3ஜி ஸ்மார்ட்போன்களிலும் ரிலையன்ஸ் ஜியோ சேவையைப் பயன்படுத்துவது எப்படி.??
ரிலையன்ஸ் ஜியோ மோகம் நாடெங்கும் அதிகரித்து வருகின்றது, மூன்று மாத காலத்திற்கு அன்-லிமிட்டெட் 4ஜி டேட்டா மற்றும் அழைப்பு சேவையை வழங்கினால் யார் தான் இந்தச் சேவையை வாங்காமல் இருப்பர்.
இதையும் பாருங்கள் : ரிலையன்ஸ் ஜியோ மற்றும் லைஃப் ஸ்மார்ட்போன் ரூ.199 மட்டுமே??
ஜியோ 4ஜி சேவைக் குறித்த பல்வேறு தகவல்களை ஏற்கனவே வழங்கி இருந்தோம். இதில் அதிகபட்ச போலி சலுகைகள் இடம் பெற்றிருந்தது என்றாலும் பல்வேறு இதர நிறுவனங்களின் 4ஜி கருவிகளிலும் ஜியோ 4ஜி சேவை வேலை செய்யும் என்ற தகவல்கள் அவ்வப்போது வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்கள் : பெரும்பாலான 4ஜி கருவிகளுக்கு ஜியோ சிம் விநியோகம்.!?
அடுத்து வரும் ஸ்லைடர்களில் 3ஜி சேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் ரிலைன்ஸ் ஜியோ 4ஜி சேவையினை பயன்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு பயன்படுத்தி 3ஜி வேகம் தான் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவை
3ஜி கருவியில் ஜியோ சேவை பயன்படுத்த உங்களது கருவியில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் அல்லது அதற்கும் அதிகமான ஆண்ட்ராய்டு இயங்குதளமும், மீடியாடெக் சிப்செட் கொண்டிருக்க வேண்டும்.

கவனம்
இந்த வழிமுறைகளைப் பின்பற்றும் போது என்ன செய்கின்றோம் என்பதில் கவனமாக இருப்பது அவசியமாகும்.

இன்ஸ்டால்
முதலில் எம்டிகே இன்ஜினியரிங் மோட் (MTK Engineering Mode) எனும் செயலியை டவுன்லோடு செய்து உங்களது கருவியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

செயலி
இந்த ஆப் எம்டிகே போனின் இன்ஜினியரிங் மோடு மெனுவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பினை இயக்கும். இது சர்வீஸ் மோட் (Service Mode) என்றும் அழைக்கப்படுகின்றது.

குறியீடு
எம்டிகே செயலியை டவுன்லோடு செய்து அதனினை கருவியில் இன்ஸ்டால் செய்ததும் மொபைல் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

செட்டிங்ஸ்
பின் எம்டிகே செட்டிங்ஸ் ஆப்ஷனினை கிளிக் செய்து சரியான நெட்வர்க் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் சரியான நெட்வர்க் மோடினை தேர்வு செய்து கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

குறிப்பு
இந்த வழிமுறையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கிஸ்பாட் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

இதையும் பாருங்கள்
50% வரை தள்ளுபடி : பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு.!!
ஜியோ அன்லிமிட்டெட் சேவைப் பெறும் புதிய நிறுவனம், நீங்க ரெடியா.?


Click it and Unblock the Notifications