Home
How to

ATM கார்ட் தேவையில்லை.. UPI ஆப்ஸ் மூலம் ATM இல் இருந்து பணம் எடுப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க..

ஏடிஎம் கார்டு (ATM card) அல்லது டெபிட் கார்டு (Debit Card) இல்லாமல் இந்தியாவில் உள்ள மக்கள் இப்போது ஏடிஎம் இயந்திரங்களில் (ATM machine) இருந்து பணத்தை (Cash) எடுத்து வருகின்றனர். இந்த புதிய கார்டுலெஸ் கேஷ் வித்ட்ராவல் (ICCW) செயல்முறையை மக்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் உங்களுக்கு கற்றுத்தரப் போகிறோம். 2 நிமிடம் இந்த பதிவை முழுமையாக படித்து முடித்துவிட்டால், இனி நீங்கள் ATM கார்டு உதவியே இல்லாமல் ATM மையங்களில் இருந்து எளிமையாக இனி பணம் எடுத்துக்கொள்ள முடியும்.

இந்தியாவில் உள்ள மக்கள் இப்போது அதிகமாக கூகிள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற பல யுபிஐ (UPI) ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். யுபிஐ ஆப்ஸை பயன்படுத்தும் மக்கள் இனி அதே யுபிஐ ஆப்ஸை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும் புதிய UPI-ATM சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இண்டர்ஆப்பரபிள் கார்டுலெஸ் கேஷ் வித்ட்ராவல் சேவை (Interoperable Cardless Cash Withdrawal) என்றும் அழைக்கப்படுகிறது.

ATM கார்ட் தேவையில்லை.. UPI மூலம் ATM இல் இருந்து பணம் எடுப்பது எப்படி

UPI ஆப்ஸ் மூலம் ATM இல் இருந்து பணம் எடுப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்:

இனி இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் UPI சேவையின் மூலம் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்தச் சேவை பல்வேறு பங்குபெறும் வங்கிகளின் ஏடிஎம்களில் தற்போது பயன்படுத்த கிடைக்கிறது. இந்த வகையான கார்டுலெஸ் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு, உங்களிடம் யுபிஐ ஆப்ஸுடன் (UPI Apps) இயங்க கூடிய ஒரு ஸ்மார்ட்போன் (Smartphone) மட்டும் இருந்தால் போதுமானது மக்களே.

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) UPI மூலம் இயக்கப்பட்ட கேஷ் வித்ட்ராவல் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது பயனர்கள் டெபிட் கார்டுகளை எடுத்துச் செல்லாமல் பணத்தை எடுப்பதற்கு வழிவகுத்துள்ளது. கார்டு வைத்து பணம் எடுத்து போன்ற அதே முறையை இந்த யுபிஐ முறையும் பின்பற்றுகிறது. ஆனால், QR கோட் ஸ்கேன் மற்றும் யுபிஐ PIN நம்பர் போன்ற அங்கீகாரங்களுடன் இது இயங்குகிறது.

ஏடிஎம் இல் இருந்து பணம் எடுப்பதற்கு UPI ஆப்ஸை எவ்வாறு பயன்படுத்துவது?
- ஏடிஎம் டிஸ்பிளேவில் 'UPI cash withdrawal' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேவையான தொகையை உள்ளிடவும்.
- முக்கிய குறிப்பு இந்த UPI முறையை பயன்படுத்தி ரூ.10,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.

- உங்கள் உள்ளீட்டு தொகை ரூ. 10,000-திற்குள் இருப்பது கவனிக்கத்தக்கது.
- ATM திரையில் QR கோட் காண்பிக்கப்படும்.
- அதை உங்கள் போனில் உள்ள UPI ஆப்ஸ் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
- நீங்கள் பயன்படுத்தும் UPI ஆப்ஸின் PIN நம்பரை உள்ளிடவும்.
- உங்கள் பணம் தானாக ATM இயந்திரத்தில் இருந்து எடுத்துக்கொள்ள வெளியே அனுப்பப்படும்.

முக்கிய குறிப்பு: UPI - ATM பரிவர்த்தனையைச் செயல்படுத்த சுமார் 30 வினாடிகள் ஆகலாம். எனவே சிறிது தாமதம் ஏற்பட்டால் பீதி அடைய வேண்டாம். காத்திருந்து, டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டு உதவியில்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய சேவையை பயன்படுத்துவதால் என்ன நன்மைகளை மக்கள் அனுபவிக்க முடியும்? இந்த புதிய சேவை, கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் குறிப்பிடத்தக்க வசதியை வழங்குகிறது.

ATM மற்றும் டெபிட் கார்டு போன்ற பிஸிக்கல் அட்டைகளின் தேவையை நீக்குகிறது. UPI இயங்குதளத்தை ஆதரிக்கும் பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் இப்போது இந்த சேவையை நீங்கள் அணுகலாம். கூடுதலாக, ஒரு புதிய கணக்கைத் திறந்த பிறகும் உங்கள் டெபிட் கார்டை நீங்கள் பெறவில்லை என்றால், இந்தச் சேவையைப் பயன்படுத்தி நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய சேவை பற்றி அனைவரும் தெரிந்துவைத்துக்கொள்வது சிறப்பானது.

கையில் இனி கார்டு இல்லை என்றாலும், எளிமையாக ஸ்மார்ட்போனில் உள்ள UPI ஆப்ஸ்களை பயன்படுத்தி, மக்கள் அவர்களின் அவசரத் தேவைக்கு பணத்தை ATM இயந்திரங்களில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How To Use UPI Apps To Withdrawal Cash From ATM Machines
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X