Home
How to

குரோம் பிரெளசரில் உள்ள மால்வேர் ஸ்கேனை அன்லாக் செய்வது எப்படி?

பெரும்பாலானோர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரை பாதுகாப்புடன் வைத்திருக்கும் முறைகளை கையாளுகின்றனர்.

By Gizbot Bureau

நீங்கள் இண்டர்நெட்டை பயன்படுத்தும்போது எதுவுமே பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் பயன்படுத்தி வருகின்றீர்கள். ஒரு பிரெளசரி ஓப்பன் செய்யும்போது இதுகுறித்து ஒரு அல்ர்ட் நமக்கு தேவை என்பது அவசியமாகிறது. ஹேக்கர்கள் நீங்கள் எப்போது இண்டர்நெட்டுக்கு வருவீர்கள் என்று காத்து கொண்டிருக்கின்றார். இண்டர்நெட்டில் பல அபாயமாக இணையதளங்கள், மால்வேர்கள், வைரஸ்கள் ஆகியவை தூண்டில்போல் வைத்து ஹேக்கர்கள் காத்திருக்கின்றனர். எனவே நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

குரோம் பிரெளசரில் உள்ள மால்வேர் ஸ்கேனை அன்லாக் செய்வது எப்படி?

பெரும்பாலானோர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரை பாதுகாப்புடன் வைத்திருக்கும் முறைகளை கையாளுகின்றனர். ஆனால் இதை போலவே இன்னும் பல வழிகளில் நம்முடைய கம்ப்யூட்டரை பாதுகாகும் முறை உள்ளது. அதில் ஒன்று குரோம் பயனாளிகளுக்கு உள்ளது. விண்டோஸ் கம்ப்யூட்டரில் குரோம் பிரெளசரை பயன்படுத்தினால் அதில் உள்ள மால்வேர் ஸ்கேனரை பயன்படுத்தி பாதுகாப்பு தன்மையை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஸ்கேனர் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்கேன் செய்து உங்கள் உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாப்பது மட்டுமின்றி ஜங்க்கில் இருந்து விடுதலை தருகிறது.

குரோம் பிரெளசரில் உள்ள ஸ்கேனர் மால்வேரை எப்படி அன்லாக் செய்வது என்று தற்போது பார்ப்போம். அதற்கு நீங்கள் கீழே உள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்

1. குரோம் பிரெளசரை முதலில் ஓப்பன் செய்யுங்க்ள்

2. வலது மேல் புறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் போல் காணப்படும் மெனு பட்டனை க்ளிக் செய்யுங்கள்

3. அதில் உள்ள செட்டிங் என்ற ஆப்சனை க்ளிக் செய்து பின்னர் ஸ்குரோல்டவுன் செய்து அதில் அட்வான்ஸ்டு என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்

4. அதன் பின்னர் மீண்டும் ஸ்குரோல் செய்து ரீசெட் அண்ட் க்ளீன் அப் என்பதை தேர்வு செய்யுங்கள். பின்னர் அதில் உள்ள 'கிளீன் அப் கம்ப்யூட்டர்' என்பதை க்ளிக் செய்யுங்கள்

5. பின்னர் ஒருசில ஆப்சன்களுடன் ஒரு பக்கம் ஓப்பன் ஆகும். அதில் 'பைண்ட் அண்ட் ரிமூவ் ஹார்ம்ஃபுல் சாப்ட்வேர்' என்ற ஆப்சனை சரியாக க்ளிக் செய்யவும். இதுதான் குரோம் பிரெளசரின் மால்வேர் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர் ஆகும். இதுதான் உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாக்கும்

6. பின்னர் அதில் ஃபைண்ட் டு ரன் என்பதை க்ளிக் செய்தால் குரோம் பிரெளசர் உங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் இருக்கின்றதா? என்பதை ஸ்கேன் மூலம் சோதனை செய்யும்

7. ஸ்கேன் செய்து முடித்த பின்னர் குரோம் உங்களுக்கு ஒரு ரிப்போர்ட் தரும். அதில் தேவையில்லாத சாப்ட்வேரை நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் அவை தோன்றும். அந்த சாப்ட்வேர்களை நீங்கள் ரிமூவ் செய்துவிட வேண்டும். அவைகளை நீங்கள் ரிமூவ் செய்த பின்னர் உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருப்பதை குரோம் உறுதி செய்யும்

நீங்கள் மீண்டும் குரோம் பிரெளசரில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் chrome://settings/cleanup என்ற லிங்க்கை நீங்கள் நேரடியாக பயன்படுத்தலாம். ஒருவேளை இந்த லிங்க் செயல்படவில்லை என்றால் உங்கள் பிரெளசர் அப்டேட் செய்யப்பட வேண்டும் என்று அர்த்தம்.

குரோம் பிரெளசரில் உள்ள மால்வேர் ஸ்கேனை அன்லாக் செய்வது எப்படி?

நீங்கள் இந்த ஸ்கேனரை பயன்படுத்தும்போது கூகுள், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிழே உள்ள விபரங்களை சோதனை செய்யும்

* புரோக்ராமில் உள்ள மெட்டா டேட்டா

*உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள புரோக்ராம் மற்றும் ரன்னிங்கில் உள்ள புரோக்ராம்

*சர்வீஸ் மற்றும் புரொசஸ்

*ஷெட்யூல் டாஸ்க்

*சிஸ்டம் ரெஜிஸ்டரி வேல்யூ

*விண்டோஸ் பிராக்ஸி செட்டிங்ஸ்

உங்களது விபரங்களை நீங்கள் கூகுளுக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றால் 'ரிப்போர்ட் டிடெய்ல்ஸ் டு கூகுள் ' என்ற ஆப்சனை ஸ்கேன் செய்வதற்கு முன்னர் டிசெலக்ட் செய்துவிடவும்

மேலும் இந்த ஸ்கேனரின் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் முழு பாதுகாப்பை பெற்றுவிட்டது என்பது அர்த்தம் அல்ல. இந்த ஸ்கேனர் மூலம் குரோம் பிரெளசரில் உள்ள மால்வேரை மட்டுமே நீக்க முடியும். கம்ப்யூட்டரின் முழு பாதுகாப்புக்கு ஒரு நல்ல ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்வது முழு பாதுகாப்பினை தரும்

Best Mobiles in India

English summary
How to unlock Chrome’s inbuilt malware scanner : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X