அமேசான் பே செயலியில் இருந்து மொபைல் பிரிபெய்டு ரீசார்ஜ் செய்வது எப்படி?

By Siva
|

இகாமர்ஸ் வணிகத்தில் உலகின் முன்னணி இடத்தில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் தற்போது புதிய சேவையாக ஆன்லைன் மூலம் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.

அமேசானில் தற்போது ரீசார்ஜூம் வந்துவிட்டது

இப்போதைக்கு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் ரீசார்ஜ் செய்யும் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் விரைவில் அனைத்து சேவைகளும் இதில் உள்ளடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலி மற்றும் இணையதளம் என இரண்டு முறைகளிலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

அமேசான் நிறுவனத்தின் அமேசான் பே ஆப்ஷன் மூலம் ரீசார்ஜ் செய்வது ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் எலக்ட்ரானிக் வாலட் வசதியை ஒட்டியே அமைந்துள்ளது

ரீசார்ஜ் மட்டுமின்றி அமேசான் இந்தியாவின் அமேசான் பே மூலம் அதன் பார்ட்னர் இணையதளங்கள் உதவியுடன் உணவுகள் ஆர்டர் செய்வது, பேருந்து டிக்கெட்டுக்கள், சினிமா டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்வது உள்பட பல சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சரி இப்போது அமேசான் மூலம் பிரிபெய்டு மொபைல்களுக்கு ரீசார்ஜ் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்

அமேசானில் தற்போது ரீசார்ஜூம் வந்துவிட்டது

ஸ்டெப் 1: உங்கள் மொபைலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் அமேசான் செயலியை ஓப்பன் செய்யுங்கள்

ஸ்டெப் 2: தற்போது இடது புற ஓரத்தில் இருக்கும் மூன்று கோடுகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்யுங்கள்

அமேசானில் தற்போது ரீசார்ஜூம் வந்துவிட்டது

ஸ்டெப் 3: பின்னர் அதில் வரும் மெனுவில் இருந்து அமேசான் பே பேலன்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள்

ஸ்டெப் 4: இதில் மொபைல் ரீசார்ஜ் என்று இருக்கும் ஆப்சனை தேர்வு செய்யுங்கள்

ஸ்டெப் 5: தற்போது உங்கள் மொபைல் எண்ணை சரியாக டைப் செய்யுங்கள். பின்னர் சிம் நிறுவனத்தின் பெயர், எவ்வளவுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் போன்ற விபரங்களையும் குறிப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் ரீசார்ஜ் தொகை உங்களுடைய அமேசான் பே பேலன்ஸில் இருந்து கழிக்கப்பட்டு உங்களின் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்யப்படும்.

லீக் புகைப்படம் : அட்டகாசமான வடிவமைப்பில் மோட்டோ எக்ஸ்4.!லீக் புகைப்படம் : அட்டகாசமான வடிவமைப்பில் மோட்டோ எக்ஸ்4.!

Best Mobiles in India

English summary
U.S-based online retail giant Amazon in India has added another feature to its website that allows you to recharge the prepaid mobile numbers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X