வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ க்ரூப் கால் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

|

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் 2018 F8 நிகழ்வில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் சில வாரங்களில் புதிய அம்சம்த்திற்கான சோதனை துவங்கப்பட்டது.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ க்ரூப் கால் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

இதெல்லாம் இருக்கா?

- ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் தளங்களுக்கான அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலி.

- சீராக வேலை செய்யும் இன்டர்நெட் இணைப்பு.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

மேற்கொள்ள வேண்டியவை:

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்ய முதலில் ஒரு வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

வாய்ஸ் க்ரூப் கால் செய்ய:

1 - ஹோம் ஸ்கிரீனில் இருந்து வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.

2 - நீங்கள் அழைக்க வேண்டிய காண்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

3 - வலது புறம் காணப்படும் வாய்ஸ் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 - அழைப்பு இணைக்கப்பட்டதும், வலது புறத்தில் உள்ள “add participant” பட்டனை க்ளிக் செய்து நீங்கள் சேர்க்க வேண்டிய கான்டாக்ட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

5 - நீங்கள் அழைக்க வேண்டிய மற்றொரு காண்டாக்ட்-ஐ தேர்வு செய்து Add பட்டனை க்ளிக் செய்யலாம்.

6 - தொடர்ந்து அழைப்பாளர்களை அதிகரிக்க 4-வது வழிமுறையை பின்பற்றலாம்.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
க்ரூப் வீடியோ கால் செய்ய:

1 - ஹோம் ஸ்கிரீனில் இருந்து வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.

2 - கால்ஸ் டேப் சென்று டையலர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதனை திரையின் கீழ் உள்ள வலது புறத்தில் பார்க்க முடியும்.

3 - இங்கு நீங்கள் வீடியோ கால் செய்ய வேண்டிய முதல் நபரை தேர்வு செய்து வீடியோ பட்டனை க்ளிக் செய்து அவருடன் வீடியோ கால் துவங்க வேண்டும்.

4 - இனி, “add participant” பட்டனை க்ளிக் செய்து இரண்டாவது நபரை தேர்வு செய்து add பட்டனை க்ளிக் செய்யலாம்.

5 - தொடர்ந்து அழைப்பாளர்களை அதிகரிக்க 4-வது வழிமுறையை பின்பற்றலாம்.


குறிப்பு: அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
How to use WhatsApp group calling feature: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X