ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறை

உங்கள் ஆதார் அட்டையின் எண்ணை பயன்படுத்தி, ஆதார் அட்டை ஆன்லைன் சுய சேவையின் கீழ் செய்யப்படும் புதுப்பிப்பு போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.

|

ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், அதில் உங்களைக் குறித்த தவறான விவரங்களின் மூலம் பல்வேறு பிரச்சனைகளில் நீங்கள் சிக்கி கொள்ள நேரிடும். மற்ற சேவைகளை ஆதார் அட்டை உடன் இணைப்பது கட்டாயமாக்கப்படும் நிலையில், உங்களை குறித்த எல்லா தகவல்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம் தொடர்பான ஆவணங்களில் பொருத்தம் இல்லாத தன்மை இருக்கும் பட்சத்தில் எந்தொரு ஆவணத்தையும், ஆதார் அட்டையுடன் இணைக்க முடியாமல் போகும்.

ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறை

யூஐடிஏஐ பொறுத்த வரை, உங்கள் ஆதார் அட்டை உடன் உங்கள் வங்கி கணக்கு அல்லது பேன் அட்டை இணைக்கப்படாமல் இருந்தால் அல்லது 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உங்கள் ஆதார் அட்டையின் விவரங்களை எந்தொரு பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தாமல் இருந்தால், அது செயலற்றதாக மாறிவிடும். அதன்பிறகு, உங்கள் ஆதார் அட்டையை மீண்டும் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைச் சரிசெய்ய அல்லது புதுப்பிக்க, 3 வழிமுறைகள் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் கீழே அளிக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றி யூஐடிஏஐ இணையதளத்தில் உள்ள ஆதார் அட்டையின் ஆன்லைன் விவரங்களை நீங்கள் எளிதாக புதுப்பித்து கொள்ள முடியும். உங்கள் ஆதார் அட்டை உடன் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், உங்கள் ஆதார் அட்டையின் விவரங்களை ஆன்லைனிலேயே புதுப்பிக்க முடியும்.

ஏனெனில் மேற்கண்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) சரிபார்ப்பு தேவைப்படுகிறது. கீழே அளிக்கப்பட்டுள்ள படிகளைப் பயன்படுத்தி யூஐடிஏஐ இணையதளத்தின் மூலம் எந்த செலவும் இல்லாமல், உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை நீங்களே புதுப்பித்து கொள்ள முடியும்.

படி 1: உங்கள் ஆதார் அட்டையின் எண்ணை பயன்படுத்தி, ஆதார் அட்டை ஆன்லைன் சுய சேவையின் கீழ் செய்யப்படும் புதுப்பிப்பு போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.

படி 2: நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் விவரத்தை, பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.

படி 3:
நீங்கள் திருத்தம் செய்ய அல்லது மாற்றம் செய்ய விரும்பும் விவரங்களைக் கொண்ட அடையாள ஆவணத்தை ஸ்கேன் செய்து, சொந்த கையெழுத்திட்ட நகலுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

படி 4: பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவை தொடர்புடைய மாற்றம் செய்ய வேண்டிய அல்லது திருத்தம் செய்ய வேண்டிய கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆதார் அட்டையின் புதுப்பிப்பு விண்ணப்பத்திற்கான எண் அளிக்கப்படும். இந்த எண் மூலம் நீங்கள் செய்ய விண்ணப்பித்த மாற்றம் அல்லது திருத்தம், எந்த நிலையில் உள்ளது என்பதை கண்காணிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆதார் அட்டை தொடர்பான புதுப்பிப்புகளைச் செய்ய 90 நாட்கள் வரையிலான காலஅளவை எடுத்து கொள்ளலாம் என்று யூஐடிஏஐ இணையதளம் குறிப்பிடுகிறது. உங்களால் அளிக்கப்பட்ட புதுப்பிக்க வேண்டிய விண்ணப்பத்தை யூஐடிஏஐ சரிப்பார்க்க குறிப்பிட்ட காலஅளவை எடுத்து கொள்ளும்.

நீங்கள் அளித்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், மேற்கண்ட யூஐடிஏஐ இணையதளத்தில் உள்ள ஆதார் தேர்வை பதிவிறக்கம் செய் என்பதன் மீது கிளிக் செய்து, உங்களுடைய இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

நீங்கள் ஆதார் அட்டையில் அளித்துள்ள முகவரிக்கு, உங்கள் பெயர், முகவரி, பாலினம் அல்லது பிறந்த தேதி ஆகியவை தொடர்புடைய புதுப்பிப்புகள் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில், அதை குறித்த புதுப்பிப்புகளின் தகவல் உட்படுத்திய ஒரு ஆதார் அட்டையின் கடிதம் அனுப்பப்படும். உங்கள் மொபைல் நம்பர் அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவை புதுப்பிக்கப்பட்டு இருந்தால், மின்னஞ்சல் முகவரியின் மொபைல் நம்பருக்கு, மேற்கண்ட மாற்றத்தை குறித்த ஒரு அறிவிப்பை பெற முடியும்.

ஜியோவை விட அதிக டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399; உடனே அமல்; ஏர்டெல் ஷாக்.!ஜியோவை விட அதிக டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399; உடனே அமல்; ஏர்டெல் ஷாக்.!

Best Mobiles in India

English summary
Aadhaar is becoming mandatory and errors and other mistakes in your details will lead to many problems. As it is mandatory to link Aadhaar to other services, all your details should match on both. If there is a mismatch in your name, date of birth or gender on these documents, then you will not be able to link the two.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X