ஆண்ட்ராய்டு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனரை பயன்படுத்தி விண்டோஸ் கணிணியை அன்லாக் செய்வது எப்படி?
Unified Remote Server சாப்ட்வேரை விண்டோஸ் கணிணியிலும், Unified Remote செயலி மற்றும் Tasker செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு கருவியிலும் பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.
உங்கள் விண்டோஸ் கணிணியை ஆண்ட்ராய்டு ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பயன்படுத்தி அன்லாக் செய்ய முடிந்தால் எவ்வளவு சுலபமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட்- ஐ உள்ளீடு செய்யும் கஷ்டம் அறவே இருக்காது. அது சாத்தியமா என கேட்கிறீர்களா? ஆம், அதற்கான விடை இதோ..

ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன்ற பிரபல இயங்கு தளங்களில்(OS), நமக்கே தெரியாத பல்வேறு அம்சங்கள் புதைந்து கிடக்கின்றன.அதை ஆராய்ந்து ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில் தான் உள்ளது நம் திறமை. விண்டோஸ் கணிணயை ஆண்ட்ராய்டு ஃபிங்கர் பிரிண்ட் மூலம் அன்லாக் செய்யும் சுலபமான வழிமுறையை இங்கே காணலாம்.
படிப்படியான வழிமுறை
முதலில் ஃபிங்கர்பிரிண்ட் மூலம் விண்டோஸ் கணிணியை அன்லாக் செய்ய கீழ்கண்ட செயலிகள்/மென்பொருள் தேவை.
• Unified Remote and Tasker for Android
• Unified Remote Server for Windows PC
• Autotools Beta
பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள எளிய வழிமுறையை பின்பற்றவும்.
படி #1
Unified Remote Server சாப்ட்வேரை விண்டோஸ் கணிணியிலும், Unified Remote செயலி மற்றும் Tasker செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு கருவியிலும் பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.
படி #2
Unified Remote செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் இயக்கி, விண்டோஸ் கணிணியின் ஐ.பி முகவரியை தேடி, சேமித்துக்கொள்ளவும்.

படி#3
Tasker செயலியை திறந்து புது டாஸ்க் ஒன்றை உருவாக்கி பெயரிடவும். பின்னர் கீழே உள்ளவாறு பாஸ்வேர்ட் தயார் செய்யவும்.
- Variables என்பதை கிளிக் செய்து Variable Set ஐ தேர்வு செய்யவேண்டும். பின்னர் '%pass' என்பதில் உங்கள் கணிணியின் பாஸ்வேர்டை உள்ளிடவும்.
குறிப்பு : இது உங்கள் கணிணியின் பாஸ்வேர்டாக தான் இருக்க வேண்டும்.
- Plugins > AutoTools > AutoTools Text > Encryption சென்று, அதில் 'Encrypt the pass' ஐ தேர்வு செய்து, என்கோடிங் செய்வதற்கு எளிதில் நினைவில் நிற்ககூடிய ஒரு வார்த்தையை உள்ளிடவும்.
- மீண்டும் Variableலில் Variable Set ஐ தேர்வு செய்து, '%EncryptedPass' என்பதை '%attextresult()'என மாற்றி உள்ளிடவும்.
படி#4
மேலே குறிப்பிட்ட டாஸ்க்-ஐ ஒருமுறை ரன் செய்து விட்டு, மீண்டும் தேவையில்லை என்பதால் அதை டிலீட் செய்யவும்.

படி#5
மீண்டும் ஒரு புதிய டாஸ்க்-ஐ உருவாக்கி அதற்கு ' Fingerprint Unlock' என பெயரிடவும். பின்னர் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.
• Plugins > Autotools > Autotools Text சென்று பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
Text: %EncryptedPass
Variable Name: %pass
'Encryption' க்கு சென்று அதில் 'Decrypt'ஐ தேர்வு செய்யவும். பின்னர் மேலே உருவாக்கியை பாஸ்வேர்ட்ஐ பயன்படுத்தவும்
பின்னர் 4ஆம் எண் URLக்கு பதிலாக "ur://intent/remote:Core.Keyboard/action:press/extra:space/destination: YOURPCNAMEHERE" என்பதை உள்ளிடவும்.
• Task > Wait 1 secondஐ தேர்வு செய்யவும்.
• பின்னர் 4ஆம் எண் URLக்கு பதிலாக "it:ur://intent/remote:Core.Keyboard/action:text/extra:%pass/destination: YOURPCNAMEHERE" ஐ உள்ளிடவும்.
• Task > Wait 1 secondஐ தேர்வு செய்யவும்.
• பின்னர் 8ஆம் எண் URLக்கு பதிலாக "it:ur://intent/remote:Core.Keyboard/action:press/extra:enter/destination: YOURPCNAMEHERE" ஐ உள்ளிடவும்.
படி#6
அனைத்து மாற்றங்களையும் நிகழ்த்த 'PLAY' பொத்தானை கிளிக் செய்யவும்.

இந்த படிகளை செய்து முடித்தவுடன், உங்கள் கணிணியை ஆண்ட்ராய்டு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மூலம் எளிதில் அன்லாக் செய்ய முடியும். மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் சிறிது கடினமாக இருந்தாலும், ஒரு முறை கவனமாக செய்து முடித்து விட்டால், பின்னர் எப்போதும் எளிதாக கணிணியை அன்லாக் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications