4ஜி டாங்கிளில் ரிலையன்ஸ் ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி??

Written By:

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல்வேறு நிறுவனங்களை ரிலையன்ஸ் ஜியோ கோபமடைய செய்திருக்கின்றது. 4ஜி சேவையை மிகக் குறைந்த விலையில் வழங்கியிருப்பது பயனர்களான நமக்கு நல்ல செய்தி என்றாலும் அதிக விலைக்கு வியாபாரம் செய்து வந்த மற்ற நிறுவனங்களுக்குக் கெட்ட செய்தியாகவே இருக்கும். பல்வேறு 4ஜி ஸ்மார்ட்போன்களில் நீட்டிக்கப்பட்டிருக்கும் ஜியோ 4ஜியின் பிரத்தயிகே அறிமுக சலுகை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றனர்.

4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஜியோ சிம் பெற்றவர்கள் ஏராளமான டவுன்லோடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் இதே சேவையை டாங்கிளிலும் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் நம்மவர்களுக்கு எழுந்துள்ளது. இந்தச் சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது. 4ஜி டாங்கிளில் ஜியோ சிம் சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இணைப்பு

இணைப்பு

முதலில் ஜியோ சிம் கார்டினை மோடெம் அல்லது டாங்கிளில் பொருத்தி கணினியுடன் அதனினை இணைக்க வேண்டும். இணைத்த பின் இண்டர்நெட் கனெக்ஷனிற்கு காத்திருக்க வேண்டும்.

ஏபிஎன்

ஏபிஎன்

முந்தைய ஆப்ஷன் மூலம் இணடர்நெட் இணைப்பு கிடைத்து விட்டால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு வேலை இணைப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ஏபிஎன் மூலம் இண்டர்நெட் இணைப்பைச் சரி செய்ய முடியும்.

கணினி

கணினி

ஏபிஎன் முறையைப் பின்பற்றும் போது முதலில் கணினியின் நோட்டிபிகேஷன் பட்டனினை கிளிக் செய்து மோடெம் நெட்வர்க் கனெக்ஷன் -- பிராப்பர்டீஸ் ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

ஜியோ நெட்

ஜியோ நெட்

அடுத்து ப்ரோஃபைல் சென்று ஏபிஎன் ஆப்ஷனில் jionet எனப் பதிவு செய்து Ok பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் இண்டர்நெட் வசதி கிடைத்துவிடும்.

மோடெம்

மோடெம்

அடுத்து உங்களது மோடெம் அல்லது 4ஜி டாங்கிளில் கிளிக் செய்து செட்டிங்ஸ் -- ப்ரோஃபைல் மேனேஜ்மென்ட் -- ஏபிஎன் ஆப்ஷனில் Jionet பதிவு செய்ய வேண்டும். இந்த வழிமுறைகளில் உங்களது மோடெம் அல்லது டாங்கிள் மூலம் இண்டர்நெட் வசதி இணைக்கப்பட்டு விடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
How To Use Jio 4G Sim in Modem or Dongle Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot