தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப்பாக்ஸ் பெறுவது எப்படி?

  |

  தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தனியார் சேனல்களுக்கு வாடிக்கையாளர்கள் செல்வதை தவிர்க்கும் பொருட்டும் காட்சிகளை துல்லியமாக வாடிக்கையாளர்கள் கண்டு கழிக்கும் வகையில், டிஜிட்டல் தளத்தில் களமிறங்கி வருகின்றது.

  தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப்பாக்ஸ் பெறுவது எப்படி?

  இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இலவச செட்டாப் பாக்ஸ்களையும் வழங்கி வருகின்றது. குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களையும் வழங்குவதால் பொது மக்களிடம் பெரும் ஈர்ப்பு இருக்கின்றது.

  தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக பெறுவது எப்படி? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பர்கள் குறித்து புகார் அளிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  TACTV :

  TACTV (தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்) தற்போது இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை விநியோகிக்கின்றது. ஒரு செட்டாப் பாக்ஸ் ₹1800 ரூபாய் என மும்பை தனியார் நிறுவனத்தில் தமிழக அரசு கொள் முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

  செட்டாப் பாக்ஸ் இலவச விநியோகம்:

  இந்த செட்டா பாக்ஸை கேபிள் டி.வி சந்தாதாரர்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது.


  கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களிடம் இணைப்பு வழங்குவதற்கு பிட்டிங் (Insulation fees) கட்டணமாக ₹200 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என அரசு அறிவித்துள்ளது.

  அரசுக்கு ₹180 ரூபாய் வைப்புத்தொகை:

  கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் ஒரு செட்டாபாக்ஸ்க்கு அரசுக்கு ₹180 ரூபாய் வைப்புத்தொகை கட்டணம் செலுத்தி செட்டாபாக்ஸினை பெற்று வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு வழங்க வேண்டும்.

  மாத கட்டணம் :

  மாத சந்தா கட்டணம் இருவகையாக அரசு நிர்ணயம் செய்துள்ளது.


  200 சேனல்களுக்கு ₹125 ரூபாய்


  300 சேனல்களுக்கு ₹175 ரூபாயும்

  GST 18% சேர்த்து மாத சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.

  இதில் ₹125 ரூபாயில் ₹ 62.50. காசு அரசுக்கும், ₹ 62.50 கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும்
  ,

  ₹175 ரூபாயில் ₹75 ரூபாய் அரசுக்கும், ₹100 ரூபாய் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும் சேரும்.

  பெறுவது எப்படி?

  அரசு செட்டாபாக்ஸ் இணைப்பு பெற முகவரி ஆதாரமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டணம் செலுத்திய ரசீது, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் ஆப்பரேட்டரிடம் கொடுத்தால் போதும் .

  புகார்:

  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது புகார் தெரிவிக்க மாவட்ட துணை மேலாளர்களுக்கு (தாசில்தார்கள்) அரசு வழங்கி உள்ள மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.1. அரியலூர் : 94980 02568
  2. சென்னை : 94980 17185
  3. சென்னை : 94890 17285
  4. கோவை : 94980 02569
  5. கடலூர் : 94989 02570
  6. தர்மபுரி : 94980 02571
  7. திண்டுக்கல் : 94980 02572
  8. ஈரோடு : 94980 02573
  9. காஞ்சீபுரம் : 94980 02574
  10. கன்னியாகுமரி : 94980 02575
  11. கரூர் : 94980 02576
  12. கிருஷ்ணகிரி : 94980 02577
  13. மதுரை : 94980 02578
  14. நாகப்பட்டினம் : 94980 02579
  15. நாமக்கல் : 94980 02580

  16. பெரம்பலூர் : 94980 02581

  17. புதுக்கோட்டை : 94980 02582

  18. இராமநாதபுரம் : 94980 02583

  19. சேலம் :94980 02584

  20. சிவகங்கை : 94980 02585

  21. தஞ்சாவூர் : 94980 02586


  22. ஊட்டி :94980 02587

  23. தேனி : 94980 02588

  24. தூத்துக்குடி : 94980 02589

  25. திருச்சி :94980 02590

  26. திருநெல்வேலி : 94980 02591

  27. திருப்பூர் ;94980 02592

  28. திருவள்ளூர் : 94980 02593

  29. திருவண்ணாமலை : 94980 02594

  30. திருவாரூர் : 94980 02595

  31. வேலூர் : 94980 02596

  32. விழுப்புரம் : 94980 02597

  33. விருதுநகர் : 94980 02598

  புகார் அளிக்க:


  அரசு கேபிள் டி வி செட்டாபாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் குறித்து புகார் தெரிவித்துள்ள தெரிவிக்க நினைக்கும் பாதிக்கப்பட்ட நண்பர்களே சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு கேபிள் டி.வி. புகார்

  வாட்ஸ் ஆப் குரூப்பில் உங்களது புகாரினை பதிவு செய்ய வேண்டுகிறோம்

  .

  அரசு கேபிள் டி.வி மாவட்ட மேலாளர்கள் என்றழைக்கப்படும் சென்னை, ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், இராமநாதபுரம், ஊட்டி, திருவண்ணாமலை, திருப்பூர் (சொந்த மொபைல் எண்) ஒரு சில மாவட்ட தாசில்தார்களுக்கு அரசு வழங்கி உள்ள வாட்ஸ் ஆப் எண்களை இந்த குரூப்பில் இணைத்துள்ளோம்


  .

  புகார்கள் வருகின்றது:

  உங்களது புகாரினை பதிவு செய்து நிவாரணம் பெற்று பயனடையுங்கள்


  கேபிள் ஆப்பரேட்டர்கள் வழங்கும் தனியார் செட்டா பாக்ஸினை தவிர்த்து அரசு வழங்கும் இலவச செட்டாபாக்ஸ்க்கு ₹ 200 மட்டும் கட்டணம் செலுத்தி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதினை தடுத்திட உதவுங்கள்


  பெரும்பாலான மாவட்ட மேலாளர்கள் தொடர்பு எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் தொடர்பினை ஏற்கவில்லை என்றும் பல புகார்கள் வரப்பெற்றுள்ளது


  கடமை தவறிய பல மாவட்ட மேலாளர்கள் கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாக ஆதாரத்துடன் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது

  .

  தலைமை நிலைய முகவரி:

  எனவே பாதிக்கப்பட்ட அந்தந்த மாவட்ட பகுதி மக்கள் கீழ் காணும் எண்களில் புகார் தெரிவிக்கலாம்
  044-28432911

  FAX NO : 044 28432913

  E -mail : tactv@tactv.in
  For internet Enquiries : tactnet@tactv.in

  தலைமை அலுவலக முகவரி: Tamil Nadu Arasu Cable TV Corporation,

  Dugar Towers

  34 (123) 6th Floor

  Marshalls Road

  Egmore, CHENNAI -600 008

  24 மணி நேரமும் செயல் படும் அம்மா அழைப்பு மையம் 1100. புகார் தெரிவிக்கலாம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  how, you get, tactv, set, of box : Read more at this tamil.gizbot.com
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more