இன்ஸ்டாகிராமில் ஜிஐஎப் ஸ்டிக்கர்ஸை பயன்படுத்தும் வழிமுறை

  பேஸ்புக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்படும் ஒரு கூட்டம் அம்சங்களுக்கு அதிக வரவேற்பை பெற்று வருகிறது. புகைப்படங்களைப் பகிரும் அப்ளிகேஷனான இன்ஸ்டாகிராமில் ஜிஃப்பி சேர்க்கப்பட்டு, இன்ஸ்டாகிராமின் ஸ்டிக்கர்ஸ் டேப்பின் ஒரு பகுதியாக ஜிஐஎஃப் ஸ்டிக்கர்ஸ் சமீபத்தில் சேர்த்து கொள்ளப்பட்டது.

  இன்ஸ்டாகிராமில் ஜிஐஎப் ஸ்டிக்கர்ஸை பயன்படுத்தும் வழிமுறை

  ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-சின் பதிப்பு 29-ன் பகுதியாக ஜிஐஎஃப் ஸ்டிக்கர்ஸ் கிடைக்கப் பெறும். பயனர்கள் வெளியிடும் ஒரு ஸ்டோரியில் சேர்க்கப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள், எந்த அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற மற்றொரு புதுப்பிப்பு, அடுத்துவரும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

  இது, முந்தைய இன்ஸ்டாகிராம் ஃபீடில், விரும்பிய அளவு இடுகைகளை வெளியிடுவதற்கு ஒத்துள்ளது. அந்த முறையில் படத்தின் மீது இரு விரல்களைச் சேர்த்து படத்தை சுருக்கி, படத்தின் உண்மையான அளவுகளிலேயே உள்ளடக்கத்தை பகிர முடிந்தது.

  இதை அதிகாரபூர்வமாக வெளியிடும் முன், கடந்தாண்டு நவம்பர் மாதம் ஜிஐஎஃப் பரிசோதனைத் துவக்கப்பட்டது.

  15கே பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன் இதுதான்பா.!

  படி 1: உங்கள் ஸ்டோரிகளில் ஜிஐஎஃப்-யைச் சேர்க்க, ஒரு படத்தின் மீது கிளிக் செய்த அல்லது கேலரியில் இருந்து தேர்ந்தெடுத்த ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் டேப்-பில் ஒரு வீடியோவை பதிவு செய்யவும்.

  படி 2: இப்போது திரையின் மேல் வலதுபுறத்தில் உள்ள ஸ்டிக்கர்ஸ் ஐகானை கிளிக் செய்யவும். இதில் இருக்கும் ஜிஐஎஃப் பொத்தானைப் பயன்படுத்தி, நீங்கள் தேர்ந்தெடுத்த உள்ளடக்கத்தில் (புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்) அனிமேட்டேட் ஸ்டிக்கர்ஸை சேர்க்கவும்.

  படி 3: அதன் மீது கிளிக் செய்த உடன், பிரபலமான ஜிஐஎஃப் ஸ்டிக்கர்ஸ்-களின் பட்டியலைக் காணலாம். அதில் உள்ள விருப்பமான ஒரு ஸ்டிக்கர்ஸை பயனர் தேர்ந்தெடுத்து, உள்ளடக்கத்தின் (புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்) எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

  படி 4: இது தவிர, ஜிஐஎஃப்-பின் அளவை மாற்றியமைக்கலாம் என்பதோடு, கூடுதலாக ஸ்டிக்கர்ஸ் மற்றும் உரையைச் சேர்க்கலாம். நிறுவனத்தின் கூற்றுபடி, உங்கள் கீவேர்டுகளின் தேடல்கள், ஜிஃப்பி-யின் டேட்டாபேஸில் அதிக தேர்வுகளை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

  ஜிஐஎஃப்-களைப் பொறுத்த வரை, உங்கள் தேடல், வார்த்தைகள் அடிப்படையிலான ஜிஐஎஃப்-களாக இருந்தால், "வேர்டு ஆர்ட்"-களில் பார்க்க வேண்டும். 'திறன்கள்' (எஃப்பேர்ட்) சம்பந்தப்பட்ட தேடலாக இருந்தால், பிரகாசமான அல்லது வானவேடிக்கைகள் போன்றவற்றை அளிக்கும்.

