பேடிஎம் இன்பாக்ஸ் சேவை மூலம் பணம் அனுப்புவது எப்படி?
பேடிஎம் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் இப்போது பயன்படுகிறது, மேலும் காய்கறி விற்பவர்களில் இருந்து மளிகை கடைகாரர்கள் வரை பேடிஎம்-ன் பணமில்லா பணப்பரிவர்த்தனை அனைவரையும் சென்றடைந்துள்ளது.
பேடிஎம் சேவையில் இப்போது பல்வேறு புதிய அம்சங்கள் வெளிவந்துள்ளது, மேலும் இந்தப் பேடிஎம் இன்பாக்ஸ் பயன்பாடு அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும், அதன்பின்பு இந்த இக்பாக்ஸ் சேவையை 23 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பேடிஎம் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் இப்போது பயன்படுகிறது, மேலும் காய்கறி விற்பவர்களில் இருந்து மளிகை கடைகாரர்கள் வரை பேடிஎம்-ன் பணமில்லா பணப்பரிவர்த்தனை அனைவரையும் சென்றடைந்துள்ளது. இருப்பினும், இன்னும் சிலருக்கு பேடிஎம் வழியாக பணப்பரிவர்த்தனை நிகழ்த்துவது என்பது பற்றிய குழப்பங்கள் இருக்கிறது. மேலும் பேடிஎம் இன்பாக்ஸ் சேவை மூலம் பணம் அனுப்பும் வழிமுறையை பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் ஆப் பயன்பாட்டை புதுபிக்க வேண்டும்.

வழிமுறை-2:
அடுத்து பேடிஎம் ஆப் பயன்பாட்டை திறந்தவுடன், உங்கள் பயன்பாட்டின் பக்கத்தில் புதிய இன்பாக்ஸ் கிடைக்கும்.

வழிமுறை-3:
அதன்பின்பு பேடிஎம் ஆப் இன்பாக்ஸ் சேவையில் நீங்கள் வணிகர்களுடன் அரட்டையடிக்கலாம், அதன்பின்பு மிகவும் எளிமையான முறையில் பணத்தை அனுப்ப முடியும்.

வழிமுறை-4:
பேடிஎம் இன்பாக்ஸ் பொறுத்தவரை டிராக் செய்யும் வசதி, ஆர்டர்கள் மற்றும் கேம்ஸ்கள் போன்றவை பெறமுடியும்.

வழிமுறை-5:
இந்த பேடிஎம் இன்பாக்ஸ் சேவையில் படங்கள், வீடியோ, நேரலை இருப்பிடம், தொடர்புகள் போன்ற வசதிகளுடன் பண பரிமாற்றத்தை செயல்படுத்த முடியும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications