உடைந்த ஸ்மார்ட்போனினை கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்துவது எப்படி.??

Written By:

ஸ்மார்ட்போன் அமைவதும் ஒருத்தரோடு ராசியை பொறுத்ததாகி விட்டது. சிலருக்கும் தொல்லை கொடுக்கும் மொபைல் போன் பலருக்கு எவ்வித தொல்லையும் கொடுக்காமல் சீராக இயங்கும்.

எப்ப என்னவாகும் என யாராலும் சரியாக சொல்ல முடியாது. எது நடக்க வேண்டுமோ, அது கண்டிப்பாக நடந்தே தீரும். இது தான் வாழ்க்கை. இப்படி இருக்கும் போது 40,000 ரூபாய் ஸ்மார்ட்போன் எங்க, 4,000 ஸ்மார்ட்போன் எங்க இருந்தாலும் அது உடைய வேண்டும் என்றால் உடைந்தே தீரும்.

அப்படியாக உங்களது ஸ்மார்ட்போனும் கீழே விழுந்து டிஸ்ப்ளே உடைந்து விட்டதா. கவலை வேண்டாம், உடைந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் கருவியை கம்ப்யூட்டர் மூலம் இயக்கி உங்களது தரவுகளை மீட்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
யுஎஸ்பி:

யுஎஸ்பி:

டச் ஸ்கிரீன் உடைந்து திரை இன்னும் வேலை செய்கின்றது என்றால், யுஎஸ்பி ஓடிஜி (USB OTG) பயன்படுத்தி மவுஸை உங்களது கருவியுடன் இணைக்க முடியும். யுஎஸ்பி ஓடிஜி கேபிள் மொபைல் கருவிகளை மற்ற கருவிகளுடன் இணைக்கப் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக அனைத்து ஆண்ட்ராய்டு கருவிகளிலும் மினி-யுஎஸ்பி வழங்கப்பட்டுள்ளது.

பாஸ்வேர்டு:

பாஸ்வேர்டு:

உடைந்த ஆண்ட்ராய்டு கருவியில் மவுஸ் இணைக்கப்பட்டதும், கருவியை அன்லாக் செய்ய முடியும். கருவியைப் பாதுகாப்பாக வைக்க பாஸ்வேர்டு செட் செய்வது அவசியம் ஆகும்.

அன்லாக்:

அன்லாக்:

போன் அன்லாக் செய்யப்பட்டதும், அதனினை கம்ப்யூட்டருடன் இணைத்து தரவுகளை கம்ப்யூட்டருக்கு பரிமாறி கொள்ள முடியும்.

திரை:

திரை:

ஒரு வேலை டிஸ்ப்ளே வேலை செய்யவில்லை எனில், VNC மென்பொருள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். சந்தையில் இது போல் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கின்றன. இவை உங்களது கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்டு இன்டர்ஃபேஸ் வழங்கும். இதன் மூலம் உங்களது போனினை இயக்க முடியும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

இது போன்ற மென்பொருள்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்டு கருவிகளிலும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். கட்டண அடிப்படையில் இந்தச் சேவையை வழங்க பல்வேறு மென்பொருள்கள் இருக்கின்றன.

நிலையம்:

நிலையம்:

இவ்வாறு செய்தும் தரவுகளைப் பரிமாற்றம் செய்ய முடியவில்லை எனில் உங்களது கருவியினை அங்கீகரிக்கப்பட்ட சரி செய்யும் மையங்களுக்குக் கொண்டு செல்லலாம். ஆனால் இங்குச் சென்றால் பணம் அதிகமாகச் செலவாகலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
How to use broken smartphone from a PC Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot