பழைய மொபைல் போனினை சிசிடிவி போன்று பயன்படுத்துவது எப்படி?

கேமராவை பொருத்துவதற்கு சிறிய ஸ்மார்ட்போன் டிரைபாட் அல்லது சக்ஷன் கப் கார் மவுன்ட் போன்றவை சிறப்பாக வேலை செய்யும்.

|

அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படாத நிலையில் உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருக்கிறதா. அவற்றை வீணாக போட்டு வைக்காமல், வீட்டை பாதுகாக்க பயன்படுத்த முடியும். இதை செய்ய உங்களது ஸ்மார்ட்போன் கேமரா பாழாகாமல் சீராக இயங்கினாலே போதுமானது.

பழைய மொபைல் போனினை சிசிடிவி போன்று பயன்படுத்துவது எப்படி?

வீட்டில் குழந்தைகள் இருப்பின், அவர்களை பாதுகாக்கவும், வீட்டை பாதுகாக்கவோ பழைய ஸ்மார்ட்போன்களை சிறப்பாக பயன்படுத்த முடியும். பழைய ஸ்மார்ட்போன்களை வீட்டை எந்நேரமும் பாதுகாக்கும் வயர்லெஸ் செக்யூரிட்டி கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பு கேமராவாக செட்டப் செய்வது மிகவும் எளிமையான காரியம் என்பதோடு பல சமயங்களில் இலவசமாகவும் செய்ய முடியும்.

வழிமுறை 1 மொபைல் செக்யூரிட்டி ஆப்

வழிமுறை 1 மொபைல் செக்யூரிட்டி ஆப்

உங்களது மொபைல் போனில் செக்யூரிட்டி கேமரா செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பெரும்பாலான செயலிதள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பயன்பாடுகளையே வழங்கும். செயலியை செட்டப் செய்ததும் உங்களது வீடு அல்லது மற்ற இடங்களை ஸ்மார்ட்போன் கொண்டு எங்கிருந்தும் கண்காணிக்க முடியும்.

 வழிமுறை 2: கேமராவை எங்கு பொருத்துவது

வழிமுறை 2: கேமராவை எங்கு பொருத்துவது

ஸ்மார்ட்போன்களில் செட்டப் செய்து முடித்ததும், கேமராவை பொருத்த வேண்டும். வீட்டின் நுழைவு வாயில், பின்புறம் மற்றும் உங்களது விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் அறைகளில் கேமராவை பொருத்தலாம். ஐபி கேமராவினை குழந்தையை பராமரிக்கவும் பயன்படுத்தலாம்.

அதிக மொபைல் போன்கள் இருப்பின் கூடுதல் பாதுகாப்புக்காக பல்வேறு கேமராக்களை பொருத்த முடியும்.

வழிமுறை 3: கேமரா மவுன்ட் மற்றும் சார்ஜிங் வசதி

வழிமுறை 3: கேமரா மவுன்ட் மற்றும் சார்ஜிங் வசதி

கேமராவை பொருத்துவதற்கு சிறிய ஸ்மார்ட்போன் டிரைபாட் அல்லது சக்ஷன் கப் கார் மவுன்ட் போன்றவை சிறப்பாக வேலை செய்யும். ஸ்மார்ட்போன் கேமரா ஒளிபரப்பும் அளவை பரவலாக்க கேமராவுடன் வைடு ஆங்கிள் லென்ஸ் போன்றவற்றை சேர்க்கலாம்.

வீடியோக்களை ஸ்டிரீம்

வீடியோக்களை ஸ்டிரீம்

வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய அதிக மின்சாரம் தேவைப்படும் என்பதால், ஸ்மார்ட்போன்களுக்கு எந்நேரமும் சார்ஜ் செய்யும் வசதி ஏதுவான இடத்திலோ அல்லது கேமராவை பொருத்தும் இடத்தில் சார்ஜிங் செய்ய வசதியை முன்கூட்டியே தயார் செய்வது நல்லது.

Best Mobiles in India

English summary
How to turn your old Android smartphone into a home security camera : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X