கணினி வேகத்தை அதிகரிக்க பென் டிரைவ் போதும்.!!

By Staff
|

கம்ப்யூட்டர் வேகமும், நம்ம ஊர் வானிலையும் ஒன்னு தான், கணிக்கவே முடியாது. நேரம் இருக்கும் போது விளையாட அதிக வேகத்தில் இயங்கி நம்மையே அதிசயிக்க வைக்கும். இதுவே அவசரமாக ஏதேனும் செய்ய நினைத்து கம்ப்யூட்டரை திறந்தால் ஆமையை விட மெதுவாக இயங்கி வெறுப்பேற்றும்.

கணினி வேகத்தை அதிகரிக்க பென் டிரைவ் போதும்.!!

காரணம் இல்லாமல் கம்ப்யூட்டர் வேகம் குறையும் போது, வைரஸ் ஸ்கேன், ரீஸ்டார்ட் போன்ற பலவற்றை முயற்சித்திருப்பீர்கள். வழக்கமான முறைகளில் பலன் இல்லாத போது கம்ப்யூட்டரின் ரேம் அளவினை அதிகரிக்கலாம். உடனே பல ஆயிரங்களை செலவு செய்யனுமேனு டெரர் ஆகாதீங்க. குறைந்த செலவில் ரேம் செய்ய பென் டிரைம் மட்டும் போதும்..!!

1

1

கம்ப்யூட்டரின் ரேம் அளவினை பென் டிரைவ் கொண்டு அதிகரிப்பது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

2

2

கம்ப்யூட்டரில் யுஎஸ்பி பென் டிரைவ் நுழைத்ததும் ஆட்டோ ப்ளே எனேபிள் செய்திருத்தல் அவசியம் ஆகும்.

3

3

இவ்வாறு ஆட்டோ ப்ளே எனேபிள் செய்யப்பட்டிருக்கும் போது மெனுவில் கணினியின் வேகத்தை அதிகப்படுத்த கோரும் "Speed Up My System" என்ற வாசகத்தை திரையில் பார்க்க முடியும். இதை கொண்டு ரெடிபூஸ்ட் செய்ய முடியும்.

4

4

அடுத்து கணினியின் திரையில் இருக்கும் "ReadyBoost" என்ற டேபினை க்ளிக் செய்ய வேண்டும். முழு பென் டிரைவினையும் ரேம் அதிகரிக்க பயன்படுத்த வேண்டும் எனில் "Dedicate this device to ReadyBoost" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

5

5

ஒரு வேலை குறைந்த அளவு மெமரியை மட்டும் பயன்படுத்த வேண்டுமெனில் "Use this device" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து தேவையான மெமரி அளவினை தேர்வு செய்து "OK" என்ற பட்டனை க்ளிக் செய்யலாம்.

6

6

அடுத்து drive letter ஆப்ஷனை ரைட் க்ளிக் செய்து properties ஆப்ஷனில் ReadyBoost டேபினை தேர்வு செய்ய வேண்டும்.

7

7

பின் பென் டிரைவினை ரேம் போன்று இயக்கும் ஆப்ஷனை கண்டறிந்து உங்களின் கம்ப்யூட்டருக்கு ஏற்ற அளவு ரேம் குறிப்பிட வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Use a Pen Drive as RAM. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X