அட இது தெரியாம போச்சே! விளம்பரமே வராமல் YouTube வீடியோ பார்ப்பது எப்படி?

|

யூட்யூப் (YouTube) வீடியோக்கள் மிகப்பெரிய மற்றும் மிகவும் முக்கியமான பொழுதுபோக்காக மட்டுமின்றி கற்றலுக்கான தளமாகவும் உருமாறி உள்ளது!

ஆனாலும் கூட, கிட்டத்தட்ட அனைவருக்குமே பிடிக்காத ஒரு யூட்யூப் சமாச்சாரம் உள்ளதென்றால் அது விளம்பரங்களாகத் தான் இருக்கும்!

மொத்தம் 4 வழிகள் உள்ளன!

மொத்தம் 4 வழிகள் உள்ளன!

விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப் பார்க்க ஒரு வழி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று எண்ணாத ஆட்களே இல்லை எனலாம்!

ஆனால் இங்கே நமக்கிருக்கும் குட் நியூஸ் என்னவென்றால், விளம்பரங்கள் இல்லாமல் YouTube-ஐப் பார்ப்பதற்கு 1 வழிகள் அல்ல (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டையும் சேர்த்து) மொத்தம் 4 வழிகள் உள்ளன.

அதென்ன வழிகள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஆபத்தில் உள்ளதா உங்கள் ஸ்மார்ட் TV? உடனே இதெல்லாம் செக் பண்ணுங்க! இல்லனா?ஆபத்தில் உள்ளதா உங்கள் ஸ்மார்ட் TV? உடனே இதெல்லாம் செக் பண்ணுங்க! இல்லனா?

01. குறுக்குவழிகளை விரும்பாதவர்கள்!?

01. குறுக்குவழிகளை விரும்பாதவர்கள்!?

நீங்கள் குறுக்குவழிகளை பயன்படுத்த விரும்பவில்லை; அதிகாரப்பூர்வமாக யூட்யூப் விளம்பரங்களை அகற்ற விரும்புகிறீர்கள் என்றால் - யூட்யூப் ப்ரீமியம் மட்டுமே உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்!

YouTube Premium என்பது விளம்பரங்களில் இருந்து விடுபடுவதற்கான அதிகாரப்பூர்வமான வழிமுறையாகும்; அறியாதோர்களுக்கு இதற்காக நீங்கள் சந்தா (பணம்) செலுத்த வேண்டி இருக்கும்!

மாறாக, குறுக்குவழிகளை பயன்படுத்த விரும்புபவர்கள் கீழ்வரும் 3 வழிகளில் ஏதேனும் ஒன்றை - கவனமாக - பயன்படுத்தலாம்!

02. ஆப்ஸ் வழியாக..

02. ஆப்ஸ் வழியாக..

மொபைல் போன்களில், யூட்யூப் விளம்பரங்களை தடுப்பதற்கான மிகவும் பயனுள்ள வழி - ஆட் பிளாக்கிங் ஆப்களை பயன்படுத்துவதே ஆகும்.

ஆண்ட்ராய்டு யூசர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு பல வகையான ஆட் பிளாக்கிங் ஆப்கள் அணுக கிடைக்கும். ஆனால் அவைகள் பொதுவாக சைட்-லோடட் ஆப்களாக மட்டுமே கிடைக்கும்.

மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆன நேரத்தில் வந்த போன் கால்களை கண்டுபிடிப்பது எப்படி?மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆன நேரத்தில் வந்த போன் கால்களை கண்டுபிடிப்பது எப்படி?

இன்னொரு முக்கியமான விஷயம்!

இன்னொரு முக்கியமான விஷயம்!

மறுகையில் உள்ள ஐஓஎஸ் யூசர்களுக்கு, டிவைஸை ஜெயில்பிரேக் செய்யாத வரை, சைட்லோடிங் செய்வது சாத்தியமே இல்லை.

அதே போல, ஆட்-பிளாக்கிங் என்பது கூகுளால் சரியாக அங்கீகரிக்கப்படாத ஒரு நடைமுறை ஆகும். எனவே அது தொடர்பான அதிகாரப்பூர்வமான ஆப்களை நீங்கள் பிளே ஸ்டோரில் காண முடியாது.

03. சாஃப்ட்வேர் வழியாக..

03. சாஃப்ட்வேர் வழியாக..

யூட்யூப் பிரீமியம் சேவை வழியாக நீங்கள் பணத்தை செலவழிக்க விரும்பவில்லை என்றால், மேலே குறிப்பிட்டபடி நீங்களொரு நல்ல ஆட் பிளாக்கர் ஆப்பை பயன்படுத்தலாம்.

அதே போல லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் யூசர்கள், தொல்லை தரும் விளம்பரங்களை முடக்க ஆட் பிளாக்கிங் சாஃப்ட்வேரை பயன்படுத்தலாம்.

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

04. மொபைல் போனில் உள்ள வெப் ப்ரவுஸர் வழியாக

04. மொபைல் போனில் உள்ள வெப் ப்ரவுஸர் வழியாக

யூட்யூப் விளம்பரங்களை தவிர்ப்பதற்கான இன்னொரு வழி - மொபைல் போனில் உள்ள வெப் ப்ரவுஸர் வழியாக யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பதே ஆகும்.

ஆப்பிளின் சஃபாரி-ஐ தவிர்த்து, பெரும்பாலான வெப் ப்ரவுஸர்களில் உள்ள ஆட்-பிளாக்கர்களால் விளம்பரங்களை தடுக்க முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to Watch YouTube Videos Without Ads

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X