கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வொர்டு மென்பொருளுக்கும் இது மாற்றாக இருக்கிறது.
ஆன்லைனில் வொர்டு பிராசஸிங் செய்ய பிரபல சேவையாக கூகுள் நிறுவனத்தின் டாக்ஸ் சேவை இருக்கிறது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வொர்டு மென்பொருளுக்கும் இது மாற்றாக இருக்கிறது. கூகுள் டாக்ஸ் சேவையில் பல்வேறு அடிப்படை வசதிகள், ஷார்ட்கட்கள் வழங்கப்படுகின்றன. இவை வொர்டு பிராசஸிங் பணியை சுலபமாக்குகிறது.

இவை தவிர டாக்ஸ் சேவையில் கூகுள் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை இயக்குவதற்கான வசதியையும் வழங்குகிறது. இதை கொண்டு கீபோர்டு உதவியின்றி டைப்பிங் செய்ய முடியும். இந்த அம்சம் தற்சமயம் ஆங்கிலம், அஃப்ரீகன்ஸ், நேபாளி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

அன்றாட தேவைகளில் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்து பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
முன்கூட்டியே செய்ய வேண்டியவை:
- சாதனத்தின் மைக்ரோபோன் சீராக வேலை செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
- சீரான இணைய இணைப்பு.
- கணினியில் கூகுள் குரோம் பிரவுசர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1 - குரோம் பிரவுசரில் கூகுள் டாக்ஸ் திறக்க வேண்டும்
2 - இனி + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். ஏற்கனவே திறந்திருக்கும் டாக்யூமென்ட்டையும் எடிட் செய்யலாம்
3 - இனி டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து வாய்ஸ் டைப்பிங் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
4 - இவ்வாறு செய்ததும் திரையின் இடதுபுறம் மைக்ரோபோன் ஆப்ஷன் தெரியும். இதனை பயனர்கள் எங்கு வேண்டுமானாலும் டிராக் செய்து கொள்ள முடியும்
5 - இனி, மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்து அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்
6 - மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்து பேச துவங்கலாம்

குறிப்பு: மொழியை மாற்ற விரும்பினால், மைக்ரோபோன் ஐகான அருகில் கீழ்புற அம்புகுறியை க்ளிக் செய்து மொழியை தேர்வு செய்ய வேண்டும். சிறப்பான குரல் அங்கீகாரத்திற்கு கூடுதலாக மைக்ரோபோன் பயன்படுத்தலாம். இந்த அம்சத்தால் சிறப்பாக பயன்பெற அமைதியான இடத்தில் அதனை முயற்சிக்கலாம்.


Click it and Unblock the Notifications