ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் மூலம் விண்டோல் கம்ப்யூட்டரை அன்லாக் செய்வது எப்படி?

By: Meganathan S

இணையத்தில் கம்ப்யூட்டர் அருகில் நாம் இல்லாத போது அதனை பாதுகாக்கும் பல்வேறு வழிமுறைகள் கிடைக்கின்றன. நம்மில் பலரும் ஸ்மார்ட்போன் கொண்டு கம்ப்யூட்டரை அன்லாக் செய்ய முடியுமா என பலமுறை கூகுளில் தேடியிருப்போம். அந்த வகையில் கம்ப்யூட்டரை ஸ்மார்ட்போன் கொண்டு அன்லாக் செய்ய எளிய வழிமுறை இருக்கிறது.

ஸ்மார்ட்போன் மூலம் விண்டோல் கம்ப்யூட்டரை அன்லாக் செய்வது எப்படி?

இந்த வழிமுறையை கொண்டு ஸ்மார்ட்போன் மூலம் கம்ப்யூட்டரை அன்லாக் செய்ய முடியும். லாக் இன் ஸ்கிரீன் இல்லாமல் கம்ப்யூட்டரை இயக்க முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் மூலம் விண்டோல் கம்ப்யூட்டரை அன்லாக் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போன் மூலம் கம்ப்யூட்டரை அன்லாக் செய்ய ரோஹோஸ் லாக்ஆன் கீ (Rohos Logon Key) எனும் மென்பொருள் உங்களது கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த மென்பொருள் மூன்றாம் தரப்பானது என்றாலும் பெரும்பாலானோர் பயன்படுத்துவதால் இது பாதுகாப்பானதாக இருக்கிறது.

ஸ்மார்ட்போன் மூலம் விண்டோல் கம்ப்யூட்டரை அன்லாக் செய்வது எப்படி?

1. முதலில் நீங்கள் இயக்க வேண்டிய சாதனத்தில் ரோஹோஸ் லாக்ஆன் மென்பொருளை டவுன்லோடு செய்ய வேண்டும்.

2. அடுத்து மென்பொருளை விண்டோஸ்-இல் இயக்க வேண்டும். கீழே இருப்பது போன்று திரையில் தெரியும்.

3. இங்கு ஆப்ஷன்ஸ் (Options) கிளிக் செய்து கீழே காணப்படும் ஸ்கிரீன்ஷாட் போன்று செட்டிங்ஸ் செட் செய்ய வேண்டும்.

ஸ்மார்ட்போன் மூலம் விண்டோல் கம்ப்யூட்டரை அன்லாக் செய்வது எப்படி?

4. அடுத்து அனைத்து ஆப்ஷன்களையும் செட் செய்த பின் OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

5. இனி கீ ஒன்றை செட்டப் செய்து கியூ.ஆர் கோடு வழிமுறை மூலம் கீயினை உறுதி செய்ய வேண்டும்.

6. அடுத்து மொபைல் செயலியை டவுன்லோடு செய்து கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் ஸ்மார்ட்போனில் செயலி உங்களது கம்ப்யூட்டரை டிடெக்ட் செய்யும்.

7. தற்போது உங்களது கம்ப்யூட்டர் ஸ்மார்ட்போனுடன் ஆத்தென்டிகேட் செய்யப்பட்டு விட்டது. இதன்பின் ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை அன்லாக் செய்யும்போதும் உங்களது ஸ்மார்ட்போன் மூலம் இரண்டாவது முறை பாதுகாப்பினை உறுதி செய்த பின் கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும்.Read more about:
English summary
It was safe as many professionals trying this software to unlock computer with the help of their smartphone
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot