ஆஃபீஸ் கம்ப்யூட்டர் கொண்டும் இன்ஸ்டா அப்டேட் செய்யலாம் பாஸ்.!

உங்களிடம் கூகுள் கணக்கு மற்றும் இலவசமாக கிடைக்கும் புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயர் (Bluestacks App Player) மட்டும் இருந்தால் போதும் பாஸ்.

|

விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் செயலியில் ஒன் கீ ஃபன்க்ஷன் வழங்கப்படவில்லை. இதனால் கம்ப்யூட்டரில் இருந்து இன்ஸ்டாகிராமிற்கு புகைப்படங்களை அப்லோடு செய்ய முடியாது. இதே போன்று மேக் ஓஎஸ் எக்ஸ் இயங்குதளத்திலும் இதற்கான பிரத்யேக ஆப் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆஃபீஸ் கம்ப்யூட்டர் கொண்டும் இன்ஸ்டா அப்டேட் செய்யலாம் பாஸ்.!

ஸ்மார்ட்போன் இல்லாமல் டிஎஸ்எல்ஆர் கேமராவில் அழகிய புகைப்படங்களை எடுக்கும் ஃபோட்டோகிராஃபர்களுக்கும், தான் எடுக்கும் புகைப்படம் அல்லது வீடியோக்களை கம்ப்யூட்டரில் உள்ள மென்பொருளில் போட்டு அதற்கு கூடுதல் அழகு சேர்ப்போர்க்கும் இது பெரும் பின்னடைவான விஷயமாக இருப்பதோடு, அவ்வப்போது தலைவலியாகவும் அமைகிறது.

இவ்வாறானவர்களுக்கு பயன் தரும் விதமாக மேக் அல்லது கம்ப்யூட்டரில் இருந்தபடியே இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்ய சிறப்பான வழிமுறை உள்ளது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா?

உங்களிடம் கூகுள் கணக்கு மற்றும் இலவசமாக கிடைக்கும் புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயர் (Bluestacks App Player) மட்டும் இருந்தால் போதும் பாஸ்.

இனி கம்ப்யூட்டர் அல்லது மேக்-இல் இருந்தபடிேயே இன்ஸ்டா அப்டேட் ஈசியாக செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயர் அவசியம்

புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயர் அவசியம்

ஆன்ட்ராய்டு இயங்குதளத்திற்கான இன்ஸ்டாகிராம் ஆப் தலைசிறந்ததாக இருக்கிறது. இதே வெர்ஷனினை புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயர் எனும் இலவச ஆன்ட்ராய்டு எமுலேட்டர் கொண்டு மேக் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம்.

முதலில் புளுஸ்டேக்ஸ்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின் ஆப் முதல் முறை ஸ்டார்ட் ஆக சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். டுடோரியல் வேண்டும் என்பவர்கள் அதனை முழுமையாக பார்க்கலாம், விரும்பாதவர்கள் X ஐகானை கிளிக் செய்து டுடோரியலை க்ளோஸ் செய்து விடலாம். இனி நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியை தேர்வு செய்து அடுத்த ஆப்ஷன்களுக்கு தொடரலாம்.

புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயரை இன்ஸ்டால் செய்ததும் உங்களின் கூகுள் கணக்கை கொண்டு செயலியில் லாக் இன் செய்து கொள்ள வேண்டும்.

கூகுள் அக்கவுண்ட் லாக்இன்

கூகுள் அக்கவுண்ட் லாக்இன்

தொடரச் செய்யும் ஆப்ஷனான "Continue"- வை கிளிக் செய்து கூகுள் அக்கவுண்ட் கொண்டு லாக் இன் செய்ய வேண்டும். அடுத்து விதிமுறைகளை படித்து விரும்பினால் அதற்கான ஆப்ஷனை தேர்வு செய்து உறுதி செய்ய ஓகே (OK) பட்டனை கிளிக் செய்யவும்.

அடுத்து திரையில் காணப்படும் ஆப்ஷன்கள் விரும்பினால் தேர்வு செய்யலாம். நீங்கள் கம்ப்யூட்டரில் புளுஸ்டேக்ஸ் கொண்டு மட்டுமே இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவீர்கள் எனில் அவை அனைத்தையும் அன்செக் செய்து உங்களின் பெயரை குறிப்பிடலாம்.

இன்ஸ்டாகிராம் செயலியை இன்ஸ்டால் செய்யவும்

இன்ஸ்டாகிராம் செயலியை இன்ஸ்டால் செய்யவும்

இனி கூகுள் பிளே ஸ்டோர் போன்ற ஆப்ஷன்களை திரையில் காண்பீர்கள். இங்கு இன்ஸ்டாகிராம் செயலியை தேடி, அதிகாரப்பூர்வ செயலியை மேக் அல்லது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யலாம்.

செயலியை இன்ஸ்டால் செய்யும் போது கான்டாக்ட் மற்றும் உங்களின் லொகேஷனை பயன்படுத்த அனுமதி கோரப்படும், நீங்கள் விரும்பும் பட்சத்தில் அதற்கான அனுமதியை வழங்கலாம்.

சில நொடிகளில் மை ஆப்ஸ் டேப்-இல் இன்ஸ்டாகிராம் செயலியை பார்க்க முடியும். அதனை கிளிக் செய்து பயன்படுத்தலாம்.

அப்லோடு அன்டு ஷேர்

அப்லோடு அன்டு ஷேர்

புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயர் ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்று கணினியிலும் செங்குத்தாக காட்சியளிக்க ஏதுவாக அளவை மாற்றியமைக்கும். இனி உங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் லாக் இன் செய்யலாம்.

ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே கணினியிலும் இன்ஸ்டாகிராம் சீராக வேலை செய்யும். திரையின் கீழ் காணப்படும் பிளஸ் ஐகானை கிளிக் செய்து கேலரி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து கேலரியின் கீழ் காணப்படும் செலக்ட் அதர் (Select Other) ஆப்ஷனில் பிக் ஃப்ரம் விண்டோஸ் (Pick From Others) ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இனி கம்ப்யூட்டரில் இருந்து நீங்கள் அப்லோடு செய்ய வேண்டிய புகைப்படம் அல்லது வீடியோவை தேர்வு செய்து ஓபன் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து தேர்வு செய்த புகைப்படங்களை எடிட், கிராப், கூடுதல் ஃபில்ட்டர் என நீங்கள் விரும்பும் மாற்றங்களுடன் ஷேர் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How to upload photos to Instagram from a PC or Mac; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X