ஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி?

இதை கொண்டு பயனர்கள் ஷார்ட்கட்களை உருவாக்கி அவற்றுக்கு சிரி மூலம் கமாண்ட்களை வழங்க முடியும். ஆப்பிள் செயலிகளுடன் பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கும் இவ்வாறு செய்ய முடியும்.

|

ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் அந்நிறுனம் ஷார்ட்கட்ஸ் செயலியை அறிமுகம் செய்தது. இத ஒருவித ஆட்டோமேஷன் செயலி என்ற வகையில் பயனர்களின் ஐஓஎஸ் சாதனங்களில் ஷார்ட்கட்களை உருவாக்க வழி செய்கிறது.


பயனரின் ஆப்பிள் சாதனத்தில் சிரியுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய ஷார்ட்கட்ஸ் தற்போதைய வொர்க்ஃப்ளோ செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.

செட்டிங்

செட்டிங்

இதை கொண்டு பயனர்கள் ஷார்ட்கட்களை உருவாக்கி அவற்றுக்கு சிரி மூலம் கமாண்ட்களை வழங்க முடியும். ஆப்பிள் செயலிகளுடன் பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கும் இவ்வாறு செய்ய முடியும். ஆப்பிள் சேவைகள் மற்றும் செட்டிங்-கள் பல்வேறு புதிய வசிதகளை வழங்கி வருகின்றன.

ஷார்ட்கட் செயலியை பயன்படுத்த முதலில் செய்ய வேண்டியவை:

ஷார்ட்கட் செயலியை பயன்படுத்த முதலில் செய்ய வேண்டியவை:

- ஐ.ஓ.எஸ். 12 பீட்டா கொண்ட ஐபோன் அல்லது ஐபேட் பயன்படுத்த வேண்டும்.

- சீரான இணைய இணைப்பு கொண்டிருக்க வேண்டும்

கஸ்டம் சிரி ஷார்ட்கட்களை உருவாக்குவது எப்படி?

கஸ்டம் சிரி ஷார்ட்கட்களை உருவாக்குவது எப்படி?

1 - முதலில் வொர்க்ஃப்ளோ (Workflow) செயலியை திறந்து, புதிய வொர்க்ஃப்ளோவினை உருவாக்க வேண்டும்.

2 - நீங்கள் உருவாக்கிய ஆக்ஷன் வொர்க்ஃப்ளோக்களை ஆக்ஷன்ஸ் ஆப்ஷன் மூலம் ஸ்வைப் செய்ய வேண்டும்.

3 - நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை சேமிக்க Done பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

சிரி ஷார்ட்கட்களுக்கு கஸ்டம் கமாண்ட்களை உருவாக்குவது எப்படி?

சிரி ஷார்ட்கட்களுக்கு கஸ்டம் கமாண்ட்களை உருவாக்குவது எப்படி?

1 - முதலில் செட்டிங் ஆப்ஷனில் சிரி மற்றும் சர்ச் (Siri & Search) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


2 - நீங்கள் சமீபத்தில் உருவாக்கிய வொர்க்ஃப்ளோவை தேடலாம். இதனை பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் (Recommended list) அல்லது More Shortcuts > Workflow ஆப்ஷன்களில் பார்க்க முடியும்.


3 - உங்களின் கமாண்ட்-ஐ பதிவு செய்ய வேண்டும்.


4 - நீங்கள் உருவாக்கிய கமாண்ட்-ஐ இயக்க, முதலில் Hey Siri பின் உங்களது கமாண்ட்-ஐ தெரிவிக்கலாம்.

ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு சார்ந்து டீப் சிரி இன்டகிரேஷனை ஷார்ட்கட்ஸ் செயலியில் எப்படி பயன்படுத்த வேண்டும்?

ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு சார்ந்து டீப் சிரி இன்டகிரேஷனை ஷார்ட்கட்ஸ் செயலியில் எப்படி பயன்படுத்த வேண்டும்?

எடுத்துக்காட்டுக்கு உங்களது வீட்டுக்கு நேவிகேட் செய்து, இசையை ஒலிக்க செய்து, பிரைட்னசை அதிகப்படுத்தி, டு நாட் டிஸ்டப்ர் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டுமெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை பின்பற்றலாம்.

1 - ஷார்கட்ஸ் செயலியை திறந்து புதிய ஷார்ட்கட்ஸ்-ஐ உருவாக்கக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

2 - செயலியின் மேல்பக்கமாக இருக்கும் சர்ச் பார் கொண்டு உங்களுக்கு செட் செய்ய வேண்டிய ஆக்ஷனை தேடி அதனை ஷார்ட்கட் போன்று செட் செய்யலாம். இங்கு ஆக்ஷனுக்கு மேப்ஸ்-ஐ தேர்வு செய்ய வேண்டும், இனி ஓபன் ஆப் Open app ஆப்ஷனை தேடி, செயலியை தேர்வு செய்ய வேண்டும்.

3 - நீங்கள் திறக்க வேண்டிய செயலியை தேர்வு செய்ய வேண்டும். இங்கு கூகுள் மேப்ஸ்-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

4 - அடுத்து மியூசிக் ஆக்ஷனை தேடி அதனை ஷார்ட்கட்-இல் சேர்க்க வேண்டும்.

5 - இனி பிரைட்னசை தேடி, பிரைட்னஸ் அளவை மாற்றி அதன் பின் டு நாட் டிஸ்டர்ப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

6 - ஷார்ட்கட் செயலியில் அனைத்து ஆக்ஷன்களையும் சேர்த்ததும் Done ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

7 - இனி Add to Siri ஸ்கிரீன் திறக்கும்.

8 - இங்கு உங்களின் ஷார்ட்கட் கமாண்ட்-ஐ பதிவு செய்ய வேண்டும்.

9 - எதிர்காலத்தில் பயன்படுத்த உங்களின் சொந்த ஐகானையும் ஷார்ட்கட்-இல் சேர்க்க முடியும்.

10 - இனி சிரியை திறந்து உங்களது ஷார்ட்கட்-க்கான கமாண்ட்-ஐ தெரிவிக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to use Apple's new Shortcuts app: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X