Just In
- 5 hrs ago
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- 5 hrs ago
ஒரு நாள் மட்டும் காத்திருங்கள் போதும்! ரூ.10,000க்குள் அறிமுகமாகும் பக்கா ஸ்மார்ட்போன்!
- 5 hrs ago
பிப்ரவரி 7-வரை எந்த ஸ்மார்ட் டிவியும் வாங்காதீங்க: ஏனெனில் வருகிறது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.!
- 5 hrs ago
அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!
Don't Miss
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- News
அம்மா சிமெண்ட் வினியோகத்தில் முறைகேடு.. தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Movies
உடல்நிலை தேறியுள்ளது.. கைவிரலை உயர்த்திக் காட்டி ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன விஜய் ஆண்டனி!
- Finance
அமெரிக்காவுக்குப் போட்டியாக இந்திய நிறுவனங்கள்.. ஊழியர்கள் தான் பாவம்..!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
பிளைட் மோடில் கூட இன்டர்நெட் யூஸ் செய்யலாமா? எப்படி? இந்த ரகசியம் பலருக்கும் தெரியாது.!
இந்த பதிவின் தலைப்பைப் படித்ததும் பெரும்பாலானோருக்கு நிச்சயமாக ஒரு சந்தேகம் எழுந்திருக்கும். "அது எப்படி பிளைட் மோட் (Flight mode) ஆன் செய்தால், இன்டர்நெட் (Internet) வேலை செய்யும்? வாய்ப்பில்லையே.!" என்று கட்டாயமாக நீங்கள் எல்லோரும் யோசித்திருப்பீர்கள் தானே. இப்படி நினைத்திருந்தால், ஒரு சீக்ரெட் ட்ரிக் உங்களுக்குத் தெரியவில்லை என்று அர்த்தம்.

பிளாட் மோட் பற்றி பலருக்கும் தெரியாத சீக்ரெட் ட்ரிக்.!
உண்மையைச் சொல்லப் போனால், இங்கு நாங்கள் கூறப்போகும் சீக்ரெட் ட்ரிக்கை பின்பற்றினால், இனி நீங்களும் கூட பிளைட் மோடில் டேட்டா பயன்படுத்தலாம். பொதுவாக, நம்முடைய ஸ்மார்ட்போனில் பிளைட் மோட் ஆக்டிவேட் செய்யப்பட்டால், மொபைல் நெட்வொர்க் மற்றும் அதனுடன் தொடர்புடைய இன்டர்நெட், அழைப்பு, SMS போன்ற சேவைகள் துண்டிக்கப்படும்.

பிளைட் மோடில் இன்டர்நெட் பயன்படுத்தலாமா?
இது எல்லோருக்கும் அறிந்த விஷயமே.. ஆனால், நாங்கள் சொல்லப் போகும் முறையை நீங்கள் பின்பற்றினால், இனி எந்த தடையுமின்றி, தாராளமாக பிளைட் மோடில் கூட உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் பயன்படுத்தலாம் என்பதே ரகசியமான உண்மை. இந்த ரகசியம் இங்குப் பலருக்கும் தெரியாது.

இந்த ரகசியம் உங்களுக்கும் தெரிய வேண்டுமா?
சரி, வாருங்கள் உங்களுக்கும் அந்த ரகசியத்தைச் சொல்லித் தருகிறோம். உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளைட் மோட் அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்தாலும் கூட, உங்களுடைய போனில் இன்டர்நெட் சேவை இயங்க வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி, சில செட்டிங் மாற்றத்தை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும்.

பிளைட் மோடில் இன்டர்நெட் ஆக்டிவேட் செய்ய இதை செய்யுங்கள்.!
அதை எப்படிச் செய்வதென்று இப்போது பார்க்கலாம். முதலில் உங்கள் போனில் டேட்டா மோட் ஆன் (Data Mode On) செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் போனில் பிளைட் மோட் ஆன் (Flight mode on) செய்துகொள்ளுங்கள். அடுத்தபடியாக, உங்கள் போனின் டயல்பேட் (dialpad) ஓபன் செய்துகொள்ளுங்கள். அதில் *#*#4636#*#* என்று டைப் செய்து கொள்ளுங்கள்.

டூயல் சிம் பயனரா நீங்கள்? அப்போ இந்த ஆப்ஷனை கிளிக் பண்ணனும்.!
இப்பொழுது உங்களுக்குப் புதிதாக ஒரு டேப் காண்பிக்கப்படும். இந்த பக்கத்தில் மூன்று விருப்பங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் இருந்து Phone Information 1 என்ற ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் டூயல் சிம் பயனர் என்றால், உங்களுக்கு Phone Information 2 என்ற விருப்பமும் காண்பிக்கப்படும்.

உங்கள் சிம் கார்டிற்கு ஏற்ற விருப்பம் இது தான்.!
நீங்கள் எந்த சிம் கார்டு (SIM card) இல் டேட்டா பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அந்த சிம் கார்டுக்கு ஏற்ற விற்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் சிம் கார்டு 1 இல் டேட்டா ஆன் செய்ய விரும்பினால் Phone Information 1 என்பதை கிளிக் செய்ய வேண்டும். சிம் 2 உங்கள் விருப்பம் என்றால், Phone Information 2 கிளிக் செய்யுங்கள்.

பிளைட் மோடில் இன்டர்நெட் சேவையை ஆன் செய்ய இதை கட்டாயம் கிளிக் செய்ய வேண்டும்.!
இப்போது புதிதாக மற்றொரு பக்கம் திறக்கப்படும், அதில் ஒரு கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள LTE/TD-SCDMA/UMTS என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த பிறகு, பின் தோன்றும் விருப்பங்களில் இருந்து ஸ்க்ரோல் செய்து LTE/TD-SCDMA/UMTS என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

Mobile Radio Power ஆப்ஷனை கிளிக் செய்ய மறக்காதீங்க.!
இப்போது தான் மிகவும் முக்கியமான விஷயத்தை செய்யப் போகிறோம், உங்களுக்குக் காண்பிக்கப்படும் ஆப்ஷன்களில் இருந்து Mobile Radio Power என்ற விருப்பத்தைத் தேடிப்பிடியுங்கள். இப்போது Mobile Radio Power விருப்பத்திற்கு அருகில் இருக்கும் On/Off டாக்கில் பட்டனை கிளிக் செய்து On விருப்பத்திற்கு மாற்றவும்.

இனி ஜாலியா Flight mode-ல் இன்டர்நெட் யூஸ் பண்ணலாம்
அவ்வளவு தான், எல்லாமே முடிந்தது. இப்போது உங்கள் போனில் பிளைட் மோட் ஆன் செய்யப்பட்டிருந்தாலும் கூட, இனி இன்டர்நெட் சேவை மாட்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனில் பிளைட் மோட் ஆக்டிவேட்டில் இருந்தால் கூட டேட்டா அம்சத்தைப் பயன்படுத்தலாம். முக்கிய குறிப்பு இந்த அம்சத்தில் உங்களுக்கு எந்த அழைப்புகளும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470