உங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி?

தற்சமயம் கூகுள் இதற்கென பிரத்யேக செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலியை ப்ளூடூத் வசதியுடன் மியூசிக் சிஸ்டம் கொண்ட அனைத்து கார்களிலும் பயன்படுத்த முடியும்.

|

2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சொந்த கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆன்ட்ராய்டு ஆட்டோ என்ற பெயரில் அறிமுகமான இந்த சேவையை இயக்க ஆன்ட்ராய்டு ஆட்டோ அம்சம் கொண்ட கார் அவசியம் இருக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் மூலம் கார்களில் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி?

தற்சமயம் கூகுள் இதற்கென பிரத்யேக செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலியை ப்ளூடூத் வசதியுடன் மியூசிக் சிஸ்டம் கொண்ட அனைத்து கார்களிலும் பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டு ஆட்டோ

ஆன்ட்ராய்டு ஆட்டோ

கார் பயணங்களை பாதுகாப்பானதாகவும், எளிமையாகவும் மாற்ற ஆன்ட்ராய்டு ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டது. எளிமையான மெனு ஸ்கிரீன் கொண்டிருக்கும் இந்த அம்சம் மியூசிக், நேவிகேஷன், அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் சார்ந்த விவரங்களை வழங்குகிறது. புதிய வசதியுடன் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்கப்பட்டு இருப்பதால், வாய்ஸ் கமான்ட் மூலமாகவும் இயக்க முடியும்.

ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்த தேவையானவை:

ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்த தேவையானவை:

- ஆன்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கும் அதிக இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்

- காருக்கான போன் மவுன்ட்

- ப்ளூடூத் டாங்கிள்

முதலில் செய்ய வேண்டியவை:

முதலில் செய்ய வேண்டியவை:

- கூகுள் பிளே ஸ்டோர் சென்று ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்

- ப்ளூடூத் அல்லது ஆக்ஸ் கேபிள் கொண்டு உங்களின் ஸ்மார்ட்போனினை காரின் மியூசிக் சிஸ்டத்துடன் இணைக்க வேண்டும்

ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஆட்டோ செட்டப் செய்யவும்:

ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஆட்டோ செட்டப் செய்யவும்:

- ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை திறந்து ‘Get started' பட்டனை க்ளிக் செய்யவும்

- இனி ‘Accept' பட்டனஐ க்ளிக் செய்ய வேண்டும்

- அடுத்து செயலிக்கு அவசியமான அனுமதியை வழங்க ‘Continue' பட்டனை க்ளிக் செய்யவும்

- செயலியில் இணைக்கப்பட்ட வேண்டிய ப்ளூடூத் சாதனத்தை தேர்வு செய்து ‘Turn on' பட்டனை க்ளிக் செய்யவும்

மனிதல் கொள்ள வேண்டியவை:

- ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை ஆட்டோமேட் செய்ய வேண்டும்

- இடது புறத்தில் உள்ள மெனு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

- செட்டிங்ஸ் ஆப்ஷனின் கீழ் சென்று ஆட்டோலான்ச் செய்ய ‘On' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

- இனி ‘Pocket detection' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- அடுத்து லேன்ட்ஸ்கேப் ரோடேஷனை (landscape rotation) லாக் செய்ய வேண்டும்

- போனினை லேன்ட்ஸ்கேப் மோடிற்கு மாற்ற வேண்டும்

- க்விக் மெனு ஆப்ஷனில் உள்ள ஆட்டோ ரோட்டேட் ஆப்ஷனை லாக் செய்ய வேண்டும்

- இனி "Ok Google" ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்

- திரையின் இடது புறம் காணப்படும் மூன்று கோடுகளை க்ளிக் செய்து செட்டிங்ஸ் மெனு செல்ல வேண்டும்

- இங்கு "Ok Google' ஆப்ஷனை க்ளிக் செய்து ‘Access with voice match' ஆப்ஷனில் Unlock with voice match' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- அனைத்து வழிமுறைகளையும் செய்து முடித்ததும், உங்களின் ஸ்மார்ட்போனினை காரில் மவுன்ட் செய்து, ப்ளூடூத் மூலம் இணைத்தால், செயலி தானாக லான்ச் ஆகிவிடும்.

ஆன்ட்ராய்டு ஆட்டோ மூலம் என்ன செய்ய முடியும்

ஆன்ட்ராய்டு ஆட்டோ மூலம் என்ன செய்ய முடியும்

- அழைப்புகளை மேற்கொள்ள முடியும், குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்ப முடியும், முக்கியமான நோட்டிஃபிகேஷன்களை பார்க்க முடியும்.

- நேவிகேஷன் ஆப்ஷன் மூலம் வழிதெரியாத இடங்களில் பயணம் செய்ய முடியும்.

- ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இசை மற்றும் ஸ்ட்ரீமிங் செயலியின் மூலமாகவும் இசையை கேட்க முடியும்.

- ஆன்ட்ராய்டு ஆட்டோவுக்கென உருவாக்கப்பட்டு இருக்கும் செயலிகளை டவுன்லோடு செய்யவும் முடியும்.

Best Mobiles in India

English summary
How to use Android Auto in any car using your smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X