Home
How to

ஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி?

சர்ச் மட்டுமின்றி கூகுள் அசிஸ்டண்ட் மின்விளக்குகளை ஆன்/ஆஃப் செய்வது, வைபை ஆன்/ஆஃப் உள்ளிட்டவற்றை வாய்ஸ் கமான்ட் மூலம் மேற்கொள்ள வழி செய்கிறது.

By Meganathan S

2016-ம் ஆண்டு கூகுளின் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் அசிஸ்டண்ட் என்ற பெயரில் அறிமுகமான இந்த விர்ச்சுவல் அசிஸ்டண்ட் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் என போட்டி நிறுவனங்கள் வழங்கி வரும் சிரி, கார்டனா மற்றும் அலெக்சா உள்ளிட்டவை போன்றே இயங்குகிறது.


கடந்த சில ஆண்டுகளில் கூகுள் அசிஸ்டண்ட் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகளை வழங்கி வருகிறது. தற்சமயம் கூகுள் அசிஸ்டண்ட் ஆன்ட்ராய்டு மட்டுமின்றி ஐஓஎஸ் இயங்குதளம் மற்றும் ஸ்மார்ட் டிவி, குளிர்சாதன பெட்டி மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்ற IoT (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) சாதனங்களிலும் வழங்கப்படுகிறது.

 கூகுள் அசிஸ்டண்ட்

கூகுள் அசிஸ்டண்ட்

சர்ச் மட்டுமின்றி கூகுள் அசிஸ்டண்ட் மின்விளக்குகளை ஆன்/ஆஃப் செய்வது, வைபை ஆன்/ஆஃப் உள்ளிட்டவற்றை வாய்ஸ் கமான்ட் மூலம் மேற்கொள்ள வழி செய்கிறது. உங்களது ஸ்மார்ட்போனிலும் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் அசிஸ்டண்ட்-ஐ டவுன்லோடு, இன்ஸ்டால் செய்வது எப்படி?

கூகுள் அசிஸ்டண்ட்-ஐ டவுன்லோடு, இன்ஸ்டால் செய்வது எப்படி?

பெரும்பாலான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுள் அசிஸ்டண்ட் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இன்ஸ்டால் செய்யப்படவில்லை எனில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆப்பிள் ஐபோன் அல்லது ஐபேட் பயனர்கள் தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம்.

கூகுள் அசிஸ்டன்ட் செட்டப் செய்வது எப்படி?

கூகுள் அசிஸ்டன்ட் செட்டப் செய்வது எப்படி?

கூகுள் அசிஸ்டண்ட் சேவையை ஸ்மார்ட்போனில் செட்டப் செய்வது மிகவும் எளிமையான காரியம். தான்.

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செட்டப் செய்ய:


1 - ஹோம் பட்டனை அழுத்தி பிடித்து கூகுள் அசிஸ்டண்ட்-ஐ ஆக்டிவேட் செய்யலாம்.


2 - விதிமுறைகளை ஏற்க கோரும் Agree பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


3 - வாய்ஸ் கமான்ட்-ஐ ஆக்டிவேட் செய்து, Continue பட்டனை க்ளிக் செய்து Ok Google ஆப்ஷனை ஆன் செய்தால் அடுத்த திரை திறக்கும்.


4 - இனி உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.

ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் செட்டப் செய்ய

ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் செட்டப் செய்ய

1 - கூகுள் அசிஸ்டண்ட் செயலியை திறக்க வேண்டும்.


2 - செயலியில் வரும் உத்தரவுகளை பின்பற்றவும்.


3 - இனி Ok Google டிடெக்ஷன் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.


4 - அடுத்து செயலி உங்களை 'Ok Google' மற்றும் 'Hey Google' கமான்ட்களை நான்கு முறை சொல்ல செய்யும்.


5 - மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றியதும், 'OK Google' கமான்ட் மூலம் கூகுள் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்தலாம்.

வாய்ஸ் மேட்சிங் சேவையை செட்டப் செய்ய:

வாய்ஸ் மேட்சிங் சேவையை செட்டப் செய்ய:

வாய்ஸ் மேட்சிங் அம்சத்தை இயக்கினால் செயலி தானாக ஆக்டிவேட் ஆவதை நிறுத்த முடியும். இந்த அம்சம் மூலம் கூகுள் உங்களது குரலை புரிந்து கொண்டு அதன் பின் செயலியை இக்கும். வாய்ஸ் மேட்சிங் அம்சத்தை செட்டப் செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

1 - கூகுள் செயலியை திந்து மேல்புறம் வலதுபக்கமாக இருக்கும் மூன்று கோடுகளை க்ளிக் செய்யவும்.


2 - கூகுள் அசிஸ்டன்ட் பகுதியில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து மீண்டும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


3 - போன் ஆப்ஷனை க்ளிக் செய்து Ok Google டிடெக்ஷனை ஆன் செய்ய வேண்டும்.


4 - அடுத்து செயலி உங்களை 'Ok Google' மற்றும் 'Hey Google' கமான்ட்களை நான்கு முறை சொல்ல செய்யும்.


5 - இனி உங்களது குரலை சேமிக்க 'Done' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


6 - இறுதியில் வாய்ஸ் மேட்ச் ஆப்ஷன் மூலம் அன்லாக் செய்யக்கோரும் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இதன் மூலம் கூகுள் அசிஸ்டண்ட் கொண்டே உங்களது மொபைலை அன்லாக் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
How to use Google Assistant on your iPhone and Android smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X