Home
How to

பேடிஎம் இன்பாக்ஸ் கொண்டு சாட் செய்து பண பரிமாற்றம் செய்வது எப்படி?

By Gizbot Bureau

பேடிஎம் பயனர்கள் இனி ஒரே தளத்தில் சாட் செய்து கொண்டு பண பரிமாற்றம் செய்ய முடியும். டிஜிட்டல் வாலெட் நிறுவனம் இன்பாக்ஸ் எனும் புதிய ஆப்ஷனை பேடிஎம் சேவையில் சேர்த்திருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் பணம் அனுப்புவது, குறுந்துகவல் அனுப்புவது, ஆடியோ, வீடியோ மெசேஜ் மற்றும் லொகேஷன் ஷேர் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

பேடிஎம் இன்பாக்ஸ் கொண்டு சாட் செய்து பண பரிமாற்றம் செய்வது எப்படி?

பேடிஎம் இன்பாக்ஸ் ஆப்ஷனில் டெலீட் ஃபார் எவ்ரி ஒன் (Delete for Everyone) பட்டன் சேர்க்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் உள்ளதை போன்றே பேடிஎம் இன்பாக்ஸ் சேவையிலும் பயனர்கள் அனுப்பிய மெசேஜ்களை இந்த ஆப்ஷன் மூலம் அழிக்க முடியும். எனினும் மெசேஜை அழிக்க எவ்வித கால அளவும் நிர்ணயிக்கவில்லை.

வாட்ஸ்அப் செயலியில் உள்ள டெலீட் ஃபார் எவ்ரி ஒன் அம்சம், குறுந்தகவல் அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் அதனை அழிக்க வழி செய்கிறது. பேடிஎம் இன்பாக்ஸ் கொண்டு நீங்கள் அனுப்பிய மெசேஜை எப்போது வேண்டுமானாலும் அழிக்க முடியும். இந்த ஆப்ஷனை பயன்படுத்த குறுந்தகவலை அழுத்தி பிடித்து, டெலீட் ஃபார் ஆல் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு விரைவில் வழங்கப்படுகிறது.

பேடிஎம் இன்பாக்ஸ் முக்கிய அம்சங்கள்:

- முழுமையாய் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது.

- சாட் செய்து கொண்டு பண பரிமாற்றம் செய்ய முடியும்.

- டெலீட் ஃபார் எவ்ரி ஒன் வசதியுடன் கிடைக்கிறது.

- புகைப்படம், வீடியோ மற்றும் லைவ் லொகேஷனை ஷேர் செய்யலாம்.

- இன்பாக்ஸ் மெசன்ஜரில் நோட்டிஃபிகேஷன், ஆர்டர் மற்றும் கேம்களும் வழங்கப்படுகிறது.

பேடிஎம் இன்பாக்ஸ் பயன்படுத்துவது எப்படி?

- ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பிளே ஸ்டோர் சென்று பேடிஎம் செயலியை அப்டேட் செய்யவும்.

- இனி திரையின் கீழ் வலதுபுறம் காணப்படும் இன்பாக்ஸ் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு ஸ்மார்ட்போனின் கான்டாக்ட் புக்-இல் இருக்கும் அனைத்து கான்டாக்ட்களையும் பேடிஎம் மூலம் பார்க்க முடியும்.

- இனி நியூ மெசேஜ் ஐகானை க்ளிக் செய்து, நீங்கள் சாட் செய்ய விரும்பும் கான்டாக்ட்-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

- க்ரியேட் க்ரூப் ஆப்ஷனை க்ளிக் செய்து புதிய சாட் க்ரூப்-ஐ உருவாக்க முடியும்.

பேடிஎம் இன்பாக்ஸ் கொண்டு பணம் அனுப்புவது மற்றும் பெற கோரிக்கை விடுப்பது எப்படி?

- முதலில் சென்ட் மனி / ரிக்ஸ்ட் மனி (Send Money/Request Money) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி நீங்கள் அனுப்பவோ அல்லது பெற கோரிக்கை விடுக்கும் தொகையை பதிவிட்டு சென்ட் மனி அல்லது ரிக்வஸட் மனி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- பேடிஎம் வாலெட் அல்லது பீம் யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் ஆப்ஷன்களின் மூலம் பணத்தை சேர்க்க முடியும்.

- பண பரிமாற்ற விவரங்களை அறிந்து கொள்ள இன்பாக்ஸ் அம்சத்தில் உள்ள பாஸ்புக் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to use paytm inbox to chat and transfer money
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X