ஜிமெயிலின் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி! ஏன் & எப்படி முடக்க வேண்டும்?

இந்த வசதி தற்போது இணைய பயனர்களுக்கும் கிடைக்கிறது. இதனுடன் இன்னும் சில வசதிகளும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.

By GizBot Bureau
|

ஜிமெயிலின் மறுவடிவமைப்பில் பல்வேறு வசதிகளை அள்ளித் தந்திருக்கிறது கூகுள். இதில் சில புதிய வசதிகள் கூகுளின் மெசின் லேர்னிங் அல்காரிதம்களை பயன்படுத்தியுள்ளன. இந்த அல்காரிதம்கள் ஏற்கனவே மொபைல் செயலிகளில் பிரிடிக்டிவ் ரீப்ளை வசதியை பயனர்களுக்கு வழங்கின.

ஜிமெயிலின் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி! ஏன் & எப்படி முடக்க வேண்டும்?


இந்த வசதி தற்போது இணைய பயனர்களுக்கும் கிடைக்கிறது. இதனுடன் இன்னும் சில வசதிகளும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.

ஜிமெயில் வழங்கியுள்ள முக்கிய செயற்கை நுண்ணறிவு வசதிகள் பின்வருமாறு.

1)ஸ்மார்ட் ரிப்ளை

2)ஸ்மார்ட் கம்போஸ்

3)நட்ஜ்ஜஸ்

4)ஹை-ப்ரையாரிடி நோட்டிபிகேசன்

உங்கள் ஈமெயிலில் உள்ள பேட்டர்ன்களை படித்து, உங்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என தெரிந்துகொண்டு, அதிலிருந்து தகவல்களை திரட்டி அவற்றின் அடிப்படையில் இந்த வசதிகள் செயல்படுகின்றன.இந்த வசதிகள் உங்களுக்கு தேவையில்லையெனில் அவற்றை முடக்கவும் முடியும். முதலில் இவற்றின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

ஜிமெயிலின் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி! ஏன் & எப்படி முடக்க வேண்டும்?


1) ஸ்மார்ட் ரிப்ளை :

நீங்கள் ஏற்கனவே அனுப்பிய ஈமெயில்களில் எப்படி ரிப்ளை செய்துள்ளீர்கள் என்பதற்கேற்ப தானாகவே ரிப்ளை செய்யும் வார்த்தைகளை உருவாக்கும்.

2)ஸ்மார்ட் கம்ப்போஸ்

நீங்கள் ஈமெயிலை தயாரிக்கும் போது யூகத்தின் அடிப்படையில் அடுத்து வரும் வார்த்தைகளை பரிந்துரைக்கும்.


3)நட்ஜ்ஜஸ்

உங்களுக்கு அனுப்பப்பட்ட மெயில்களுக்கு நீங்கள் ரிப்ளை செய்யவில்லை என்றால், அதை நீங்கள் செய்ய மறக்காதவாறு கூகுள் உங்களுக்கு நினைவூட்டும்.

4) ஹை ப்ரையாரிடி நோட்டிபிகேசன்
அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஈமெயில்களை கூகுள் கண்டறிந்து , அவற்றை குறியிட்டு வைக்கும்.

ஜிமெயிலின் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி! ஏன் & எப்படி முடக்க வேண்டும்?


செயற்கை நுண்ணறிவு வசதிகளை முடக்குவது எப்படி?
மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளையும் முடக்க முடியாவிட்டாலும், நட்ஜ்ஜஸ், ஸ்மார்ட் கம்ப்போஸ் போன்ற குறிப்பிட்ட சிலவற்றை முடக்க முடியும்.

நட்ஜ்ஜஸ் வசதியை முடக்க, செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று ஜெனரல் டேப்-ல் பார்த்தால், நட்ஜ்ஜஸ் வசதிக்கான இரு செட்டிங்களை காண முடியும். ஜிமெயிலில் துவக்கத்திலேயே அது இயக்கும் என்பதால், உங்களுக்கு அது தேவையில்லை என்றால் முடக்க வேண்டும்.

ஸ்மார்ட் கம்ப்போஸ் வசதியை முடக்க வேண்டுமெனில், செட்டிங்ஸ் பகுதியில் ஜெனரல் டேப்-ற்கு செல்லவும். பின்னர் அதில் கீழே ஸ்ரோல் செய்து ஸ்மார்ட் கம்ப்போஸ்ஐ கண்டறிந்து, அதிலுள்ள இரண்டு வசதியில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும். ஈமெயில் எழுதும் போது பரிந்துரைகள் வேண்டாம் என்றால் "Writing Suggestions Off" என்பதை தேர்வு செய்யவும்.

ஸ்மார்ட் ரிப்ளை மற்றும் ஹை ப்ரையாரிடி நோட்டிபிகேசன் வசதிகளை முடக்குவது பற்றி எந்த அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை. ஈமெயில்களை விளம்பரத்திற்காக ஸ்கேன் செய்யவுள்ளதாக கூகுள் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பயனர்களை மோசடிகளில் இருந்து காப்பாற்றவும் ஈமெயில் ஸ்கேன் செய்கிறது கூகுள். இவை மோசடிகளில் இருந்து பயனர்களை காப்பாற்றுவதற்கான வசதிகள் என்பதால் இவற்றை முடக்குவதற்கான வழிமுறைகள் இல்லை.

ஜிமெயிலின் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி! ஏன் & எப்படி முடக்க வேண்டும்?


ஆனால் நீங்கள் ஏற்கனவே இருந்த ஜிமெயிலுக்கு மாற முடியும். மறுவடிவமைப்பு செய்த ஜிமெயிலின் பயனர் இடைமுகம் பிடிக்கவில்லை எனில் பழைய ஜிமெயில் வடிவத்திற்கு மாற வாய்ப்பு வழங்குகிறது கூகுள்.

Best Mobiles in India

English summary
How and why to disable new AI features in Gmail : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X