ஆன்ட்ராய்டில் கூகுள் ஏஎம்பி ஸ்டோரீஸ் பயன்படுத்துவது எப்படி?

|

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் மூலம் ஏஎம்பி ஸ்டோரீஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ள இடுகைகளுக்கு ஒத்தாற் போன்ற உள்ளடக்கங்களை, இணையதள வெளியீட்டாளர்களால் உருவாக்க முடியும். இந்த ஏஎம்பி ஸ்டோரீஸை ஆன்ட்ராய்டில் கண்டறிய, பல்வேறு முறைகளை நாம் பயன்படுத்தலாம்.

ஆன்ட்ராய்டில் கூகுள் ஏஎம்பி ஸ்டோரீஸ் பயன்படுத்துவது எப்படி?

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் மூலம் ஏஎம்பி ஸ்டோரீஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ள ஸ்டோரீஸை ஒத்தாற் போன்ற உள்ளடக்கங்களை, இணையதள வெளியீட்டாளர்களால் உருவாக்க முடியும். முடுக்குவிக்கப்பட்ட மொபைல் பக்கம் என்று அழைக்கப்படும் இதை பயன்படுத்தி, உள்ளடக்கங்களை அதிவேகமாக லோடிங் செய்யவும், மற்ற செய்தி கட்டுரைகளைப் போல பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

ஒரு தொழில்நுட்ப பகுதியில் இருந்து ஸ்டோரீஸை முடிந்த வரை எளிமையான முறையில் தயாரிக்க வேண்டும் என்பதே ஏஎம்பி ஸ்டோரீஸின் நோக்கமாக உள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் அளிக்கப்படுகிறது என்றாலும், மாற்றி அமைக்கக்கூடிய லேஅவுட் டெம்பிளேட்கள், தரமான யூஐ கன்ட்ரோல்கள் மற்றும் பகிர்ந்து கொள்ளக் கூடிய காரியங்கள் மற்றும் பின்தொடர வேண்டிய உள்ளடக்கத்தை சேர்ப்பது ஆகியவற்றை கொண்டுள்ளது.

சுமார் 9,00,000 டொமைன்களில் 2 பில்லியனுக்கும் அதிகமான ஏஎம்பி பக்கங்கள் இருப்பதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த ஏஎம்பி ஸ்டோரீஸை ஆன்ட்ராய்டில் கண்டறிய, பல்வேறு முறைகளை நாம் பயன்படுத்தலாம்.

ஏஎம்பி ஸ்டோரீஸை அமைப்பது

ஏஎம்பி ஸ்டோரீஸ் இருப்பிடத்தை அமைக்க, உங்கள் மொபைல்போனில் உள்ள க்ரோம் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி g.co/ampstories-க்கு செல்ல வேண்டும். அதன்பிறகு, தற்போது தங்கள் பணியில் ஈடுபட்டு வரும் சிஎன்என், மிக், எஸ்பிநேஷன், த வாஷிங்டன் போஸ்ட், காஸ்மோபொலிட்டன், வயர்டு, பிப்பிள் மற்றும் மாஷாபிள் போன்ற வெளியீட்டாளர்களில் ஏதாவது ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்ட வெளியீட்டாளர்களில் ஏதாவது ஒருவரின் பெயரை தட்டச்சு செய்யும் போது, வழக்கமான தேடலுக்கான தீர்வு பக்கத்தை நீங்கள் காண முடிகிறது. இப்போது "விஷ்வல் ஸ்டோரீஸ்" என்ற பிரிவை காணும் வரை, கீழ் நோக்கி உருட்டவும். இங்குள்ள ஏதாவது ஸ்டோரீஸை காண அல்லது அவற்றை படிக்க வேண்டுமானால், அதன் மீது தட்டினால் போதுமானது.

ஏஎம்பி ஸ்டோரீஸ் வழிக்காட்டி

நீங்கள் ஏஎம்பி பக்கத்தில் இருக்கும் பட்சத்தில், ஒரு கட்டுரைக்குள் வழிநடத்தி செல்வது என்பது ஏறக்குறைய இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளே செல்வது போன்றே உள்ளது. கட்டுரையின் உள்ளே இருக்கும் போது, திரையின் இடதுபக்கத்தில் தட்டுவதன் மூலம் பழைய பக்கத்திற்கு திரும்பி செல்ல முடியும். மேலும், ஒரு சில ஏஎம்பி ஸ்டோரீஸில் ஒலியும் உட்படுத்தப்பட்டதாக இருக்கும். ஒலி இணைக்கப்பட்ட பக்கத்தின் ஒலியை முடக்க வேண்டுமானால், இடைமுகத்தின் மேற்பகுதியில் வலது முனையில் உள்ள சிறிய இசை ஐகானை பயன்படுத்தினால் போதும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

நீங்கள் கட்டுரையை படிக்கும் போது, திரையின் மேற்பகுதியில் இருந்து கீழ் நோக்கி நகர்த்தினால், நீங்கள் கடந்து வந்த முந்தைய கூகுள் தேடல் பக்கத்திற்கு மீண்டும் அழைத்து செல்லப்படுவீர்கள். கூகுள் ஏஎம்பி திட்டத்தின் பொறியியல் முன்னோடியான மால்ட் யூபிஎல் வெளியிட்டுள்ள ஒரு பிளாக் இடுகையில், ஏஎம்பி ஸ்டோரீஸை எளிய முறையில் பகிர்ந்து கொள்ள அல்லது இணைக்க முடியும். ஏனெனில் அவை இணையதளத்தில் நேரலையாக இருப்பவை என்பதோடு, வெளியீட்டாளரின் தளத்தில் அளிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 8110 (2018).!2.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 8110 (2018).!

Best Mobiles in India

Read more about:
English summary
Google has recently launched AMP Stories, that lets the website publishers create content similar to Stories on Instagram and Facebook. You can find the AMP stories on Android by a couple of methods. Check it here. AMP stories aim to make the production of stories as easy as possible from a technical perspective.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X