  How to Find a domain easily for your business (TAMIL)

  மேலும் 'உதிரிப் பாகங்கள்' தொடர்பான தேடலாக இருந்தால், பென்னி காதுகள், உதடு-நக்கும் வாய்கள், ஆட்டும் நாக்குகள் மற்றும் பலவற்றை அளிக்கும். இவற்றை முகங்களுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஜியோ அதிரடி: ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.799/- கிடைக்கும்; இதை பெறுவது எப்படி.?

  முடிந்த அளவிலான காம்போ (வாய்ஸ் + டேட்டா) நன்மைகளை வழங்கிய முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

  இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் மற்றும் ங்அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவைகள் ஜியோவைப்போன்றே பெரும்பாலான திட்டங்களில் நன்மைகளை வழங்கிவருவதால் ஜியோ அதற்கும் ஒருபடி மேல் சென்று கேஷ்பேக் சலுகைகளை வழங்கி வருகிறது.

  பெறுவது எப்படி.?

  அப்படியாக ஜியோப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் புதிய கேஷ்பேக் வாய்ப்பானது நம்பமுடியாத வண்ணம் 200% அளவிலான பணத்தை திருப்பி தருகிறது. இந்த கேஷ்பேக் வாய்ப்பை பெறுவது எப்படி.? என்பதை விரிவாக காண்போம்.!

  குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில்

  இந்த 200% அளவிலான கேஷ்பேக் வாய்ப்பானது ரூ.399/- அல்லது அதற்கும் மேலான ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதை நிகழ்த்துவதின் மூலம் நீங்கள் ரூ.799/- வரையிலான லாபத்தை பெறலாம். சுருக்கமாக சொன்னால் ஜியோ நிறுவனமானது 200% நன்மைகளை குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில் வழங்குகின்றது

  முதலில் 100% கேஷ்பேக்

  இந்த வாய்ப்பைப் பற்றி பேசுகையில், உங்கள் ஜியோ எண்ணில் இருந்து ரூ.399/- என்கிற குறைந்தபட்ச ரீசார்ஜை நிகழ்த்தினால் ரூ.50/- மதிப்பிலான எட்டு ரீசார்ஜ் வவுச்சர்கள் உங்களுக்கு கிடைக்கும். அதாவது மொத்தம் ரூ.400/- மதிப்பிலான 100% கேஷ்பேக்கை முதலில் பெறுவீர்கள்.

  ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி

  ரூ.50/-ஐ தள்ளுபடி ஜியோவில் இருந்து எதிர்கால ரீசார்ஜ்களை நிகழ்த்தும் போது, உங்களுக்கு கிடைக்கும் கெஸ்பேக் ரீசார்ஜ் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான சொற்களில் உங்களின் அடுத்த ரீசார்ஜ்ஜில் ரூ.50/- மதிப்பிலான ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடியாக பெறலாம்.

  மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி

  ரூ.799/- என்கிற கேஷ்பேக்கில் ரூ.400/- இப்படி கழிய, மீதமுள்ள ரூ.399/- ஆனது வாடிக்கையாளர்களுக்கு மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளின் வேலட்களின் வழியாக, வேறுபட்ட மதிப்புக்கான கேஷ்பேக் வாய்ப்புகளாக கிடைக்கும்.

  ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள்.

  நீங்கள் மொபிவிக் வழியாக ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள். பேடிஎம் வழியாக பணம் செலுத்துகிறீர்கள் என்றால் அதன் பின் நிகழ்த்தும் முதல் முறை திரைப்பட டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ.150/- சலுகை கிடைக்கும் அதாவது 50% கேஷ்பேக் கிடைக்கும்.

  ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக்

  ஜியோ வழங்கும் இந்த 200% வாய்ப்பானது கடந்த பிப்ரவரி 1, 2018 தொடங்கி பிப்ரவரி 15, 2018 வரை மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளை பொறுத்தமட்டில் புதிய ரீசார்ஜ் பயனர்களுக்கு முறையே ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக்கும், ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கு முறையே ரூ.30, ரூ.50. ரூ.30/- மற்றும் ரூ.30/- என்கிற கேஷ்பேக்கும் கிடைக்கும்.

  இது நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும்

  கடந்த அக்டோபர் முதல் ஜியோ அதன் பிரதம உறுப்பினர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளை தொடர்ச்சியான முறையின்கீழ் வழங்கி வருகிறது என்பதும் இந்த 200% கேஷ்பேக் ஆனது நிறுவனத்தின் நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Since the acquisition by Facebook, Instagram has evolved so much with a bunch of features that have been appreciated by millennials.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more