Home
How to

ஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் பயன்படுத்துவது எப்படி?

புதிய ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளம் செப்டம்பர் மாதம் முதல் பீட்டா பதிப்பில் உருவாக்கப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு விட்டது.

ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தின் புதிய வெர்ஷனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளம் செப்டம்பர் மாதம் முதல் பீட்டா பதிப்பில் உருவாக்கப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு விட்டது.

ஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் பயன்படுத்துவது எப்படி?

புதிய ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளம் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. அவ்வாறு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான க்ரூப் ஃபேஸ்டைம் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் பல வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்டதாக தெரிவித்தது.

ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தை அப்டேட் செய்த ஐ.ஓ.எஸ். பயனர்கள் அதிகபட்சம் 32 பேரிடம் ஒரே சமயத்தில் ஃபேஸ்டைம் மூலம் பேச முடியும். இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

குறிப்பு: ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 12.1 குறிப்பில் க்ரூப் ஃபேஸ்டைம் வீடியோ கால்கள் ஐபோன் 5எஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபேட் ஏர், ஐபேட் மினி 2, ஐபேட் மினி 3, ஐபேட் மினி 4 மற்றும் 6ம் தலைமுறை ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிவித்திருக்கிறது.

ஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் பயன்படுத்துவது எப்படி?

1 - ஃபேஸ்டைம் சென்று வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் ADD பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

2 - மேல்புறம் இருக்கும் ஆப்ஷனில் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களின் பெயர் அல்லது நம்பர்களை பதிவு செய்ய வேண்டும்.

3 - இங்கு Add Contact ஆப்ஷனை கிளிக் செய்தும் கான்ட்க்ட் ஆப் மூலம் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களை தேர்வு செய்ய முடியும்.

4 - வீடியோ ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ கால் அல்லது ஆடியோ ஐகானை கிளிக் செய்து ஃபேஸ்டைம் ஆடியோ கால் மேற்கொள்ள முடியும்.

க்ரூப் மெசேஜஸ் உரையாடல்களில் இருந்தும் க்ரூப் ஃபேஸ்டைம் கால் துவங்கலாம். மெசஞ்சரில் சாட் செய்யும் நபருடன் அப்படியே கால் செய்ய முடியும்.

1 - மெசேஜ் உரையாடல்களில் ப்ரோஃபைல் பிக்சர் அல்லது மை அக்கவுன்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் உரையாடல்களின் மேல்பக்கம் இடம்பெற்றிருக்கும்.

2 - ஃபேஸ்டைம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் பயன்படுத்துவது எப்படி?

க்ரூப் ஃபேஸ்டைம் கால் செய்யும் போது பயனர்கள் இடையே மற்றொரு நபரையும் சேர்க்க முடியும். இதை செய்ய:

1 - ஸ்கிரீனினை கிளிக் செய்து More ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

2 - இனி Add Person ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3 - அடுத்து நீங்கள் சேர்க்க வேண்டிய நபரின் பெயர், ஆப்பிள் ஐ.டி. அல்லது போன் நம்பர் பதிவு செய்ய வேண்டும்.

4 - அல்லது Add பட்டன் கிளிக் செய்து மற்றவர்களை கான்டாக்ட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம்.

5 - இறுதியில் ஃபேஸ்டைமில் அந்த நபரை சேர்க்கலாம்.


க்ரூப் ஃபேஸ்டைம் மேற்கொள்ளும் போது யாரேனும் உங்களுக்கு அழைப்பு விடுத்தால், உங்களுக்கு சைலன்ட் நோட்டிஃபிகேஷன் அல்லது மெசேஜ் வரும். கால் ஆக்டிவாக இருக்கும் போது நோட்டிஃபிகேஷனை கிளிக் செய்து உரையாடலில் கலந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to use the new group FaceTime feature in iPhones and iPads: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X