மொபிக்விக் - வங்கி : பண பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி.?

மொபிக்விக் ஆப் மூலம் பண பரிமாற்றங்கள் செய்வதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின் கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

|

பேடிஎம் மற்றும் ப்ரீசார்ஜ் மொபைல் பேமண்ட் ஆப்ஸ்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் பிரபலமான மொபைல் வேலட் ஆப் ஆக திகழ்கிறது - மொபிக்விக் ஆப். போட்டியாளரான பேடிஎம் ஆப் போன்றே மொபிக்விக் ஆப்பும் அதன் பயன்ரகளுக்கு வேலட்டில் இருந்து வங்கிகளுக்கு பண பரிமாற்றம் நிகழ்த்திக் கொள்ளும் அம்சத்தை வழங்குகிறது.

மொபிக்விக் - வங்கி : பண பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி.?

மொபிக்விக் - டூ - வங்கி பரிமாற்ற கட்டணங்கள்

முன்பு மொபிக்விக் ஆப் ஆனது, கேவ்யைசி செய்யாத பயனர்களுக்கு 4% கட்டணமும், கேவ்யைசி செய்த பயனர்களுக்கு 1% கட்டணமும் விதித்தது, இப்பொது இந்தியாவில் ரூ.1000/- மற்றும் ரூ.500/- நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான பின்னர் இலவச வேலட் - டூ - வங்கி சேவைகளை மொபிக்விக் வழங்குகிறது.

மொபிக்விக் ஆப் பயன்படுத்தி வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.?

1) பயன்பாட்டை திறந்து 'பே' அலல்து 'டிரான்ஸ்பர் மணி' ஆப்ஷனை டாப் செய்யவும்
2) பின்வரும் மெனுவில், நியூ பேங்க் டிரான்ஸ்பர் ஆப்ஷனை தேர்வுஸ் செய்யவும்
3) தொகை, கணக்கு பெயர், கணக்கு எண், ஐஎப்எஸ்சி குறியீடு ஆகிய விவரங்களை வழங்கவும்
4) இறுதியாக 'கன்டினியூ' பட்டனை டாப் செய்யவும்.

மொபிக்விக் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக மொபிக்விக் வேலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.?

1) www.mobikwik.com வலைத்தளத்தினுள் நுழைந்து உங்கள் அக்கவுண்டில் உள்நுழையவும்
2) திரையில் 'பே' அலல்து 'டிரான்ஸ்பர் மணி' ஆப்ஷனை டாப் செய்யவும்.
3) சென்ட் டூ பேங்க் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
4) வங்கி பெயர், கணக்கு எண், ஐஎப்எஸ்சி கோட் மற்றும் தொகை ஆகிய விவரங்களை அளித்து 'சென்ட்' பட்டனை அழுத்தவும்
5) உங்களுக்கு ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) ஒன்று அனுப்பி வைக்கப்படும் அதை குறிப்பிட்ட இடத்தில பதிவு செய்து இறுதியாக 'கன்ப்ரிம்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்

இதே போல பேடிஎம் மற்றும் ப்ரீசார்ஜ் ஆப் வழியாக பணப்பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி என்ற டூடோரியல்களையும் தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்தில் பெறலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
How to Transfer Money From MobiKwik to Bank Account. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X