Home
How to

ஆன்ட்ராய்டில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்படுத்துவது எப்படி?

கூகுள் அசிஸ்டன்ட் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பில்ட்-இன் அம்சமாக வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அலெக்சா சேவையும் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

By Meganathan S

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி, இந்த காலத்து ஸ்மார்ட்போன்களில் வாய்ஸ் அசிஸ்டன்ட் வடிவில் நமக்கு பயன்படுகிறது. இதுதவிர இந்த தொழில்நுட்பம் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆன்ட்ராய்டில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்படுத்துவது எப்படி?

ஆன்ட்ராய்டு தளங்களில் கூகுள் அசிஸ்டன்ட், ஆப்பிள் தளங்களில் சிரி என வெவ்வேறு பெயர்களை கொண்டிருக்கும் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவைகள் அவற்றுக்கான மந்திர சொற்களை சொன்னதும், நமக்கு சேவையை வழங்குகின்றன.

இதை போன்று பிரபலமான வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவைகளில் ஒன்றாக அமேசான் நிறுவனத்தின் அலெக்சா இருக்கிறது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவையானது அமேசான் எக்கோ டாட் ஸ்பீக்கர்களில் அறிமுகம் செய்யப்பட்டது. சீராக இயங்குவதால் பெரும்பாலான பயனர்கள் அமேசான் சேவையை பாராட்டியும் வருகின்றனர்.

கூகுள் அசிஸ்டன்ட்

கூகுள் அசிஸ்டன்ட்

கூகுள் அசிஸ்டன்ட் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பில்ட்-இன் அம்சமாக வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அலெக்சா சேவையும் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இதை எவ்வாறு செட்டப் செய்வது என தெரியவில்லையா? ஆன்ட்ராய்டில் அலெக்சாவை செட்டப் செய்யும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

 வழிமுறை 1:

வழிமுறை 1:

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று அமேசான் அலெக்சா செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும். உங்களது சாதனத்தில் புதிய அலெக்சா செயலி இருக்க வேண்டும், பழைய வெர்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தால், அதனை அப்டேட் செய்யவும்.

வழிமுறை 2:
இனி, அலெக்சா செயலியை ஸ்டார்ட் செய்து, அமேசான் கனக்கில் லாக் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 3:
அடுத்து சாதனத்தின் செட்டிங்ஸ் சென்று ஆப்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4:
இனி டீஃபால்ட் ஆப்ஸ் (Default Apps) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 5:

வழிமுறை 5:

அடுத்து அசிஸ்ட் மற்றும் வாய்ஸ் இன்புட் (Assist and voice input) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

வழிமுறை 6:
திரையில் தோன்றும் பட்டியலில் இருந்து அமேசான் அலெக்சா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 7:
திரையில் தோன்றும் பிராம்ப்ட்களை பின்தொடர்ந்து அக்ரீ (Agree) பட்டை க்ளிக் செய்ய வேண்டும். இந்த பட்டனை க்ளிக் செய்யும் முன் தகவல்களை படித்து, அதன் பின் உங்களது சொந்த விருப்பத்தின் பேரில் க்ளிக் செய்யவும்

வழிமுறை 8:

வழிமுறை 8:

இனி அலெக்சா உங்களது ஆன்ட்ராய்டு சாதனத்தின் டீஃபால்ட் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆக செட் செய்யப்பட்டு விட்டது.

வழிமுறை 9:
அலெக்சாவை இயக்க ஹோம் பட்டனை அழுத்தி பிடிக்கவும். அலெக்சாவை முதல் முறை பயன்படுத்தும் போது சாதனத்தில் வெவ்வேறு அனுமதிகளை வழங்க வேண்டியிருக்கும். இவற்றை அனுமதித்தால் மட்டுமே சேவையை பயன்படுத்த முடியும்.

வழிமுறை 10:
அலெக்சா கோரும் அனுமதிகளை வழங்கியதும், விருப்பம் போல் அலெக்சாவை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
How to use Alexa as default voice assistant on Android : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X