ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியுமா? இப்படி செய்தால் முடியும்.. சூப்பர் டிப்ஸ் இதோ..

|

ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியுமா? என்ற கேள்வியை யாரும் உங்களிடம் கேட்டால், 'முடியும்' என்று இனி உறுதியாகச் சொல்லுங்கள். அது எப்படிப்பா முடியும் என்று கேட்டால், இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு உங்களின் அறிவுரையை அவர்களுக்கும் வழங்குகள். உண்மையைச் சொல்லப் போனால், ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயன்முறையை வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் உருவாக்கி வருகிறது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புது மல்டி டிவைஸ் அம்சம்

வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புது மல்டி டிவைஸ் அம்சம்

வாட்ஸ்அப் சமீபத்தில் மல்டி டிவைஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு பயனர் தங்கள் முதன்மை ஸ்மார்ட்போனிலிருந்து சுயாதீனமாக நான்கு சாதனங்களில் அவர்களின் அதே வாட்ஸ்அப் கணக்கை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது. முக்கியமாக, ஸ்மார்ட்போனில் செயலில் உள்ள இணைய இணைப்பு இல்லாமல் பயனர்கள் தங்கள் டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட் அல்லது வேறு எந்த சாதனத்திலும் WhatsApp பயன்பாட்டை இனி பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் இணையத்தில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?

ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் இணையத்தில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?

இந்த அம்சம் வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் உதவியுடன், வாட்ஸ்அப் வெப் கிளையன்ட்கள், ஸ்மார்ட்போன் ஒரு இடைநிலை சாதனமாகச் செயல்படாமல் இணைய இணைப்பு மூலம் மெசேஜ்களை மற்ற சாதனங்களில் இருந்து அனுப்பலாம் மற்றும் பெறலாம். ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் இணையத்தில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த, கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கு முதலில் அந்த பயனர் பீட்டா திட்டத்தில் சேர வேண்டும்.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சத்துடன் அதிக பாதுகாப்பு

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சத்துடன் அதிக பாதுகாப்பு

இந்த அம்சம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு அம்சத்தை ஆதரிக்கிறது என்பதனால் வெவ்வேறு சாதனங்களில் நீங்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தினாலும், அது முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. எனவே இதன் மூலம் செய்யப்படும் அனைத்து சாட்களும் பாதுகாப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் இல்லாமல் கணினியில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்த செயல்முறையை ஒரு முறை மட்டும் செய்தால் போதுமா?

இந்த செயல்முறையை ஒரு முறை மட்டும் செய்தால் போதுமா?

ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த, பயனர்கள் வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் அல்லது போர்ட்டல் உட்பட, அவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பின் பதிப்போடு தங்கள் ஸ்மார்ட்போனை இணைக்க வேண்டும். இருப்பினும், இந்த புதிய அம்சத்துடன் உங்களின் செயல்முறையை ஒரு முறை மட்டும் செய்தால் போதுமானது.

முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனில் குடியேற திட்டமா? உண்மை என்ன?முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனில் குடியேற திட்டமா? உண்மை என்ன?

ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் WhatsApp வெப்பை அணுகும் செயல்முறை

ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் WhatsApp வெப்பை அணுகும் செயல்முறை

அதன் பிறகு, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் WhatsApp வெப்பை அணுக முடியும். சில சாதனங்களுக்கு, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் வழியாக நேரடியாக ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு சேவையையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது எப்படி இந்த அம்சத்தை சரியாக பயன்படுத்துவது என்று பார்க்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள செயல்முறையை பின்பற்றுங்கள்.

நீங்கள் பின்பற்ற வேண்டிய வாட்ஸ்அப் செயல்முறை 1

நீங்கள் பின்பற்ற வேண்டிய வாட்ஸ்அப் செயல்முறை 1

 • உங்களின் முதன்மை ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
 • முகப்புப் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவிற்குச் செல்லவும்.
 • Linked Devices விருப்பத்தை மட்டும் கிளிக் செய்யவும்.
 • Multi-device பீட்டா சாதன பட்டியல் பற்றிய தகவல்களை WhatsApp காண்பிக்கும்.
 • பீட்டா திட்டத்தில் சேர்ந்து, continue என்பதை கிளிக் செய்யவும்.
 • தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..

  நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறை 2

  நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறை 2

  • இப்போது உங்கள் லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்டில் வாட்ஸ்அப்பை திறக்கவும்.
  • ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்கேனர் மூலம் சாதனத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
  • இரண்டு சாதனங்களும் இப்போது இணைக்கப்பட்டு, WhatsApp Web மெசேஜ்கள் ஒத்திசைக்கும்
  • செயல்முறையை வாட்ஸ்அப் செய்து முடிக்கும்.
  • வாட்ஸ்அப் உடன் இணைக்கப்பட்டதும், பயனர் வாட்ஸ்அப் வெப் வழியாக மெசேஜ்களை அனுப்பவும் பெறவும் முடியும்.
  • எத்தனை சாதனங்களை இந்த அம்சத்தின் கீழ் சேர்க்கலாம்?

   எத்தனை சாதனங்களை இந்த அம்சத்தின் கீழ் சேர்க்கலாம்?

   முன்பு குறிப்பிட்டபடி, ஒரு பயனர் 4 சாதனங்களைச் சேர்க்கலாம், அவை சுயாதீனமாகப் பயன்படுத்தப்படலாம். பயனர் ஒரு புதிய சாதனத்தைச் சேர்க்கும்போது, ​​முதன்மை மொபைல் சாதனத்தில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் மற்றும் மீடியாவை ஒத்திசைக்க WhatsApp வெப்பில் சிறிது நேரம் எடுக்கலாம் என்பதனால் பொறுமையாக இருப்பது நல்லது. இருப்பினும், சாதனம் இணைக்கப்பட்டவுடன், அது செயலில் உள்ள இணைய இணைப்பில் செய்திகளை முழுமையாக அனுப்பும் மற்றும் பெறும். இந்த மல்டி டிவைஸ் அம்சம் இன்னும் ஆரம்ப வளர்ச்சி அல்லது பீட்டா கட்டத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How To Use WhatsApp Web Without Connecting Via smartphone With Easy Steps : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X