ஒரே ஆண்ட்ராய்டு போனில் இருவித ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி.??

By Meganathan
|

பள்ளி குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைவரும் பயன்படுத்தும் தளமாக ஃபேஸ்புக் இருக்கின்றது. சமூக வலைத்தளம் என்பதைத் தாண்டி வியாபார ரீதியாக ஃபேஸ்புக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாகவே பலரும் இரண்டு ஃபேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஓரே நேரத்தில் ஒரே கருவியில் இரண்டு ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா.?

ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆப்ஸ்களை வழங்குகின்றது. உடனே ஃபேஸ்புக் மெசன்ஜர் ஆப் என நினைக்க வேண்டாம். இரு வெவ்வேறு ஆப்ஸ் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்த முடியும். இது எப்படி சாத்தியம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆப்ஸ்:

ஆப்ஸ்:

ஒரே ஆண்ட்ராய்டு போனில் இரண்டு ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த இரண்டு செயலிகள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. இவை ஃபேஸ்புக் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்:

ஃபேஸ்புக்:

முதலில் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதன் மூலம் முதன்மை ஃபேஸ்புக் அக்கவுண்ட் பயன்படுத்தலாம். உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

ஃபேஸ்புக் லைட்:

ஃபேஸ்புக் லைட்:

பின் ஃபேஸ்புக் லைட் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்ய வேண்டும். 2015 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட இந்தச் செயலி குறைந்த டேட்டாவினை பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

அனுபவம்:

அனுபவம்:

இரு செயலிகளிலும் ஃஃபேஸ்புக் அனுபவம் வித்தியாசமாக இருக்கும். லைட் ஆப் மிக வேகமாக இருக்காது. ஆனால் குறைந்த அளவு டேட்டா மட்டுமே பயன்படுத்தும். ஃபேஸ்புக் லைட் ஆப் 2ஜி கனெக்ஷனிலும் வேலை செய்யும்.

இதையும் படியுங்கள்:

இதையும் படியுங்கள்:

இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் பயன்படுத்துவது எப்படி??

வாட்ஸ்ஆப்-ஃபேஸ்புக் பஞ்சாயத்து நீதிமன்றம் வந்தது அடுத்து என்ன.??

Best Mobiles in India

English summary
How to use Two Facebook accounts in one Android phone Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X