4ஜி ஸ்மார்ட்போன் இல்லாமலும் ஜியோ சிம்மை பயன்படுத்தலாம், அதெப்படி..?

|

நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ அலை வீசுகிறது என்றே கூறலாம். சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆனது போல பட்டித்தொட்டி எங்கும் பரபரக்கிறது - ரிலையன்ஸ் ஜியோ 4ஜி முன்னோட்ட சலுகை..!

அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் ரிலையன்ஸ் நிறுவனம் சாம்சங், எல்ஜி, அசுஸ், பானாசோனிக், மைக்ரோமேக்ஸ், டிசிஎல் என கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்கள் பிராண்ட் களுக்கும் தனது ஜியோ சேவையை திறந்து விட்டுள்ளது.

ஜியோ 4ஜி சலுகையானது எந்தெந்த 4ஜி ஸ்மார்ட்போன்களில் கிடைக்கப்பெறுகிறது என்ற தேடல் ஒருபக்கம் நிகழ மறுபக்கம் 4ஜி ஸ்மார்ட்போனில் மட்டும் தான் ஜியோ சிம்மை பயன்படுத்த முடியுமா..? - என்பது உங்கள் கேள்வி என்றால், இதோ உங்களுக்கான எங்கள் பதில்..!

எளிய வழிமுறை :

எளிய வழிமுறை :

4ஜி ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்ல நீங்கள் டாங்கில் போன்ற சாதனங்களை பயன்படுத்தியும் ஜியோ சேவைகளை பெற முடியும். அப்படியாக ஜியோ சிம்மை டாங்கிலில் பயன்படுத்துவது எப்படி என்ற எளிய வழிமுறைகளைத்தான் இங்கு தொகுத்துள்ளோம்.

4ஜி ஆதரவு :

4ஜி ஆதரவு :

உங்கள் ஜியோ சிம் கார்டை ஏர்டெல் அல்லது 4ஜி ஆதரவு கொண்ட வேறு எந்த டாங்கில் உடனும் இணைக்கலாம்.

கனெக்ட் :

கனெக்ட் :

இணைத்தபின்பு உங்கள் பிசி அல்லது லேப்டாப் உடன் உங்கள் டாங்கிலை இணைத்து கனெக்ட் ஆகும் வரை காத்திருக்கவும்.

நோட்டிபிக்கேஷன் :

நோட்டிபிக்கேஷன் :

உங்கள் டாங்கில் கனெக்ட் ஆன பின்பு நோட்டிபிக்கேஷன் ஒன்றிற்காக காத்திருக்கவும். ஒருவேளை உங்களுக்கு அந்த நோட்டிபிக்கேஷன் கிடைக்கப்பெறவில்லையெனில் உங்கள் டாங்கில் செட்டிங்ஸ் செல்லவும்.

 விண்டோஸ் :

விண்டோஸ் :

நீங்கள் விண்டோஸ் 8 அல்லது அதற்கு பின்வந்த இயங்குதளங்களை பயன்படுத்தினால், நோட்டிபிக்கேஷன் பேனல் சென்று ஏபிஎன் செட்டிங்ஸ் சென்று அக்சஸ் நேம் : ஜியோநெட் என்று மாற்றியமைக்கவும்.

அக்சஸ் நேம் :

அக்சஸ் நேம் :

அக்சஸ் பாயிண்ட் பெயரை மாற்றியமைத்த பின்பு மீதமுள்ள அனைத்து பத்திகளையும் காலியாக விட்டுவிட்டு ஓகே-வை கிளிக் செய்யவும்.

ஏபிஎன் :

ஏபிஎன் :

சில டாங்கில்கள் தானாக ஏபிஎன் தேர்வை நிகழ்த்திக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ப்ரவுஸரை திறந்து பார்த்து இணைய இணைப்பை சரிபார்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம்.

இணைய பக்கம் :

இணைய பக்கம் :

ஒருவேளை எந்த இணைய பக்கம் திறக்கபப்ட்ட முடியவில்லை எனில் நீங்கள் மேனுவலாக ஏபிஎன் செட்டிங்ஸ்தனை மாற்றியமைக்க வேண்டும்.

இணைப்பு :

இணைப்பு :

மேலுள்ள வழிமுறைகளை எழலாம் சரியாக செய்தால் இணைய இணைப்பு பெற்று உங்கள் லேப்டாப் அல்லது கணினியில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை பயன்படுத்த முடியும்.

ரீபூட் :

ரீபூட் :

அல்லது ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் உங்கள் சிஸ்டம்தனை ரீபூட் செய்து மீண்டும் முயற்சிக்கவும்.

Best Mobiles in India

English summary
How to Use a Reliance Jio SIM in any Dongle, 5 Simple Steps. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X