பேஸ்புக்கின் முக அங்கீகார அம்சத்தை முடுக்குவது எப்படி?

ஒரு ஃபோன் மூலம் நீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அந்த அப்ளிகேஷன் மூலமாகவே இந்த அமைப்பை மாற்றியமைக்க முடியும்.

|

ஏஐ-யில் செய்யப்படும் மேம்பாடுகளின் மூலம் பேஸ்புக், பன்முகத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது. ஆப்பிளின் நவீன ஐபோனில் முக அங்கீகாரத்தை கொண்டு மொபைலை திறக்கும் தேர்வு காணப்படுகிறது. இதன்மூலம் ஏஐ-யில் முகங்கள் மற்றும் முக அங்கீகாரத்தை கண்டறியும் முறை விரைவில் கொண்டுவரப்படலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கின் முக அங்கீகார அம்சத்தை முடுக்குவது எப்படி?

ஏஐ மற்றும் அப்ளிகேஷன்களை அறிமுகம் செய்வது பேஸ்புக்கிற்கு புதியதல்ல. நீங்கள் இடுகையிடும் படத்துடன் உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் மக்கள் அல்லது நீங்கள் பின்பற்றும் பக்கங்கள் ஆகியவற்றை மேற்கொள் (டேக்) செய்யும் வழக்கம், நீண்டகாலமாக பயன்பாட்டில் உள்ளது.

டிசம்பர்

டிசம்பர்

நீங்கள் பதிவேற்றம் செய்யும் படங்களில் உள்ள பொருட்களையும் இது ஆராய்ந்து அறிகிறது. அதே நேரத்தில், கடந்த டிசம்பர் மாதம் முதல் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் தனது முகம் கண்டறியும் அம்சத்தை இந்நிறுவனம் விரிவுப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் பொய்யான கணக்குகளை முடக்கவும், தங்களின் ஒரு படம் அல்லது வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்த அறிவிப்பை பயனர் பெறவும் முடிகிறது.

முக அங்கீகாரம்

முக அங்கீகாரம்

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த அம்சத்தை ஒரு வரமாக கருதலாம். சுயவிவர பாதுகாப்புகள் மற்றும் இணைய அப்ளிகேஷன்கள், உங்கள் சுயவிவரத்தில் நுழையும் நபர்களை சுட்டிகாட்டி விடுகிறது. முக அங்கீகாரம் தொடர்பான காரியங்கள் பெரும்பாலும் உத்தரவாதம் மிகுந்தவையாக உள்ளன. அதனால் இதை பயன்படுத்த யாரும் அதிகம் யோசிக்கமாட்டார்கள்.

பேஸ்புக் வழிமுறை

பேஸ்புக் வழிமுறை

அதே நேரத்தில் இதில் மற்றொரு பெரிய பிரச்சனை இருக்கிறது. பேஸ்புக்கின் வழிமுறை உங்கள் படங்கள் மூலமாக தான் இயங்கும் என்பதால், அவை செயலாக்கம் செய்யப்பட்ட பிறகு, அளிக்கப்பட்ட தகவல்களை சேமித்து வைத்து கொள்ளும். இந்த வழிமுறை முழுக்க முழுக்க பயிற்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றாலும், அந்த காரியம் ஏற்க முடியாத ஒன்றாகவும், சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது. அதை கண்டு நீங்கள் சோர்ந்து போக வேண்டிய தேவையில்லை. ஏனெனில் இந்த அம்சத்தை முடக்குவதற்கு பேஸ்புக் அனுமதிக்கிறது என்பதோடு, இந்த அம்சம் இல்லாமல் பேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்தவும் முடியும்.

 பயனர்

பயனர்

இது போன்ற ஒரு வசதி பயனர்களுக்கு அளிக்கப்பட்டதாகவும், அதை இயக்குவதற்கு முன் சில காலம் காத்திருந்தாகவும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அம்சம் தற்போது வெளியாகி உள்ளது. எனவே மேற்கூறிய இந்த அம்சத்தை எப்படி இயக்குவது அல்லது முடுக்குவது என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

இணையதளம் மூலம்

இணையதளம் மூலம்

நீங்கள் இணையதளத்தை பயன்படுத்தி ஒரு பிரவுஸர் மூலமாக பேஸ்புக்கை பயன்படுத்தும் நபராக இருக்கும் பட்சத்தில், இந்த அமைப்பை மாற்றும் வகையில், முதலில் பேஸ்புக்கிற்கு செல்லவும். அந்த பக்கம் ஏற்றம் அடைந்த பிறகு, மேலே உள்ள உங்கள் சுயவிவரம் மற்றும் அறிவிப்புகள் ஐகான்கள் இருக்கும் வரிசையில் காணப்படும் நீலநிற பாரை நோக்கி உங்கள் கர்ஸரை நகர்த்துங்கள். இது தவிர ஒரு தலைக்கீழான அம்பு ஒன்று இருப்பதை காணலாம்.

பொது கணக்கு அமைப்புகள்

பொது கணக்கு அமைப்புகள்

அதன் மீது கிளிக் செய்தால், கீழ்நோக்கி விழும் மெனு காட்டப்படுகிறது. அதில் 'அமைப்புகள்' பக்கத்தைத் திறக்கவும். அதில் 'பொது கணக்கு அமைப்புகள்' என்று அழைக்கப்படும் ஒரு பக்கத்தை காணலாம். இதன் இடதுபக்கத்தில் பட்டியலிடப்படும் பல்வேறு தேர்வுகளின் இடையே 'முக அங்கீகாரம்' இருப்பதை காணலாம். அதை திறக்கும் போது, அதில் ஒரு திருத்தம் செய்யக்கூடிய வசதியுடன் கூடிய திரை செய்தியைக் காணலாம். அதன் மீது கிளிக் செய்து, 'வேண்டாம்' என்பதை தேர்வு செய்யவும். இதன்மூலம் முக அங்கீகார அம்சம் முடக்கப்படும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
 ஃபோன் மூலம்

ஃபோன் மூலம்

ஒரு ஃபோன் மூலம் நீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அந்த அப்ளிகேஷன் மூலமாகவே இந்த அமைப்பை மாற்றியமைக்க முடியும். பேஸ்புக் அப்ளிகேஷனை திறந்து, வலதுபக்க முனையில் பொங்கிவழிவது போன்று உள்ள பொத்தான் இருப்பதை காணலாம். இவை மூன்று கிடைமட்டமான கோடுகள் ஆகும். அதன் மீது கிளிக் செய்தால், அமைப்புகள் பகுதிக்குள் செல்லலாம். 'தனியுரிமை குறுக்குவழிகள்' என்பதை தட்டவும். அதில் ஒரு பெரிய பட்டியலை காணலாம். அதை கீழ்நோக்கி உருட்டி, 'கூடுதல் அமைப்புகள்' என்று இருப்பதை தட்டவும். அங்கு, 'முக அங்கீகாரம்' என்ற தேர்வு இருப்பதை காணலாம். அதில் 'வேண்டாம்' என்று மாற்றியமைக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to turn off Facebook s facial recognition feature ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X