உரிய வழியைக் கண்டறிதல், பிடித்த பாடலை இசைக்கச் செய்தல், ஒளியை மேலும் பிரகாசமாக்குதல், “Do Not Disturb” பகுதியைத் தேர்ந்தெடுத்தல் போன்ற கட்டளைகளைப் பிறப்பிப்பிக்க வேண்டும் என்றால்,

1. முதலில் “Shortcuts app” பகுதிக்குள் நுழையவும். பிறகு, “Create new shortcuts” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்

2. செயலியின் கீழ்ப் பகுதியில் உள்ள “Search bar” மூலமாக “shortcut” –க்கு ஒதுக்க வேண்டிய செயலைத் (action) தேர்ந்தெடுக்கவும்.


உதாரணமாக, நமக்கு இப்பொழுது Maps தேவை என்றால், 'Open app' பகுதிக்குச் சென்று “Choose ”என்னும் பகுதியைத் தேர்ந்தெடுத்து நமக்குத் தேவையான செயலிக்குள் நுழையவும்.


3. இப்பொழுது நமக்குத் தேவை வரைபடம் எனவே, Google Maps பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.


4. அடுத்து, விரும்பும் பாடல்களைத் தேர்ந்தெடுக்க 'Music' பகுதியை shortcut உடன் இணைக்கவும்.


5. இதே போன்று, brightness level மற்றும் Do Not Disturb option ஆகியவற்றுக்கான செயலையும் இணைக்கவும்.


6. தேவையான செயல்பாடுகளை shortcut –உடன் இணைத்தபிறகு “Done” பகுதியைத் தட்டவும்.


7. இப்பொழுது திரையில், 'Add to Siri' என்னும் பகுதி தோன்றும்.

8.இப்பொழுது உங்களுடைய “shortcut”-க்கான கட்டளையைப் (command) பதிவு செய்யவும்.


9. shortcut-க்கென ஒரு ஐகானைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டால், உங்களுடைய செயல்பாடுகளுக்கு வசதியாக இருக்கும்.


10. இப்பொழுது, Siri செயலிக்குள் நுழைந்து உங்களுடைய சுருக்கவழிச் செயல்பாட்டுக்கான (shortcut) கட்டளையைப் பிறப்பிக்கவும்.

Best Mobiles in India

English summary
How to use Apple's new Shortcuts app : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X