இ-ஆதார் கார்டில் டிஜிட்டல் கையொப்பம் வேலிடேட் செய்வது எப்படி?

|

இ-ஆதார் வசதியானது பல்வேறு வகையில் பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இ-ஆதார் மூலம் நிறுவனங்கள் புகைப்படம் மற்றும் அதில் உள்ள விவரங்களை வைத்து ஆன்லைனில் உரிமையாளர்களின் தகவலை சரி பார்க்கலாம்.

கவல்களை சேமித்து

குறிப்பாக அத்தியாவசிய தகவல்களை சேமித்து வைக்க அரசாங்கத்திற்கு ஆதார் கார்டு உதவுகிறது. பின்பு குடிமக்கள் எங்கு சென்றாலும் அவர்களின் ஆதாரத்தை பாக்கெட்டில் வைத்திருக்க ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது.

யர், பிறந்த தேதி,முகவரி,

இ-ஆதாரில் பெயர், பிறந்த தேதி,முகவரி, புகைப்படம், UIDAI இன் டிஜிட்டல் கையொப்பம் (digital signatures), 12 இலக்க ஆதார் எண் போன்ற விவரங்கள் இருக்கும். மேலும் இ-ஆதாரை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்ப்போம். அதாவது https://uidai.gov.in/ இணையதளத்தில் உங்களது ஆதார் எண்ணை பதிவிட வேண்டும், பின்பு ஓடிபி நீங்கள் பதிசெய்த மொபைல் நம்பருக்கு வரும். அந்த ஓடிபி-ஐ இந்த இணையதளத்தில் பதிவிட்டால் உங்களது இ-ஆதாரை உடனே டவுன்லோடு செய்ய முடியும்.

அட்டகாசமான போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!அட்டகாசமான போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

வேலிடேட் செய்ய சில வழிமுறைகள்

ஆனால் நீங்கள் டவுன்லோடு செய்த இ-ஆதாரில் டிஜிட்டல் கையொப்பம் (digital signatures) வேலிடேட் செய்யப்படாமல் இருக்கும். இதை வேலிடேட் செய்ய சில வழிமுறைகள் உள்ளது, அதைப்பற்றி இப்போது நாம் விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் நீங்கள் https://uidai.gov.in/ இணையதளத்தில் இ-ஆதார் டவுன்லோடு செய்ய வேண்டும். பின்பு நீங்கள் டவுன்லோடு செய்த இ-ஆதார் ஆனது பிடிஎஃப் முறையில் கிடைக்கும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் கூடிய வேலையில் சேர்ந்த இந்தியப் பெண்மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் கூடிய வேலையில் சேர்ந்த இந்தியப் பெண்

 வழிமுறை-2

வழிமுறை-2

நீங்கள் டவுன்லோடு செய்த இ-ஆதார் பிடிஎஃப்-ஐ உங்கள் கணினியில் உள்ள adobe pdf reader-இல் திறக்க வேண்டும்.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்பு நீங்கள் டவுன்லோடு செய்த இ-ஆதார் பிடிஎஃப்-இல் validity unknown என்று இருக்கும் அதை கிளிக் செய்தால்signature properties விருப்பம் வரும், அதை தேர்வு செய்து show signer's certificate என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ரூ.17,990 விலையில் அசத்தலான டச் ஸ்கிரீன் லேப்டாப் அறிமுகம்.! முழு விவரம்.!ரூ.17,990 விலையில் அசத்தலான டச் ஸ்கிரீன் லேப்டாப் அறிமுகம்.! முழு விவரம்.!

வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்து show signer's certificate விருப்பத்தை தேர்வு செய்தவுடன் அதில் உள்ள trust என்பதை கிளிக்
செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Add to Trusted Certificates என்பதை தேர்வு செய்து OK கொடுத்தால் போதும்.

 வழிமுறை-5

வழிமுறை-5

இப்போது நீங்கள் இ-ஆதாரில் digital signatures வேலிடேட் செய்யப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to verify digital signatures in e-Aadhaar in tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X