வாட்ஸ்அப் இல் டெலீட்டான மெசேஜ், போட்டோஸ், வீடியோஸ்,GIFகளை எப்படி மீண்டும் பார்ப்பது?

|

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அதன் பயனர்களுக்காக டெலீட் மெசேஜ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்திருந்தது. பயனர்கள் தவறாக அனுப்பிய மெசேஜ்களை இந்த அம்சத்தின் மூலம் உடனடியாக டெலீட் செய்துகொள்ள முடியும். அது டெக்ஸ்ட் மெசேஜ் ஆக இருந்தாலும் சரி, போட்டாவாக இருந்தாலும் சரி, வீடியோவாக இருந்தாலும் சரி அல்லது GIF மெசேஜ் ஆக இருந்தாலும் சரி மெசேஜ்ஜை அனுப்பிய நபர் டெலீட் செய்துகொள்ளலாம்.

டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை கண்டிப்பாக மீண்டும் பார்க்க வேண்டுமா?

டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை கண்டிப்பாக மீண்டும் பார்க்க வேண்டுமா?

இப்படி இந்த டெலீட் மெசேஜ் அம்சத்தைப் பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது மெசேஜ்களை வாட்ஸ்அப்பில் இருந்து முழுவதுமாக நீக்குகிறது. அதாவது இந்த மெசேஜ்களை நீக்கிய பின்னர் அதை நீங்கள் உட்பட யாரும் பார்க்க முடியாது. அப்படி அந்த நபர் என்ன செய்தியை அனுப்பி இருப்பார் என்று நம் மண்டைக்குள் ஒரு ஆர்வம் இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கும், அந்த செய்தி என்னவாக இருக்கும் என்று தெரிந்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் பயனர்களுக்குத் தான் இந்த பதிவு.

டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் பார்க்க ஒரு வழி இருக்கிறது

டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் பார்க்க ஒரு வழி இருக்கிறது

வாட்ஸ்அப்பில் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை, போட்டோக்களை மற்றும் வீடியோக்களை மீண்டும் காண ஒரு வழி இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால்? அதற்கு ஒரு வழி உள்ளது என்பது தான் பதில். ஆனால், வாட்ஸ்அப் இதை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனை நீங்கள் செய்திடக் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் சில மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டும்.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

இந்த இரண்டு ஆப்ஸ்களில் எதை பயன்படுத்தலாம்?

இந்த இரண்டு ஆப்ஸ்களில் எதை பயன்படுத்தலாம்?

டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை மீண்டும் பார்க்க நீங்கள் Notisave அல்லது WhatsRemoved + என்ற செயலி Google Play ஸ்டோரில் கிடைக்கிறது. Notisave மற்றும் WhatsRemoved + என்ற இரண்டு ஆப்ஸ்களும் உங்களுக்கு வாட்ஸ்அப் இல் இருந்து டெலீட் செய்யப்பட்ட மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF-களை மீண்டும் பார்க்க அனுமதி வழங்குகிறது.

முக்கியமாக 'இந்த' விஷயத்தை கவனிக்க தவறாதீர்கள்

முக்கியமாக 'இந்த' விஷயத்தை கவனிக்க தவறாதீர்கள்

WhatsRemoved + அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒரு முக்கியமாக விஷயத்தை நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை நீங்கள் மீண்டும் பார்க்கத் திட்டமிட்டால், அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கப்படாத வாட்ஸ்அப் அம்சங்களை அணுகுவதன் மூலம் சில எதிர்பாராத ஆபத்துகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

இந்த ஆபத்து பற்றியும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

இந்த ஆபத்து பற்றியும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

அறியப்படாத மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் போனிற்கு வரும் மெசேஜ்கள், வங்கி விபரங்கள் அடங்கிய நோட்டிபிகேஷன்கள் அனைத்திற்கும் நீங்கள் அனுமதி வழங்குகிறீர்கள்.மேலும், நீங்கள் பயன்படுத்தும் இந்த ஆப்ஸ்கள் உங்களின் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிக்கிறதா என்பது உருதியாக தெரிவிக்கப்படவில்லை என்பதனால், இதை உங்களின் சொந்த முயற்சியில் அப்பத்திற்கான வாய்ப்புகளை அறிந்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

Notisave app மூலம் எப்படி டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை மீண்டும் படிப்பது?

Notisave app மூலம் எப்படி டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை மீண்டும் படிப்பது?

உங்களின் தகவல் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. சரி, இப்போது எப்படி டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

Notisave app மூலம் எப்படி டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை மீண்டும் படிப்பது?

  • முதலில் Google Play ஸ்டோருக்கு சென்று Notisave என்று டைப் செய்து, அந்த ஆப்ஸை தேர்வு செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
  • பறந்து பறந்து தேங்காய் பறிக்கும் 'ஃப்ளை-கோகோபோட்' ட்ரோன்.. உண்மையில் இது விவசாயியின் உயிர் காவலன் தான்..பலே.!பறந்து பறந்து தேங்காய் பறிக்கும் 'ஃப்ளை-கோகோபோட்' ட்ரோன்.. உண்மையில் இது விவசாயியின் உயிர் காவலன் தான்..பலே.!

    'பில்டர் காண்டாக்ட்' அம்சம் என்ன செய்யும்?

    'பில்டர் காண்டாக்ட்' அம்சம் என்ன செய்யும்?

    • அடுத்தபடியாக Notisave ஓபன் செய்து, அதில் வாட்ஸ்அப் ஐகானைக் கிளிக் செய்து தேர்வு செய்யுங்கள்.
    • வெற்றிகரமாகத் தேர்வு செய்த பின்னர் வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட அனைத்து செய்திகளையும் நீங்கள் நோட்டிசேவ் போல்டரில் காணலாம்.
    • அதேபோல், குறிப்பிட்ட சில காண்டாக்ட்டை மட்டும் நீங்கள் காண Notisave உங்களை அனுமதிக்கிறது.
    • அந்த பிரத்தியேக அம்சத்தை நீங்கள் பயன்படுத்த 'பில்டர் காண்டாக்ட்' என்ற ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.
    • கூகிள் பிளே ஸ்டோரில் இன்னும் பல ஆப்ஸ்கள் இருக்க இது மட்டும் ஏன்?

      கூகிள் பிளே ஸ்டோரில் இன்னும் பல ஆப்ஸ்கள் இருக்க இது மட்டும் ஏன்?

      இதேபோல் தான் WhatsRemoved + ஆப்ஸும் செயல்படுகிறது. உங்கள் போனில் உள்ள அம்சங்களுக்கு ஏற்றார் போல் உங்களுக்குத் தேவைப்படும் சரியான ஆப்ஸை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள். கூகிள் பிளே ஸ்டோரில் இதே போன்ற பல ஆப்ஸ்களும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இருப்பினும், இந்த இரண்டு ஆப்ஸ்களும் சிறந்ததாகக் கருதப்படுவதனால் இதை மட்டும் உங்களுக்காகத் தெரியப்படுத்தியுள்ளோம்.

Best Mobiles in India

English summary
how to view deleted message and photos on WhatsApp using Notisave and WhatsRemoved + apps : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X