Home
How to

டின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி?

டேட்டிங் செயலியை பயன்படுத்தும் இடதுபுறம் அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்து குறிப்பிட்ட ப்ரோஃபைல்களை தேர்வு செய்யவோ அல்லது நிராகரிக்கவோ முடியும்.

By Meganathan S

டின்டர் ஆப் தற்சமயம் டேட்டிங் செயலிகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கின்றது. இந்த செயலியில் தினமும் 170 கோடி ஸ்வைப்களும், 2.6 கோடி மேட்ச்களும் நடைபெறுவதாக இந்த ஆப் தெரிவித்துள்ளது. பயனர் வசிக்கும் இடத்துக்கு ஏற்ப ப்ரோஃபைல்களை டின்டர் பட்டியலிட்டு காண்பிக்கும்.

டின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி?

டேட்டிங் செயலியை பயன்படுத்தும் இடதுபுறம் அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்து குறிப்பிட்ட ப்ரோஃபைல்களை தேர்வு செய்யவோ அல்லது நிராகரிக்கவோ முடியும். இரண்டு தரப்பிலும் இடதுபுறமாக ஸ்வைப் செய்யப்பட்டால், பயனருக்கு க்ரஷ் (It’s a crush) தகவல் தெரியும். இதன்பின் இருவரும் சாட் செய்ய முடியும்.

செயலியை புதிதாக இன்ஸ்டால் செய்திருப்பவர்கள் இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் கவனிக்க வேண்டியவை:

முதலில் கவனிக்க வேண்டியவை:

நீங்கள் பயன்படுத்தும் இயங்குதளங்களில் இருந்து செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

- ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று டின்டர் செயலியை இன்ஸ்டால் செய்யலாம்.

- ஐபோன் அல்லது ஐபேட் பயனர்கள் தங்களின் ஆப் ஸ்டோரில் டின்டர் செயலியை இன்ஸ்டால் செய்யலாம்.

பின்பற்றப்பட வேண்டியவை:

பின்பற்றப்பட வேண்டியவை:

செயலியை டவுன்லோடு செய்து, ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து முடித்ததும் அதனை சரியாக செட்டப் செய்ய வேண்டும்.

1 - முதலில் செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும்:
பயனர்கள் தங்களின் மொபைல் போன் நம்பர் அல்லது ஃபேஸ்புக் அக்கவுன்ட் மூலம் செயலியில் லாக்-இன் செய்யலாம். ஃபேஸ்புக் மூலம் லாக்-இன் செய்யும் போது உங்களது நண்பர்கள் பட்டியல், புகைப்படங்கள் மற்றும் இதர தகவல்களை ப்ரோஃபைலில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும்.

2 - ப்ரோஃபைலை கான்ஃபிகர் செய்ய வேண்டும்:
ப்ரோஃபைல் ஐகான் சென்று அதில் இருக்கும் கியர் ஐகானை க்ளிக் செய்து செயலியின் செட்டிங்ஸ்-க்கு செல்ல வேண்டும். இங்கு உங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளலாம்.

டிஸ்கவரி செட்டிங்ஸ்:

டிஸ்கவரி செட்டிங்ஸ்:

3 - டிஸ்கவரி செட்டிங்ஸ்:இந்த செட்டிங்-இல் பயனர்கள் தங்களின் இருப்பிடம், விருப்பம் மற்றும் வயது உள்ளிட்டவற்றை பதிவிட முடியும். இங்கு உங்களது இருப்பிடத்தை குறிப்பிடவோ அல்லது டீஃபால்ட் ஆகவோ விட்டுவிடலாம். அடுத்து ஷோ மி (Show Me) ஆப்ஷனில் பயனர்கள் விரும்பும் பாலினத்தை குறிப்பிடலாம். பின் குறிப்பிட்ட வயது மற்றும் டிஸ்டன்ஸ் ஆப்ஷன் மூலம் அதிகபட்ச தூரம் மற்றும் வயது வரம்பு உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம். பயனர்கள் வெப் ப்ரோஃபைல் ஆப்ஷன் மூலமாகவும் கஸ்டமைஸ் செய்யலாம்.

ப்ரோஃபைல் எடிட் செய்வது

ப்ரோஃபைல் எடிட் செய்வது

4 - ஆப் செட்டிங்ஸ்:
ஆப் செட்டிங்ஸ் பகுதியில் நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் கான்டாக்ட் அஸ் பகுதிகள் இருக்கும். இதன் நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ் மூலம் பயனர்கள் புஷ் நோட்டிஃபிகேஷன் செட்டிங்களை மாற்றியமைக்க முடியும். கான்டாக்ட் அஸ் ஆப்ஷன் மூலம் செயலியிடம் இருந்து உதவி பெற முடியும்.


5 - ப்ரோஃபைல் எடிட் செய்வது:
உங்களின் ப்ரோஃபைலை எடிட் செய்ய, ப்ரோஃபைல் ஆப்ஷன் சென்று எடிட் இன்ஃபோ (Edit Info) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு புகைப்படங்களை மாற்றியோ அல்லது வேலை செய்யும் இடம், நிறுவனம், பள்ளி, உள்ளிட்ட விவரங்களை மாற்ற முடியும்.

மேட்சிங் வழிமுறை

மேட்சிங் வழிமுறை

6 - மேட்சிங் வழிமுறை:
பயனரின் செட்டிங்-க்கு ஏற்ப செயலியிலேயே அவர்களின் ப்ரோஃபைலை காண்பிக்கும். பயனர்கள் அவற்றை லைக், ரிஜக்ட் அல்லது சூப்பர்-லைக் செய்ய முடியும். இத்துடன் X பட்டன் மூலம் ப்ரோஃபைலை நிராகரிக்கவும், இதயதுடிப்பு ஐகான் மூலம் லைக் செய்யவும், * பட்டன் மூலம் சூப்பர்-லைக் செய்ய முடியும். இதேபோன்று இடதுபுறம் ஸ்வைப் செய்தாலும் நிராகரிக்க முடியும். மேலும் வலதுபுறம் ஸ்வைப் செய்தால் லைக் மற்றும் மேல்புறமாக ஸ்வைப் செய்தால் சூப்பர்-லைக் தெரிவிக்க முடியும்.

7. குறுந்தகவல் அனுப்புவது:
மற்றவருடன் மேட்ச் ஆனதும், மெசேஜ் ஐகானை க்ளிக் செய்து உங்களுடன் மேட்ச் ஆன ப்ரோஃபைல்களை பார்க்க முடியும், இவற்றை க்ளிக் செய்து அவர்களுடன் உரையாடவும் முடியும்.

8. சந்தா செலுத்தலாம்:

8. சந்தா செலுத்தலாம்:

டின்டர் செயலியை கொண்டு 12 மணி நேரத்திற்கு 100 வலதுபுற ஸ்வைப்கள் அல்லது லைக் மட்டுமே செய்ய முடியும். மற்ற அம்சங்கள் இலவச பயனர்களுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. டின்டர் பிளஸ் அல்லது டின்டர் கோல்டு மூலம் அன்லிமிட்டெட் வலதுபுற ஸ்வைப்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு பூஸ்ட், தினமும் ஐந்து சூப்பர்-லைக்ஸ் மற்றும் பல்வேறு வசதிகளை பெற முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to use Tinder: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X