சியோமி ஸ்மார்ட்போனில் பூட்லோடரை எம்.ஐ. அன்லாக் டூல் மூலம் அன்லாக் செய்வது எப்படி?

    ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அதிகம் பேரால் விரும்பப்படும் அம்சம், அதை பயனர் விரும்பும் வகையில் மாற்றியமைத்துக் கூடுதல் வசதிகளை பெற முடியும் என்பது தான் எனலாம். இவ்வாறு ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமங்கள் அல்லது வசதிகளை பெற ஸ்மார்ட்போனனை ரூட் செய்யலாம்.

    சியோமி  எம்.ஐ. அன்லாக் டூல் மூலம் பூட்லோடரை அன்லாக் செய்வது எப்படி?

    ஸ்மார்ட்போனை ரூட் செய்யும் போது பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் வசதிகள் கூடுதலாக பயன்படுத்த முடியும் என்றாலும், இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் வாரன்டி காலாவதியாகி விடும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்வது எளிமையான காரியமாகவே இருந்தது. ஒன்றிரண்டு வழிமுறைகளை கொண்டு ஸ்மார்ட்போனினை மிக எளிமைாக ரூட் செய்துவிட முடியும்.

    ஆனால் தற்சமயம் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் லாக் செய்யப்பட்ட பூட்லோடர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனினை ரூட் செய்யவோ அல்லது கஸ்டம் ரிக்கவரி இன்ஸ்டால் செய்யவோ பயனர்கள் முதலில் பூட்லோடரை அன்லாக் செய்ய வேண்டும்.

    சியோமி ஸ்மார்ட்போனில் பூட்லோடரை அன்லாக் செய்யும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

    சியோமி  எம்.ஐ. அன்லாக் டூல் மூலம் பூட்லோடரை அன்லாக் செய்வது எப்படி?

    1 - பூட்லோடரை அன்லாக் செய்ய சியோமியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்:

    சியோமி ஸ்மார்ட்போனில் பூட்லோடரை அன்லாக் செய்ய சியோமி பூட்லோடர் அன்லாக் வலைதளம் சென்று நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். எம்.ஐ. அன்லாக்கர் வலைதளம் சென்று அன்லாக் நௌ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

    இனி உங்களின் சியோமி அக்கவுன்ட் லாக்-இன் விவரங்கள் மூலம் வலைதளத்தில் லாக்-இன் செய்து உங்களது கோரிக்கையை சமர்பிக்க வேண்டும். பின் உங்களுக்கு ஒரு குறுந்தகவல் வரும் (இந்த குறுந்தகவல் வருவதற்கு குறைந்த பட்சம் 3 முதல் அதிகபட்சம் 21 நாட்களில் வரும்) இந்த குறுந்தகவல் வந்ததும் ஸ்மார்ட்போனினை எந்த நேரத்திலும் அன்லாக் செய்து விட முடியும்.

    இனி சியோமி ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- அபவுட் ஸ்மார்ட்போன் -- பில்டு நம்பர் ஆப்ஷன்களுக்கு சென்று பில்டு நம்பரை ஏழு முறை தொடர்ந்து கிளிக் செய்து டெவலப்பர் ஆப்ஷன்களை எனேபிள் செய்ய வேண்டும்.

    அடுத்து செட்டிங்ஸ் -- அடிஷனல் செட்டிங்ஸ் -- டெவலப்பர் ஆப்ஷன்ஸ் சென்று ஓ.இ.எம். அன்லாக் ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும். இனி செட்டிங்ஸ் -- அடிஷனல் செட்டிங்ஸ் -- டெவலப்பர் ஆப்ஷன்ஸ் -- எனேபிள் அன்லாக் பூட்லோடர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    அடுத்து செட்டிங்ஸ் -- அடிஷனல் செட்டிங்ஸ் -- டெவலப்பர் ஆப்ஷன்ஸ் -- எனேபிள் யு.எஸ்.பி. டீபக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    சியோமி  எம்.ஐ. அன்லாக் டூல் மூலம் பூட்லோடரை அன்லாக் செய்வது எப்படி?

    விண்டோஸ் கம்ப்யூட்டரில் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று எம்.ஐ. அன்லாக் டூலை டவுன்லோடு செய்து, எம்.ஐ. அக்கவுன்ட் செயலியில் சைன்-இன் செய்ய வேண்டும். ஸ்மார்ட்போனினை ஃபாஸ்ட் பூட் மோடில் வைக்க வேண்டும். இனி ஸ்மார்ட்போனினை கம்ப்யூட்டருடன் இணைத்து, அன்லாக் செய்ய வேண்டும்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி இருப்பின், உங்களது ஸ்மார்ட்போனில் பூட்லோடர் அன்லாக் செய்யப்பட்டு ஸ்மார்ட்போன் ரீபூட் ஆகும்.

    English summary
    How to unlock bootloader on a Xiaomi smartphone with Mi Unlock tool: Read more about this in Tamil GizBot
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more