Home
How to

எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த Flipkart.. பழைய போனை கொடுத்தால் புது போன்!

உங்கள் பழைய ஸ்மார்ட்போனை விற்று புது ஸ்மார்ட்போனோ அல்லது வேறு ஒரு பொருளோ வாங்குவதற்கு சரியான நேரம் இது. காரணம் பிளிப்கார்ட் நிறுவனம் Sell Back Programஐ அறிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை இதன்மூலம் மாற்றிக் கொள்ளலாம். பிளிப்கார்ட் இந்த தொகையை உங்கள் பிளிப்கார்ட் வாலட்டில் வரவுவைக்கும்.

அதிவேகமாக நடக்கும் செயல்முறைகள்..

அதிவேகமாக நடக்கும் செயல்முறைகள்..

பிளிப்கார்ட் வரவு வைக்கும் தொகையின் மூலம் உங்களுக்கு விருப்பமான வேறு ஸ்மார்ட்போன் அல்லது வேறு எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இந்த செயல்முறைகள் அனைத்து அதிவேகமாக நடக்கக்கூடியது.

பழைய போன்களை விற்க சரியான நேரம்..

பழைய போன்களை விற்க சரியான நேரம்..

Flipkart இந்தியாவில் Big Billion Days விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையானது செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் பண்டிகை காலத்தை முன்னிட்டு 'Sell-Back Program'ஐ அறிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களது பழைய போன்களை விற்க இது சிறந்த வாய்ப்பாகும்.

புதிய Sell Back திட்டம்

புதிய Sell Back திட்டம்

Flipkart இன் புதிய Sell Back திட்டத்தில் உங்களது பழைய மற்றும் பயன்படுத்திய ஸ்மார்ட்போன்களை மாற்றி அதன் மதிப்புக்கேற்ற மற்றொரு பொருளை வாங்கிக் கொள்ளலாம்.

மறு வர்த்தக நிறுவனமான யாந்த்ராவை பிளிப்கார்ட் சமீபத்தில் கையகப்படுத்தியது. இதையடுத்து பிளிப்கார்ட் இந்த பிரிவில் அதை வலுப்படுத்தி வருகிறது.

மின்-கழிவு பிரச்சனைகளை சமாளிக்க நடவடிக்கை..

மின்-கழிவு பிரச்சனைகளை சமாளிக்க நடவடிக்கை..

ஐடிசி 2021இல் வெளியிட்ட அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து அதிகரித்து வரும் மின்-கழிவு பிரச்சனைகளை சமாளிக்க நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டு இருப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயனர்கள் எந்தவித சிரமும் இன்றி தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்கவே Sell Back திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Flipkart Sell Back அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

Flipkart Sell Back அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

Flipkart செயலி மூலம் இந்த அம்சத்தை எளிதாக கையாளலாம்.

பயன்பாட்டுக்குள் நுழைந்து 'செல்-பேக்' என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

இப்போது விற்க என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

பிராண்ட் பெயர், மாடல், IMEI எண் உள்ளிட்ட மொபைல் போன்கள் குறித்த அனைத்து தகவல்களையும் உள்ளிட வேண்டும்.

வீடு தேடி வரும் பிக்-அப் நபர்..

வீடு தேடி வரும் பிக்-அப் நபர்..

அனைத்தும் பூர்த்தி செய்தவுடன் நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் மொபைலின் விலை விவரம் காட்டப்படும்.

நிறுவனம் காட்டும் விலை உங்களுக்கு ஏற்றதாக நம்பினால் அதை உறுதி செய்து கொள்ளவும். அதன்பின் பிக்-அப் கட்டணமாக ரூ.1 செலுத்த வேண்டும்.

அனைத்தும் ஓகே செய்துவிட்டால் அடுத்த 48 மணிநேரத்துக்குள் பிக்-அப் நபர் உங்கள் வீடு தேடி வந்து மொபைலை வாங்கிக் கொள்வார்.

24 மணிநேரத்துக்குள் வரவு..

24 மணிநேரத்துக்குள் வரவு..

இதில் ஒரு நிபந்தனை இருக்கிறது. பிக்-அப் செய்யும் நபர் நேரடியாக வீட்டுக்கு வந்ததும் நீங்கள் விற்க விரும்பும் மொபைலை சோதனை செய்து பார்ப்பார். தளத்தில் குறிப்பிட்டுள்ள விலைக்கு தகுதியாக உங்கள் மொபைல் இருந்தால் ஒப்புகை அளிப்பார்.

அப்படி ஒப்புகை அளிக்கும் பட்சத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்குள் உங்கள் பிளிப்கார்ட் கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட தொகை கிஃப்ட் வவுச்சராக வரவு வைக்கப்படும். இதன்மூலம் நீங்கள் புது போனையோ அல்லது வேறு எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கலாம்.

உங்கள் பகுதியில் இந்த சேவை உள்ளதா?

உங்கள் பகுதியில் இந்த சேவை உள்ளதா?

நீங்கள் இருக்கும் PIN-கோடுகளில் இந்த சேவை கிடைக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்தியா முழுவதும் 1,700 PIN-கோடுகளில் பிளிப்கார்ட்டின் இந்த சேவை கிடைக்கிறது.

பிக்-அப் நபர் நீங்கள் பரிமாற்றம் செய்யும் ஸ்மார்ட்போனின் தரம் சரியில்லை என்றால் நிர்ணய விலை வழங்கப்படமாட்டாது. தொடர்ந்து பிளிப்கார்ட் குறிப்பிடும் விலை வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லை என்றால் ஆர்டரை ரத்து செய்து கொள்ளலாம். நீங்கள் செலுத்திய பிக்-அப் கட்டணம் ரூ.1 வாடிக்கையாளர்கள் கணக்குக்கு திரும்ப வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
How to use Sell back Feature in Flipkart? Know the Value and Sell Your Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X