ஸ்மார்ட்போன் வைஃபை இணைப்பை பல கருவிகளில் பயன்படுத்துவது எப்படி?

வைஃபையை பல்வேறு கருவிகளுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் அது ஒன்றும் கடினமாக செயல் கிடையாது.

|

உங்கள் வைஃபை இணைப்பை பல கருவிகளில் ஏன் பயன்படுத்தவேண்டாம் என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நமது வைஃபை ரவுட்டர் ஒரு நேரத்தில் எவ்வளவு இணைப்புகளை தரமுடியுமோ அதற்கு அதிகமான கருவிகளை நம்மில் பலர் பயன்படுத்தலாம் அல்லது சில நேரங்களில் விருந்தினர்கள் வரும் போது அவர்களையும் வைஃபை பயன்படுத்த அனுமதிக்க நேரலாம். ஆனால் எதுவாக இருந்தாலும், உங்கள் மொபைலை பயன்படுத்தி பல கருவிகள் வைஃபையை பயன்படுத்த எளிதாக அனுமதிக்கலாம்.

ஸ்மார்ட்போன் வைஃபை இணைப்பை பல கருவிகளில் பயன்படுத்துவது எப்படி?

அது போல நீங்கள் செய்ய விரும்பினால், உங்கள் இணைய இணைப்பை ஹாட்ஸ்பாட் என்னும் வசதி மூலம் பல கருவிகளுக்கு பகிரலாம். ஆனால் நம்மில் பலருக்கு வைஃபை இணைப்பு மட்டுமே அதிவேக இணையத்தை வழங்கும் திறனுள்ளதாக இருக்கும். எனவே வைஃபையை பல்வேறு கருவிகளுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் அது ஒன்றும் கடினமாக செயல் கிடையாது. உங்கள் கருவியில் உள்ள ப்ளூடூத் இணைப்பை பயன்படுத்தி போன்,லேப்டாப்,கணிணி, டேப்லெட் என பல்வேறு கருவிகளுக்கு வைஃபை இணைப்பை பகிரலாம்.

இந்த வகையில் வைஃபையை இணைக்கும் போது கிடைக்கும் இணைய வேகம் நேரிடையாக வைஃபை உடன் இணைக்கும் போது கிடைப்பதை போல இல்லாவிட்டாலும், இணைய இணைப்பே இல்லாததை காட்டிலும் குறைந்த வேக இணையவழி இணைப்பு கிடைப்பது நன்மை தானே.

ஸ்மார்ட்போன் வைஃபை இணைப்பை பல கருவிகளில் பயன்படுத்துவது எப்படி?

கைப்பேசிகள்(phone)
வைஃபை இணைப்பை பகிர விரும்பும் முதன்மை கருவியில் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை செய்ய வேண்டும்.

படி#1
முதலில் உங்கள் போனை வைஃபை நெட்வொர்க் உடன் இணைக்க வேண்டும்

படி#2
பின்னர் உங்கள் போன் செட்டிங்க்ஸ் -ல் நுழைந்து குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்வதன் மூலம் ப்ளூடூத் மூலம் வைஃபையை பகிர முடியும்.

படி#3
உங்கள் போன் மற்றும் வைஃபை இணைக்கப்பட வேண்டிய கருவிகளில் ப்ளூடூத் இயக்கத்தை உறுதிசெய்து கொள்ளவும்.

படி#4
நெட்வொர்க் அண்ட இண்டர்நெட் சென்று அதில் ஹாட்ஸ்பாட்& டெதரிங் கிளிக் செய்யவும்.

படி#5
அதில் ப்ளூடூத் டெதரிங் (Bluetooth tethering) ஐ ஆன் செய்யவும்.


இதற்கு பிறகு உங்கள் கணிணி அல்லது லேப்டாப்பில் ப்ளூடூத்தை ஆன் செய்ய வேண்டும்.

ஸ்மார்ட்போன் வைஃபை இணைப்பை பல கருவிகளில் பயன்படுத்துவது எப்படி?

கணிணி அல்லது லேப்டாப்
உங்கள் கணிணியை இணையத்துடன் இணைக்க விரும்பினால், அதற்காக ப்ளூடூத் டாங்கிள் பயன்படுத்த வேண்டும. ஆனால் நீங்கள் லேப்டாப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இது ஒரு பிரச்சனையை இல்லை.

படி#1
உங்கள் கணிணி அல்லது லேப்டாப்-ல் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும்.

படி#2
டிவைசஸ் அண்ட் பிரிண்டர்( Devices & Printers) தேர்வு செய்யவும்.

படி#3
உங்கள் போனை குறிக்கும் ஐகானுக்கு சென்று வலது கிளிக் செய்யவும்.

படி#4
அங்கு கனெக்ட் என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள மெனுவில் ஏக்சஸ் பாய்ண்ட் ஐ தேர்வு செய்யவும்.

இதன் மூலம் உங்கள் மொபைல் வைஃபை இணைப்பை எளிதில் கணிணி அல்லது லேப்டாப் போன்ற பல்வேறு கருவிகளில் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
How to use your smartphone Wi-Fi connection on multiple devices : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X