Poco M4 Pro 5G இன்று இந்த விலையில் தான் அறிமுகமா.. அறிமுக நிகழ்வை லைவ் பார்ப்பது எப்படி?

|

போக்கோ நிறுவனத்தின் புதிய Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் இன்று அதன் உலகளாவிய நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக வரவிருக்கும் Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் பற்றிய பல விவரங்கள் இணையத்தில் வெளிப்படுத்தும் வகையில் விரிவாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் விலை மற்றும் இதன் சிறப்பம்ச தகவல்கள் என்ன என்பதுடன், இந்த அறிமுக நிகழ்வை எப்படி நேரலை பார்ப்பது என்று பார்க்கலாம்.

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமா?

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமா?

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் சாதனம் 50 மெகாபிக்சல் தீர்மானம் கொண்ட AI பிரதான கேமராவைக் கொண்டிருப்பதாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர்களுடன் வரும் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Poco M4 Pro 5G ஆனது 90Hz டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் மற்றும் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கலாம் என்று கசிவுகள் தெரிவிக்கின்றன.

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை லைவ் பார்ப்பது எப்படி?

போக்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான Poco குளோபல் டிவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட உறுதியான தகவலின்படி, புதிய Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு இன்று இரவு 8 GMT +8 மணிக்கு துவங்கும். இந்திய நேரத்தின் படி பார்க்கையில், இந்த அறிமுகம் நிகழ்வு மாலை 5.30pm மணிக்கு தொடங்கும். இது ஒரு மெய்நிகர் நிகழ்வு என்பதனால் YouTube மற்றும் பிற சமூக சேனல்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இந்த நிகழ்வை நீங்கள் லைவ் பார்க்கலாம்.

டிஜிட்டல் அவதாருடன் மெட்டாவர்ஸில் களமிறங்கும் ஆண்டவர் கமல் ஹாசன்: உலகநாயகனின் சொந்த 'உலகம்' தயார்.!டிஜிட்டல் அவதாருடன் மெட்டாவர்ஸில் களமிறங்கும் ஆண்டவர் கமல் ஹாசன்: உலகநாயகனின் சொந்த 'உலகம்' தயார்.!

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது Redmi Note 11 5G ஸ்மார்ட்போன் உடன் மிகவும் ஒத்ததாக இருக்கலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது உண்மை என்றால், ரெட்மி நோட் 11 5ஜியின் சீன விலை நிர்ணயம் போலவே, அதே வரம்பில் Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் விலையும் நிர்ணயம் செய்யப்படலாம். சீனாவில் Redmi Note 11 5G ஸ்மார்ட்போனின் விலை 1,199 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 14,000 விலையில் இது தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக Poco M4 Pro 5G இன் சிறப்பம்ச விபரங்களை Poco நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இந்த புதிய சாதனம் 6nm சிப்பை அடிப்படையாகக் கொண்ட "அல்ட்ரா-ஃபாஸ்ட்" சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது அதன் போர்டில் சக்தி வாய்ந்த டூயல் ஸ்பீக்கர்களை ஒருங்கிணைக்கிறது. கூடுதலாக, Poco M4 Pro 5G ஆனது 50 மெகாபிக்சல் பின்புற சென்சார் கொண்ட AI பிரதான கேமராவுடன் வரும். இந்த போன் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டாருடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் சிப்செட்

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் சிப்செட்

Poco M4 Pro ஸ்மார்ட்போன் ஆனது Redmi Note 11 தொடர் போனைப் போலவே 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.6' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் IPS LCD டிஸ்ப்ளேவுடன் வரலாம் என்று கசிவுகள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் இயங்க கூடியது. Poco M4 Pro ஆனது 4GB + 128GB, 6GB + 128GB மற்றும் 8GB + 128GB ஆகிய மூன்று ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவுகளுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, Poco M4 Pro 5G ஸ்மார்ட்டபோன் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா மற்றும் பேட்டரி அம்சத்தின் விபரம்

கேமரா மற்றும் பேட்டரி அம்சத்தின் விபரம்

இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. செவ்வக மாட்யூலில் LED ஃபிளாஷ் மற்றும் AI லோகோ உள்ளது. டிஸ்பிளேயில் வெட்டப்பட்ட பஞ்ச் ஹோல் மாட்யூலில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான கேமரா 16 மெகாபிக்சல் சென்சார் உடன் வழங்கப்பட்டுள்ளது. கசிவுகளின்படி, Poco M4 Pro ஸ்மார்ட்போன் ஆனது 5,000 mAh பேட்டரியை பேக் செய்து அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு இன்னும் சில மணி நேரமே உள்ளதால் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
How to Watch Live Poco M4 Pro 5G Launch Today Online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X