கையில சுத்தமா காசு இல்லயா.? அப்போ ஜியோமணி தான் ஆபத்பாண்டவன்.!
உங்கள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட் ராய்டு ஸ்மார்ட்போனில் ஜியோமணி ஆப்பை பயன்படுத்த, மற்றும் எளிதாக ஒரு பணமில்லா நாளை செலவிட முடியும். அதெப்படி.?
பேடிஎம், ப்ரீசார்ஜ், மொபிவிக் போன்ற ஒரு கடினமான போட்டியை அளிக்கும் ஆப்ஸ்களுக்கு மத்தியில் ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோமணி ஆப் முக்கியமாக பயன்படுத்தப்படும் ஒரு ஆப்பாக திகழ்கிறது. குறிப்பாக ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுகள் மீதான தடை விதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஜியோமணி ஆப் நிச்சயமாகவே ஒரு ஆபத்பாண்டவன் தான்.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களின் அன்றாட வாழ்க்கைமுறையை எளிதாக்க ஆப்ஸ் தொகுப்பு ஒன்றை வழங்குகிறது. அதில் ஜியோமணி என்ற ஒரு பணப்பை சேவையும் அடக்கம். பயனர்கள் பண பரிமாற்றத்தை எளிதாக கையாளும் நோக்கத்தில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய இருவருக்கும் கிடைக்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

செலவுகளை கட்டுப்படுத்த உதவும்
ஜியோமணி பயன்பாட்டை கொண்டு பயனர்கள் தங்கள் மொபைல் எண்கள் ரீசார்ஜ்,ம் கடைகளில் பண பரிமாற்றம் ஆகியவைகளை நிகழ்த்த உதவுகிறது மற்றும் கவர்ச்சிகரமான கூப்பன்களையும் வழங்குகிறது. மற்றும் பயனர்கள் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த உதவும் நோக்கில் பல தள்ளுபடி கூப்பன்களையும் வழங்குகிறது

ஸ்மார்ட் வாடிக்கையாளராக வேண்டுமா..?
கையில் சுத்தமாக பணமில்லாத ஒரு நாளையும் கூட ஜியோமணி ஆப் கொண்டு எளிமையாக கடக்க முடியும் அப்படியாக நீங்களும் ஸ்மார்ட் வாடிக்கையாளராக வேண்டுமா..? சரி ஜியோமணியில் பணம் சேர்ப்பது எப்படி மற்றும் பயனர் தங்கள் தேவைக்கேற்ப ஆன்லைன் கட்டணம் செலுத்துவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

வழிமுறை #01
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு பயனர்களுக்கும் கிடைக்கும் ஜியோமணி ஆப்பை முதலில் பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவவும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02
பயன்பாடு வெற்றிகரமாக உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிய பின்னர், நீங்கள் இப்போது வெறுமனே பயன்பாட்டை திறந்து உங்கள் விவரங்கள் மற்றும் மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம் பயன்பாட்டில் உங்களை பதிவு செய்யலாம்.

வழிமுறை #03
பயன்பாடு உங்கள் பெயர், பிறந்த தினம், பாலினம், மற்றும் கடவுச்சொல்லைபதிவு செய்ய கேட்கும். கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிட்டு உறுதிப்படுத்திய பின்னர் "நான் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்கிறேன்" என்பதை டிக் செய்து மற்றும் ரிஜிஸ்டர் செய்யவும். பின்னர், ஓடிபி சரிபார்க்கப்பட்டு உங்கள் அக்கவுண்ட் தொங்கப்படும்.

வழிமுறை #04
இப்போது நீங்கள் உங்களுக்கான 4 இலக்க எம்பின் (MPIN) அமைக்க முடியும், மற்றும் அதை மீண்டும் பதிவு செய்வதின் மூலம் வெற்றிகரமாக ஜியோமணி ஆப் பதிவை நிகழ்த்தி முடிப்பீர்கள். இப்போது பணம் இருக்கிறதோ இல்லையோ ஜியோமணி உங்களின் பில்கள், ரீசார்ஜ், பரிவர்த்தனை ஆகியவைகளை நிகழ்த்த உதவும்

மேலும் படிக்க
வேலை செய்யும் அருகாமை ஏடிஎம்-களை கண்டுபிடிக்க ஒரு ஸ்மார்ட் ஐடியா.!


Click it and Unblock the Notifications